காதலின் விளிம்பில் வீர மங்கை (Part-01)

காதலின் விளிம்பில் வீர மங்கை (Part-01)

 


அடுத்த நொடி அதிசயங்களை சுமந்ததுதான் இந்த வாழ்க்கை. எதிர்பாரத நேரங்களில் எதிர்பாராத சம்பவங்களினால் எதிர்பாராத நபர்களின் சந்திப்பை ஏற்படுத்தி வாழ்க்கையில் அனுபவமிக்க பாடங்களை கற்றுத்தருகிறது காலம்..


 வேகமாக உலகம் இயங்கும் இந்த இன்டர்நெட் உலகில் நாமும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

மாற்றங்களை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் நம் நிலை மாறாது காத்துக் கொள்ள வேண்டியது நமது பொறுப்புக் தானே...



தன்னிலை மறந்து தன்னை இழந்தவள் தலை நிமிர்ந்தது பற்றியதுதான் இந்த கதை.....


உன் அம்மம்மாவின் பேர் வைத்த போது நிஜமாகவே நீ உன் அம்மம்மாவை போல் இருந்து தொலைப்பாய் என்று யார் எதிர் பார்த்தது? என்றார் கிருஷ்ண மூர்த்தி. 



அப்பா அம்மம்மா வின் பேர் ஐஸ்வர்யராஜ லட்சுமி தானே அதை எனக்கு பாதியாக்கி ஐஸ்வர்யா என்றுதானே வைச்சீங்க அதனால நான் அம்மம்மாவின் குணத்தில பாதிதான் இருப்பேன் நீங்க பயப்படாதீங்க அப்பா என்று நக்கலாய் சிரித்தால் ஐஸ்வர்யா என்கிற ஐசு......


ஐசு இன்றோடு பதினொன்றாம் தரத்தில் கல்விகற்க போகிறாள்.

புத்தம் புதிதாய் மலர்ந்த மலர் போல் என்றும் மகிழ்ச்சியாக பார்க்கும் முகம், அவளின் புன்னகை ஒன்றே போதும் முகவரியின்றி உறவுகள் வந்து உரையாட , கார் மேகங்கள் அருவியாய் ஓடும் கார்குழலி , அவள் உயரம் தான் குட்டை குணத்திலோ அவள் நெட்டை . எப்பொழுதும் குரங்கு சேட்டைகள் செய்வாள் ஆனால் கருத்தாய் பேசும் புத்திசாலி என்ன ஒன்று பிடித்த பிடிவாதம் நினைத்த காரியத்தை செய்வதில் கெட்டிக்காரி அவளின் அம்மம்மாவை போல........


இப்போதும் கூட

    அப்பா நான் 0/l இல் நல்ல ரிசல்ட் எடுத்தா போன் வாங்கி தருவீங்க தானே?


 " ஹும் யோசிப்போம் யோசிப்போம்..."


என்னப்பா யோசிப்போம் யோசிப்போம் அந்த கதையல்லாம் இல்ல நான் பாஸ் ஆவினதும் நீங்க வாங்கிதரனும் அவ்வளவுதான்..


அது சரி அம்மா இல்லாத பிள்ள என்டு நிறைய செல்லம் குடுத்து வளர்த்துட்டன் போல ஐசு...

நீ முதல் நல்லா படிச்சு பாஸ் ஆகு அப்பறம் ஆறுதலா யோசிக்கிறேன் என்று அப்பா பாடசாலைக்கு புறப்பட்டார்.. கூடவே ஐசுவும் வெளியேறினாள்.


வீட்டுக்காவலிற்கு நின்ற கருநிற ராணி மட்டும் வாசலில் வாலை ஆட்டிய படி வழியனுப்பியது.


வகுப்பறையில் ஐசு தான் எப்பொழுதும் முதல் நிலை. விளையாட்டில் மட்டும் என்ன குறைச்சலா அதிலும் அவள் தான் .

ஆசிரியர்களின் மனம் கவர்ந்த மாணவி. என்ன ஒரே ஒரு கவலை அம்மா இல்லா பிள்ளை இடை இடையே அம்மாவை நினைத்து வருந்துவதுண்டு அதுவும் யாருக்கும் தெரியாமல் அவளுக்குள் மாத்திரம்...


இப்படியே காலங்கள் உருண்டோடின ஐசு தனது 0/l ல் பரீட்சையையும் நன்றாக எழுதிய திருப்தியோடு தனது மாமாவின் வீட்டிற்கு சென்றாள். மாமாவின் ஊரிலும் அவளின் நட்பு வட்டாரத்திற்கு குறை இல்லை . சந்தோஷத்திற்கு சலிப்பில்லாமல் போன நேரத்தில் தான் ரிசல்ட் இற்கான நேரமும் வந்தது.


ஐசு. ஐசு உன்ட இன்டெக்ஸ் நம்பர கொண்டு வா ரிசல்ட் பார்ப்போம் என்றார் மாமா அவரின் குரலின் தொனியிலே பதற்றம் தெளிவாகவே தெரிந்தது. ஆனால் ஐசு எந்த பதற்றமும் இல்லாமல் இருந்தாள் அவளுக்குதான் தெரியுமே அவ எப்படி எக்ஸாம் செய்தாள் என்று அதானால அவ நல்ல ரிசல்ட் வரும் என்டு நம்பிக்கையோடு இருந்தாள். 


அவள் நம்பிக்கை வீண் போகவில்லை எண்ணிய படி 9 A வந்தது சந்தோசத்தில் துள்ளிக்குதித்து கூச்சலிட்டாள்.....


ஐசு தன் அப்பாவிடம் ஃபோனில் பேசினாள் இருவரும் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டனர்.


மறுநாள் அதிகாலையில் கிருஷ்ணமூர்த்தி ஐசுவை பார்க்க ஓடோடி வந்தார். தன் மகள் பெற்றுத்தந்த பெருமையில் அவருக்கு இரவெல்லாம் தூக்கமில்லை போலும்..


ஐசு இங்கே ஓடி வா !! யாரு வந்து இருக்கா பாரு.....


யாரு? மாமா அது என்று அவள் தோளோடு ஊஞ்சல் ஆடும் கூந்தலை துணியால் துவட்டியவாறே அறையில் இருந்து எட்டிப்பார்த்தால் ஐசு ..


அப்பா எப்போ வந்தீங்க? பார்த்தீங்களா அப்பா நான் சொன்ன மாதிரியே ரிசல்ட் எடுத்துட்டன் நீங்க எப்போ எனக்கு ஃபோன் வாங்கி தர போறீங்க? என்று கேட்பதற்கு முன்பே கிருஷ்ணமூர்த்தி பின்னால் மறைத்து வைத்திருந்த கையை முன்னே நீட்டினார் அதில் இருந்த ஃபோனை பார்த்ததும் அவவ்ளவுதான் ஐசு ஃபோனை எடுத்துக்கொண்டு சந்தோசத்தில் துள்ளிக்குதித்தாள்.......


அடுத்த வாரமே இருவரும் ஊரிற்கு சென்றனர்.

 ஐசுவை A/l இல் படிப்பதற்காக வேறு ஒரு பாடசாலையில் சேர்த்துவிட்டார்..

ஐசுவும் நன்றாகத்தான் படித்து வந்தாள். ஃபோன் இல் வாட்ஸ்அப் இல் இருந்து டெலிகிராம் வரை படிப்பதற்கான குரூப்களில் இணைந்தார். ஓரிரு மாதங்கள் நன்றாகத்தான் சென்றது புதிய பாடசாலை, புதிய நன்பர்கள் என்று சந்தோசமாய் இருந்தது..


ஒரு நாள் இரவு ஐசுவிற்கு வாட்ஸ்அப் இல் இருந்து ஒரு மெஸேஜ் வந்தது.


ஹாய்.... !

உங்க நேம் என்ன?...


 ஐசு வும் அதனை எடுத்து பார்த்தாள் ஆனால் உடனே கொஞ்சம் பதற்றம் அடைந்தாள். யாரு இது? ஏன் எனக்கு மெஸேஜ் பன்னியிருக்காங்க அதுவும் இந்த நேரத்தில் என்டு ரிப்ளை அனுப்ப தயங்கினாள்.


அவள் ரிப்ளை அனுப்புவதற்கு கொஞ்சம் தாமதித்தாள் ஆனால் மெஸேஜ் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதனால் அவள் யாரு நீங்க? ஏன் எனக்கு மெஸேஜ் அனுப்புரீங்க? என்டு கேட்டாள்.

 அங்கு பிடித்தது அவளுக்கு சனி


நான் உங்கள் கெமிஸ்ட்ரி குரூப் அட்மின் என்னுடைய பேர் கௌதம் என்றான் அவன்..


அவளும் அட்மின் தானே என்று அவன் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் ரிப்ளை அனுப்ப தொடங்கினால். 

உங்கட பேர் என்ன என்பதில் ஆரம்பித்த பேச்சு சில மாதங்களில் எல்லை கடந்து காதல் வசனங்களில் தொடர்ந்தது..


தீடிரென ஒரு நாள் அவளிடம் அவன் ஃபோட்டோ கேட்டான்..


   இவ்வளவு நாட்கள் பேசுறம் தானே ஐசு உன்னைய பார்க்கனும் போல இருக்கு ஒரே ஒரு ஃபோட்டோ அனுப்பு ப்ளீஸ் ப்ளீஸ்..................


ஐயோ என்னலா முடியாது நான் யாருக்கும் அனுப்பினது இல்லை இதுவரைக்கும் ப்ளீஸ் ஃபோட்டோ மட்டும் கேக்க வேணாம் என்றாள் ஐசு.....


ஆனால் கௌதம் விடுவதாக இல்லை எப்படியாவது இன்றைக்கு ஃபோட்டோ பார்தே ஆகனும் என்டு பிடிவாதமாய் நின்றான்... 

 என் மீது நம்பிக்கை இல்லையா ஐசு ஒரே ஒரு ஃபோட்டோ தானே என்று அடம்பிடித்தான்.. அவளும் நிறைய போராட்டங்களின் பின் ஃபோட்டோ அனுப்பினாள். 

 

கௌதம் தன்னுடைய ஃபோட்டோ வையும் அனுப்பினான்...


  "ஹும் பார்க்க ஹேன்சம் ஆகத்தான் இருக்கான் அவருக்கென்ன வீட்டில ஒரே பையன் அம்மா டீச்சர் , அப்பா கவர்மென்ட் ஆபீசில் வேலை செய்ரார்..இவரும் யுனிவர்சிட்டில படிக்கிறார்.. என்டு கௌதமின் ஃபோட்டோ வை பார்த்ததும் மனதிற்குள்ளே பெருமூச்சு விட்டுக்கொண்டாள் ஐசு.....


ஓரிரு வாரங்களில் பெப்ரவரி 14 வந்தது. இந்த நாளிற்காகத்தான் காத்திருந்தான் கௌதம்

அவனுடைய நாடகத்தை அரங்கேற்ற சரியான நேரம் இதுதான் என்று அவன் நன்றாக அறிந்திருந்தான்.......


      " ஹாய் ஐசு..."

நான் உன்னிடம் ஒன்று சொல்லனும் என்னுடைய வாழ்க்கையில் என்ட அம்மாக்குப் பிறகு நான் இந்த உலகில் அதிகமாக நேசிக்கும் பெண் நீதான் 

நீ என்ட வாழ்க்கையில் இருந்தால் நான் எப்பவும் சந்தோசமா இருப்பன். என்னுடைய இன்ப துன்பங்களை உன்னோட பகிர்ந்தளிக்கனும் என்னோட வாழ்க்கை துணையாக நீ வருவியா வாழ்க்கை பூராக என்று சினிமா காதல் வசனங்களை பேசி தன் போலிக் காதலை தெரிவித்தான் கௌதம்...............


வாசித்த உடனே அவளின் கண்கள் விரிந்தது ஒரு கணம் ஐசு பதற்றத்தில் தடுமாறினாள். இதயம் பட படவென அடித்தது... இருப்பினும் இதயத்தின் ஓரத்தில் ஒரு ஆசை எட்டிப் பார்த்தது....


இள வயது நிஜத்திற்கும் நிழலிற்கும் வித்தியாசம் தெரியா பிள்ளை காதல் ஆசை எட்டிப்பார்க்கத் தானே செய்யும்.


அவள் உடனே பதில் ஏதும் அனுப்பவில்லை..


சிறிது நேரத்தில்

       " ஐசு ஏன் பேசாமல் இருக்கிறாய் என்னை பிடிக்கவில்லையா?  

 என்னோட ஏதாவது பேசு நீ இல்லை என்றால் என் வாழ்க்கையில் இனி நானும் இல்லை உன்னை என் உயிருக்கும் மேலாக நேசிக்கிறேன் நீ இல்லை என்றால் என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றான் கௌதம்........


எனக்காக உயிரையே விட்ருவாரா? இவ்வளவு என்னை நேசிக்கிறார் எப்படி வேண்டாம் என்று சொல்வது . என் அப்பாவிடம் சொல்லாத விடயங்களை கூட கௌதமிடம் சொல்லியிருக்கிறேன் . எனக்கு எப்பவும் ஒரு நல்ல உறுதுணையாக இருந்திருக்கிறார்....

கௌதம் எப்பவும் என்னோட இருந்தா நல்லா இருக்கும் என்று மனதிற்குளே தனக்குத் தானே பேசிக் கொண்டாள் .......ஐசு


நீ இல்லை என்றால் உயிரையே விட்ருவன் என்ற அவனின் முட்டாள்தனமான பேச்சில் மயங்கினாள் மங்கை பாவம் அவளிற்கு தெரியவில்லை எங்கு காதல் ஆரம்பிக்கப்படுகிறதோ அங்கு முட்டாள்தனம் நேசிக்கும்படுமென்று..


கௌதம்...

     ஐ லவ் யூ............

நான் உங்களை மனதார நேசிக்கிறேன் என்றாள் கண்களில் சிறு கண்ணீரும் உதட்டில் ஒரு புன்னகையும் மலர்ந்தது...

 பாவம் அந்த புள்ளிமான் ஓநாய் போட்ட வலையில் சிக்கிக் கொண்டோம் என்று தெரியாமல் கற்பனையில் கனா கண்டது........



பிறகு என்ன வாட்ஸ்அப் மெஸேஜ்ஸ் கோல்களாக மாறியது அது வீடியோ கோலாக மாறியது.. 

நடுநிசியும் நண்பகலாய் மாறியது தூக்கம் கலைத்து கல்வி தொலைத்து காதலின் மோகத்தில் இருந்த ஐசு இற்கு தன்னை சுற்றி என்ன நடக்குது என்றே தெரியவில்லை ஆனாலும் ஏதோ ஓர் உலகத்தில் வாழ்வதாய் உணர்கிறாள். அவ் உலகத்தில் அவளையும் கௌதமையும் தவிர யாருக்கும் எதற்கும் அவள் இடம் கொடுக்கவில்லை. இவ்வாறே ஒரு வருடம் கனவிலே பயணித்தது..........


இப்படியே நகர்ந்தது நாட்கள் இதற்கிடையில் ஐசு வின் பிறந்த நாளும் வந்தது...


ஐசு நாளைக்கு உனக்கு பர்த்டே தானே உன்ட பர்த்டே ய என்னோட வீட்ல கொண்டாட ஆசைப்படுறன் நீ கட்டாயம் என்னோட வீட்டுக்கு வரனும் என்று கேட்டுக் கொண்டான்.... கௌதம்..


ஐசுவும் மறுப்பு தெரிவிக்க விரும்பவில்லை ... காரணம் பல தடவை அவனோடு வெளியில் சென்ற நம்பிக்கை ...


"போதை தரும் காதல் வசனங்களில் பேதை அவள் மயங்கி இருந்தால்."...அவன் சொல்வதை கேட்கும் அளவிற்கு அவளுக்கு அவன் மீதான நம்பிக்கையை ஊடுறுவி வைத்திருந்தான் வஞ்சகன்......


Story By : Nifsha Banu 

                    (Mannar)


மிகுதி அடுத்த பாகத்தில்

தொடரும்......


Part 01

https://studentsmaking.blogspot.com/2024/07/part-01.html


Part 02 

https://studentsmaking.blogspot.com/2024/07/part-02.html


Part 03

https://studentsmaking.blogspot.com/2024/07/part-03.html