18) மாணவர்களது கட்டுரைகள் (2021/10/21)

18) மாணவர்களது கட்டுரைகள் (2021/10/21)

 கட்டுரைகள்-03


ஏனைய அனைத்து கட்டுரைகளையும் பார்வையிட👇👇

                         Click



கட்டுரை-01




இணையவழிக் கற்கையும் பாடசாலைச் சமூகமும்


 இன்றைய உலகு முகங்கொடுக்கும் முக்கியமான, பாரிய பிரச்சினையாக கொரோனா எனும் வைரஸின் தாக்கம் நிலவுகின்றது என்பது நாமனைவரும் அறிந்ததே. இதன் தாக்கத்தின் மூலம் தனிமனித வாழ்க்கைமுறை தொடக்கம் உலகலாவிய பொருளிதாரம் வரை இன்று சிலபடிகள் வீழ்ச்சிகண்டு தான் இருக்கின்றன.இவ்வீழ்ச்சியை சவாலாகக் கொண்டு முன்னேறும் கட்டாயத்திலுள்ள சிலகுழுக்களில் மாணவச் சமுதாயம் குறிப்பிடத்தக்கது.


நிகழ்காலத்தில் (குறிப்பிட்ட சில நாடுகளைத் தவிர) பெரும்பாலான நாடுகளில் பாடசாலைக் கற்கைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இணையவழியாக மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொருவரது திறமை, சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொருத்து அதன்மூலம் சௌகரிய, அசௌகரியங்களுக்கு உட்படும் நிலை ஒருபுறமிருக்க அதையும் தாண்டியதோர் குறைபாடும் இணையவழிக் கற்கை முறையில் காணப்படுகின்றது.


இணையவழிக் கற்கையானது, ஒரு பாடசாலைச் சூழல் கொடுக்க வேண்டிய கல்வியறிவை நவீனமயமாக வழங்கிக்கொண்டு இருக்கிறது.ஆனால் பாடசாலையானது மாணவர் சமூகத்திற்கு கல்வியறிவை மட்டுமே வழங்குகின்றது எனும் கருத்தானது முரண்பாட்டிற்கு உரியதாகும்.


 ஒரு மனிதனிற்கான பண்பாட்டு ஒழுக்கங்களைக் கற்றுத்தருவதில் வழிகாட்டியாக இருப்பது பாடசாலை.மேலும், சமூகத்திற்கு சவால்களைத் தாண்டி முகங்கொடுக்கும் விதத்தை, வெற்றி, தோல்வியை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனோபாவத்தை, தலைமைத்துவத்தை மதிக்கும் பண்பினை, சிறந்ததோர் நட்பிற்கான அடித்தளத்தை ஓர் பாடசாலை, மாணவர்களுக்கு வழங்குவது போல் இன்றைய எந்தவொரு இணையவழிக் கற்கையும் வழங்க முடியாது. அப்படி வழங்கக் கூடியதொரு சந்தர்ப்பம் அமைந்திருந்தால் நவீன யுகத்தின் மத்திய காலத்திலேயே பாடசாலை எனும் சமூகசூழல் மறைந்திருக்கும்.


ஏட்டுக்கல்வியை மாத்திரம் நோக்காகக் கொண்டு இலகுவாகவும் நவீன முறைகளின் ஊடாகவும் நடாத்தப்படும் இணையவழிக் கற்கைகளை விட, சிறந்தொரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் பொருட்டு சிறந்ததோர் மாணவர் சமுதாயத்தினை உருவாக்கும் பாடசாலைகள் உயர்ந்து காணப்படுவதனால் தான் அன்றைய காலம் தொட்டு இன்றைய டிஜிடல் யுகத்திலும் கூட அவை சமூகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.



ஷஹானி முஸவ்விர்

நாபாவள, கேகாலை



கட்டுரை-02




✨️•••Online கல்வியும் இன்றைய மாணவர்களும்•••


கல்வி கரையில

கற்பவர் நாள் சில

மெல்ல நினைக்கின் 

பிணி பல - 

தெள்ளிதின்

ஆராய்ந்தமவுடைய 

கற்பவே நீரொழியப் 

பாலூண் குருகின் 

தெரிந்து - 


என்று கல்வியின் பெருமையை அழகாக எடுத்துக் கூறினார் நாலடியார் அவர்கள் . தற்காலத்தில் கல்வியானது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது. கல்வி கற்கும் முறைமையை வைத்து கல்வியை இரண்டாக வகுத்துக் கொள்ள முடியும் . அதிலொன்று தான் online கல்வி . Online கல்வி என்பது , மாணவர்கள் இணைய வழியாக கற்பதே ஆகும் . தற்போதுள்ள கால கட்டத்தில் , வைரசு பரவல் காரணமாக online கல்வி முறையே உலகெங்கும் பரவிக் காணப் படுகின்றது. 


முழு உலகமும் கிராமமாக மாறி வருகின்ற இந்த கால கட்டத்தில் நம் மாணவ சமுதாயத்துக்கு online கல்வி அவசியமாகின்றது. எந்த ஒரு விடயமும் சிலருக்கு சாதகமாகவும் இன்னும் பலருக்கு பாதகமாகவும் அமையும் அது போலவே தான் இந்த online கல்வியும் . சில மாணவர்கள் online கல்வியில் பல சவால்களை எதிர்கொள்வர் . இன்னும் சில மாணவர்கள் வெற்றிகரமாக online கல்வியை எதிர்கொள்வர் . 


Online கல்வியில் மாணவர்களுக்கு உள்ள சாதகங்களை எடுத்து நோக்குவோம் . இதில் முக்கியமானதொரு நன்மை தான் நேரம் மீதப்படும் என்பது . உதாரணமாக போக்குவரத்துக்காய் நேரம் ஒதுக்க தேவையில்லை . ஏனெனில் சிலர் போக்குவரத்துக்காய் அதிக நேரத்தை செலவிடுகின்றனர் . எங்கிருந்தாலும் online கல்வியை கற்றுக்கொள்ள முடியும் என்பது மற்றொரு நன்மையாக கருதலாம் . அது மட்டுமன்றி , செலவுகளும் குறைவாகவே காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும் . சில மாணவச் சிறார்களுக்கு பாடசாலைக்கு சென்று கற்பதென்பது தயக்கமாக இருப்பதை காண முடியும் . இவ்வாறான உளவியல் பிரச்சினைகளுக்கு கூட online கல்வியானது மாணவர்களுக்கு சாதகமாக அமைகின்றது. அத்தோடு online கல்வியை மாணவர்களுக்கு பதிவிறக்கம் செய்து மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கின்றது. இவ்வாறான சாதகமான விடயங்களை online கல்வி பெற்றுத் தருகின்றது. 


எவ்வாறாயினும் online கல்வி மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் பாதகமான விடயங்கள் எண்ணிலடங்கா. சில மாணவர்களுக்கு online கல்வி கற்க வசதிகள் இல்லாமலிருக்கும் . பொதுவாக மாணவர்களுக்கு online கல்வியூடாக ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு . உதாரணமாக கண்கள் பாதிப்படையக் கூடும் இன்னும் சில மாணவர்களுக்கோ online கல்வியில் பங்குபற்றுவதே ஒரு தடங்களாக அமையும் . உதாரணமாக ஒரு வீட்டில் நான்கைந்து பிள்ளைகள் இருக்குமிடத்து , ஒரே நேரத்தில் online கல்வியானது இடம்பெற வாய்ப்புண்டு . அது மட்டுமன்றி ஆசிரியர்களின் பிள்ளைகளை எடுத்து நோக்குவோமேயானால் ஆசிரியரும் கற்றுக்கொடுக்க வேண்டும் . அத்தோடு அவர்களது பிள்ளைகளும் online இல் கல்வி கற்க வேண்டும் . பொதுவாக பெரும்பாலான மாணவர்களுக்கு online இல் கல்வி கற்கும் போது இணையத் தடை ஏற்படும் . இதனால் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர் . இந்த online கல்வியானது மாணவர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சினைகளை கூட ஏற்படுத்தும் . அண்மையில் கூட பதினைந்து வயதான ஒரு பாடசாலை மாணவி online கல்வியை கற்றுக்கொண்டு இருக்கும் போது தன்னை அறியாமலேயே தனது முடியை சாப்பிட்டதாகவும் online கல்வியில் தொடங்கி அறுவை சிகிச்சையில் முற்றுப் பெற்றதாகவும் செவியுற்றேன். இது போன்று online கல்வியால் மாணவர்களுக்கு ஏற்படும் விபரீதங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் . 


ஆனால் தற்காலத்திலோ மாணவர்கள் online கல்விக்கு சரியான முறையில் முகங்கொடுத்து அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதே யதார்த்தம் . ஆகவே மாணவர்களாகிய நாம் online கல்வியை ஆர்வத்துடன் கற்று பயன் பெற வேண்டும் . 


 கல்வி கற்போம் !

 வெற்றியை சந்திப்போம் !



Nadhiya Rifkan

Grade :11

Age :16

School : WP/KL-HASSNIYA MAHA VIDHIYALAYA MAGGONA

DISTRICT - kaluthara



உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇


Contact : Click here 



கீழுள்ள Like இனை அழுத்தி ஆக்கங்கள் அனுப்பியவர்களை  ஊக்கப்படுத்துங்கள்.