காதலின் விளிம்பில் வீர மங்கை (Part-03)

காதலின் விளிம்பில் வீர மங்கை (Part-03)

 



அரைமணி நேரத்திற்கு பிறகு கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு வந்தார். ஐஸ்வர்யாவின் அறைக்கு சென்றார் அங்கு அவள் இயக்கமற்றவளாக தலையணைக்குள் முகத்தை புதைத்தவாறு கிடந்தவளைப் பார்த்து அவளுக்கு அருகே சென்று ஐஸ்வர்யா என்றழைக்க அவளும் திடுக்கிட்டு உடனே எழுந்து அமர்ந்தாள்..


இனிமேல் நடந்து முடிந்ததைப் பற்றி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை.. இனி நடக்க போறதுதான் முக்கியம். அவனை பொலிஸ்ல பிடிச்சி கொடுத்து நிறைய பேர்ட வாழ்க்கைய காப்பத்தனும் இல்லாட்டா எல்லொரயும் போல எதுவுமே நடக்காத மாறி வாழ்க்கைய கொண்டு போகனும் ஆனால் அவன இப்படியே விட்டால் இன்னும் எத்தனை பேர்ட வாழ்க்கைய நாசம் பன்னுவான் ?....

இவன மாறி தப்பு சென்றவன பொலிஸ்ல புடிச்சு குடுத்தால் தான் தப்பு செய்ற மத்தவன்கள் திருந்துவான்கள்..

.

என்று பற்களை கடித்தவாறே கண்களில் மின்னலின் ஒளி போல் கோபம் வீச... கூறினார் கிருஷ்ணமூர்த்தி.....


இப்போ என்ன செய்றது சொல்லு எது என்றாலும் நான் உன்னோட இருப்பன் என்றார் கிருஷ்ண மூர்த்தி.


அவர் கூறிய மறுகணமே 

அவனை பொலிஸ்ல தான் அப்பா கொடுக்கனும் என்று ஐசுவும் ஆத்திரத்தில் கூறினாள்...

எந்த பயமும் இல்லாம தப்பு சென்றவன சும்மா விடக்கூடாது...

என்றாள் ஐசு...


தன் நம்பிக்கையை பகடக்காயாய் பயன்படுத்தி தன் வாழ்க்கையையே பாழ் படுத்திவிட்டான் என்ற ஆத்திரம் அவளின் தூக்கத்தை கூட களவாடியது.........


தாமதிக்காமல் இருவரும் ஒரே முடிவாக பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர்.

 

முதன் முதலாக அந்த தந்தையும் மகளும் பொலிஸ் நிலைய வாசலில் நிற்கின்றனர்.

ஐசு துணியால் முகத்தை மறைத்திருந்தாள்.....


 அப்பாவ ஒரு மகள் எங்கு கொண்டுவரக் கூடாதோ அங்கு கொண்டு வந்து நிப்பாட்டிடனே... .. 

என்று ஐசு மனதிற்குள் குற்றவுணர்ச்சியில் தவித்துக்கொண்டு அப்பாவிற்கு பின்னே தலை குனிந்தவாறு உள்ளே நடந்து சென்றாள்...


உள்ளே சென்றதும் ஒரு காவலாளி எதிரே வந்து விரைப்பாக நின்றார் யார் நீங்க? என்டு கேட்க...

 

நாங்க ஒருத்தன் மேல் கேஸ் குடுக்கனும் என்று தயங்கிய தொனியில் கொஞ்சம் பதற்றத்துடன் கூறினார் கிருஷ்ணமூர்த்தி 


உள்ளதான் சேர் இருக்கார் இப்போ வெளிய எங்கோ போகப்போறார் நீங்க வேகமாக போய் பாருங்க என்று சொன்னவாறே காவலாளி வெளியே சென்றார்.....


இருவரும் உள்ளேஅறைக்குள் செல்ல  

கருத்த மீசையுடன், எப்போதுமே கோபமாக பார்க்கும் பார்வையுடன், பொலிஸ்காரருக்கே இருக்கும் திமிருடன் ஒருவர் அமர்ந்திருந்தார்...

  

எக்ஸ் கியூஸ் மீ.....

சேர் என்று சொன்னவாறே உள்ளே நுழைந்தார் கிருஷ்ணமூர்த்தி....

பின்னாடியே பரிதவித்த படி ஐசுவும் கண்களில் பயத்துடன் சென்றாள்...


யாரு நீங்க ? என்ன பிரச்சினை? எங்க இருந்து வாரீங்க .?...

என்று அடுக்கடுக்காக கேள்விகளை கணத்த குரலில் கேட்டார்...

 அந்த உயர் அதிகாரி... 


என்னோட பேர் கிருஷ்ணமூர்த்தி நான் ......என்று ஆரம்பித்து நடந்த அனைத்தையும் கூறி முடித்தார் ....


சேர் அவன் பொலிஸ்ல போனாலோ வேற யார்டையும் சொன்னாலோ உன்ட போட்டோஸ் எல்லாத்தையும் எடுத்து தப்பு தப்பா எடிட் பண்னி எல்லாருக்கும் அனுப்புவன் என்டு மிரட்டுறான் சேர்.. 

 கொஞ்ச போட்டோஸ் கூட அப்படி எடிட் பண்னி அனுப்பி வச்சுருக்கான் அந்த படுபாவி என்று அழுதுகொண்டே கூறினார் கிருஷ்ணமூர்த்தி......


பிள்ளைகள் படிக்கனும்டு ஃபோன் வாங்கி குடுக்றம் ஆனால் அதுல பிரண்ட்ஸ், லவ்வர் என்டு ஆயிரம் பேர் வந்து வாழ்க்கைய நாசமாக்கிட்டு போயிடுறானுங்க...இந்த ஃபோன், இன்டெர்நெட் என்டு ஐய்யய்யோ தாங்க முடியல சேர்....


ஒரு குடும்பத்துல பொண்ணு செத்து போனா அதோட கவலை ஒரு மாசமோ பத்து மாசமோ தான். ஆனால் ஒரு குடும்பத்துல பொண்ணு கெட்டு போய்டா..அதோட வேதனனயும் அவமானமும் காலத்துக்கு வந்துட்டே இருக்கும். அந்த அவமானத்துல நானும் என் மகளும் அவஸ்தை பட்டுட்டு இருக்றம் சேர்...


எந்த ஒரு தகப்பனுக்கும் நடக்க கூடாத கொடுமை என்ன தெரியுமா ?... வயசுக்கு வந்த தன் மகள பார்க்க கூடாத கோலத்துல பார்க்றதுதான்..அது என்ன தவிர வேற எந்த அப்பாக்களுக்கு நடக்க கூடாது.... இன்றைக்கு என் வீட்ல நடந்துட்டு நாளைக்கு எத்தின வீடுகள்ல நடக்குமோ தெரியல....

 அவன புடிச்சு ஜெயில்ல போடுங்க சேர்..... என்று கணணீர் ஆறாய் பெருக்கெடுக்க கைகளை குவிந்தவாரே கெஞ்சினார் அந்த உயிர் இருந்தும் ஜடமாய் நிற்கும் தந்தை.......


பார்க்க முரடான ஒருவராக தெரிந்தாலும் .........

இறக்க குணமுடைய அந்த அதிகாரி கிருஷ்ணமூர்த்தியின் அருகே வந்து கவலைப்படாதீங்க சேர் கண்டிப்பா நான் உங்களுக்கு உதவி செய்றன். 

உங்கட மகளின்ட வயசுல எனக்கும் ஒரு மகள் இருக்காள். உங்கட மனசு எவ்வளவு வேதனைப்படும் என்று எனக்கு தெரியுது நீங்க எல்லா தகவலையும் ஒரு பேப்பர்ல எழுதி தாங்க உரிய நடவடிக்கைய நான் எடுக்குறன் என்டு கிருஷ்ணமூர்த்தியின் தோள்களில் கை வைத்தவாரே ஆறுதலாக கூறினார் அந்த உயர் அதிகாரியான கனகராஜ்........


புகார் கொடுத்த திருப்தியுடன் கிருஷ்ணமூர்த்தி யும் ஐசுவும் வீட்டை நோக்கி புறப்பட்டனர்....


மறுநாள் காலையில் கனகராஜ் யும் இரண்டு காவலளிகளும் கௌதம் இன் வீட்டிற்கு சென்றனர்..


கதவை தட்டிய சத்தத்தில் கௌதமின் அம்மா கதவை திறந்தார் பொலிஸ்யை பார்த்தும் பதற்றமடைந்து கணவரையும் அழைத்துக் கொண்டாள்........


கௌதமின் அப்பா வந்ததும் ஏன் சேர் எங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்க?... ஏதும் பிரச்சனையா சேர் என்று கேட்க..

கனகராஜ் உடனே உங்கள் மகன் கௌதமா ? எங்க அவர் ஒருக்கா கூப்படுரிங்கலா?? ப்ளீஸ்........


சேர் என்னாச்சு? .. அவன் எங்க மகன் தான் என்னாச்சு சேர் ப்ளீஸ் சொல்லுங்க என்று பதற்றத்துடனும் பயத்துடனும் கேட்டுக்கொண்டார் கௌதமின் அப்பா....


உள்ள வரலாமா ?.. என்று கனகராஜ் ஒரு வித திமிரான குரலில் கேட்க...


வாங்க சேர் வந்து உட்காருங்க சேர் என்று பதற்றத்துடன் கௌதமின் அப்பா கூறினார்.....


கௌதமை கொஞ்சம் கூப்டுங்க சேர் கொஞ்சம் விசாரிக்கனும் அவ்வளவுதான் என்றார்.. கனகராஜ்


வீட்டில் யாரோ கதைக்கும் சத்தம் கேட்டு அறையில் இருந்து வெளியே வந்தான் கௌதம்....

பொலிஸ்யை பார்த்ததும் அவன் கண்விழிகள் பிதுங்கி வெளியே எட்டிப் பார்த்துக்கொண்டு இருந்தன...


கௌதமை பார்த்ததும் ..

  

ஓ... நீங்க தான் கௌதமா?....

என்று கனகராஜ் கேட்க ....அவனும் பயத்துடனே தலையை ஆட்டினான்....ஏன் பொலிஸ் வந்து இருக்காங்க என்னாச்சு என்று எதுவுமே தெரியாமல் குடும்பமே தத்தளித்து...

 

ஆனால் குற்றம் செய்தவனுக்கு உடலெங்கும் பயத்தால் வியர்வை நதியாய் ஊற்றெடுத்தது......


கௌதம் உனக்கு ஐஸ்வர்யா என்று யாராயாச்சும் தெரியுமா ?...

 என்று கனகராஜ் கௌதமை பார்தத்வாரே கேட்டார்.....


  அப்படி யாரையும் தெரியாது சேர் . இப்படி ஒரு பேர்ல் எனக்கு பிரண்ட்ஸே இல்ல சேர் என்றான் கௌதம்....


 ஓ.... அப்படியா?...

ஒன்றுமில்லை கௌதம் ஐஸ்வர்யா என்று பேர்ல ஒரு பொண்ணு அவங்க அப்பாவோட வந்து உன் மேல கேஸ் குடுத்திருக்காங்க ...


நீ அந்த பொண்ணை லவ் பண்ணி அப்றம் அந்த பிள்ளைக்கே தெரியாம போதை மருந்த ஜுஸ்ல போட்டு குடுத்து தப்பா நடந்திருக்க ...

என்று அவங்க சொல்றாங்க என்றார் அந்த உயர் அதிகாரி...


இதைக் கேட்டதும் கௌதமின் தாய் , தந்தை அதிர்ந்து போனார்கள்..


 என்ன சேர் சொல்றீங்க எங்க மகன் அப்படியெல்லாம் செய்றவன் இல்லை நீங்க தப்பா அட்ரஸ் மாறி இங்க வந்துட்டிங்க..அதான் அவனுக்கு அது யாருன்டே தெரியல என்டு சொல்றானே...என்று கௌதமின் தாய் அதிர்ச்சி கலந்த கோபத்தில் கூறினார்....


இங்க பாருங்க அம்மா அட்ரஸ் எல்லாம் மாறி வரல எல்லாம் சரிதான் . அவங்க கண்டிப்பா உங்க மகன்தான் எண்டு சொல்றாங்க அதோட உங்க மகனும் அந்த பொண்ணும் ஒன்னா இருக்குற போட்டோஸ் கூட வச்சு இருக்காங்க நீங்க எதுவா இருந்தாலும் நாளைக்கு பொலிஸ் ஸ்டேஷன்ல பாத்துக்கோங்க எண்டு கௌதமை அரஸ்ட் பண்ணி தன்னோடு அழைத்துச் சென்றார் கனகராஜ்.....


பின்னாலயே கெளதமின் தாயும் தந்தையும் விட்ருங்க சேர் ப்ளீஸ் என்று கெஞ்சியவாறே சென்றனர்.....,.


இதை எதையும் எதிர் பார்க்காத கௌதம் அதிர்ச்சியில் தன்னை சுற்றி என்ன நடக்குது என்றே தெரியாமல் சிந்தனைகள் தடுமாறிக்கொண்டிருக்க முகத்தில் அதிர்ச்சி வெளிப்பாட்டுடன் அவர்களோடு சென்றான்....


மறுநாள் காலையில் ஐசுவும் அப்பாவும், கௌதமின் அப்பா அம்மாவும் பொலிஸ் ஸ்டேஷனிற்கு அழைக்கப்பட்டனர்..


இரண்டு தரப்பினரும் சந்தித்து கொண்ட தருணத்தில் கௌதமின் பெற்றோருக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது...


இதைக் கவனித்த கனகராஜ் கொஞ்சம் அமைதியா இருக்கிறீங்களா எல்லாரும் அப்போதான் பிரச்சினைய தீர்க்கலாம்..

   

நீங்க உங்க மகன் இல்லை என்டு சொல்றீங்க இவங்க உங்க மகனுக்கு எதிரா ஆதாரம் எல்லாம் வச்சு இருக்காங்க..

உங்கட மகன்ட ஃபோன்ல இருந்து தான் மேஸேஜ் எல்லாம் வந்து இருக்கு என்ன சொல்றீங்க இதுக்கு.....என்று கனகராஜ் கேட்க..


கௌதமின் அப்பா அவன் ஏதோ மேஸேஜ் பண்ணிக்கலாம் அதுக்காக தப்பா நடந்திக்கான் என்டு சொலறதலாம் பொய் சேர் எங்க மகன் அப்படியெல்லாம் நாங்க வளர்க்கல....எனறார்..


ஒகே ஒகே.... ஆனால் இவங்க அதை ஒத்துக்கல அதனால நான் கேஸ் பைல் பண்ணிட்டேன் நீங்க இனிமேல் கோட்ல தான் பார்க்னும் என்டு முடிவாக சொல்லிவிட்டார்....


இதைக் கேட்டதும் கௌதமின் அப்பா எங்க குடும்ப மானத்தையே வாங்கிட்டிங்க எப்படி எங்க மகன வெளியில.கொண்டு வரனும் என்டு எனக்கு தெரியும்.. நீயும் உன். பொண்ணும் மானத்தை இழந்து எல்லாருக்கும் முன்னுக்கும் என் மகன் தப்பு செய்ய இல்லை என்டு சொல்லத்தான் போறீங்க என்று அவருடைய பேச்சினிலே அனல் தெறிக்க கூறிவிட்டு வேகமாக நடந்து சென்றார்....

என்னதான் இருந்தாலும் பிள்ளை பாசம் இருக்கத்தானே செய்யும்..


மறுநாள் காலையிலேயே கௌதமின் அப்பா ஏதோ ஒரு நல்ல வக்கீல் ஒருவரைப் பார்த்து பேசி உடனே கௌதம் பிணையில் வெளியே வருவதற்கான.

வேலையை பார்க்க ஆரம்பித்தார்......


கிருஷ்ணமூர்த்தியும் ஐஸ்வர்யாயும் நல்ல வக்கீல் ஒருவரை தங்களுக்கு சார்பாக வாதாட தேடிக் கொண்டிருந்தனர்....

ஆனால் இவர்கள் முன்னர் இவ்வாறு வக்கீல்களை நேரில் பார்த்ததும் இல்லை அவர்களுடன் 

பேசிய முன் பின் அனுபவங்களும் இல்லை என்பதால் யாரைச் சந்திப்பது என்ன செய்வது என்று தெரியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தனர்....


பிறகு தங்களுக்கு தெரிந்த இப்போதைக்கு நம்பிக்கைக்குரிய பொலிஸ் அதிகாரி கனகராஜ் அவரையே சந்திப்போம் அவர் ஏதும் ஏற்பாடு செய்வார் என்ற நம்பிக்கையில் கனகராஜை நேரில் சந்திக்க அவரின் வீட்டிற்கு கிருஷ்ணமூர்த்தி சென்றார்........


கனகராஜை சந்தித்த கிருஷ்ணமூர்த்தி 

 சேர் ... 

எனக்கு யாரைப்பார்க்கனும் எப்படி எந்த வக்கீல எங்களுக்கு சார்பாக வாதாட சொல்லனும் என்று தெரியல சேர் கொஞ்சம் உதவி பண்ணுங்க சேர்.. யாராவது முன் பின் தெரியாத வக்கீல பேசி அப்றம் அவர் பணத்துக்கு விலை போய்ட்டார் என்டா என்னோட மகளுக்கு நியாயம் கிடைக்காம போய்டும் சேர்...

இப்போதைக்கு உங்கள விட்டா வேறு ஒருத்தரும் நம்பிக்கைக்குரிய ஆக்கல் இல்ல சேர் ......

என்றார் கிருஷ்ணமூர்த்தி ..


 உங்கட பிரச்சினை எனக்கு புரியுது சேர் எனக்கு தெரிஞ்ச நல்ல வக்கீல் ஒருத்தங்க இருக்காங்க அவங்க பேர் பானுமதி.

அவங்க பெண்களுக்கு சார்பாக நிறைய கேஸ்ல வாதாடி இருக்காங்க கண்டிப்பா உங்களுக்கு உதவி செய்வாங்க.. அவங்களோட நான் பேசி நடந்த எல்லாவற்றையும் சொல்றன். 

நீங்க மகள கூட்டிக்கொண்டு நாளைக்கு நான் சொல்ற இடத்துக்கு வாங்க என்று தன்னுடைய ஃபோன் நம்பரையும் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்து அனுப்பிவைத்தார் கனகராஜ்.......


இப்படியான நல்லவர்களினால்தான் இன்னும் உண்மை அழியாமல் இருக்கின்றுது போலும்...


மறுநாள் காலையிலே கனகராஜ் ஃபோன் செய்து கிருஷ்ணமூர்த்தியை மகளுடன் வக்கீல் பானுமதியின் வீட்டிற்கு வரவழைத்தார்....


மூவரும் பானுமதியின் வீட்டிற்கு சென்று வீட்டின் முன் அறையில் சோஃபா வில் அமர்ந்து இருந்தார்கள்..

சற்று நேரத்திலே பானுமதி அறையில் இருந்து வெளியே வந்தார்......


சற்று நரைத்த தலைமுடி, ஆடையில் ஒழுக்கம் , முகத்தில் புன்னகையும் , கருணையும் கோலம் போட்டுக் கொண்டிருந்தது....

கண்ணில் நேர்மையும் , வீசியது..... இரண்டு குழந்தைகளின் தாய் தன் கடமைகளில் பொறுப்பாய் இருப்பவர் என்பது அவர்கள் பானுமதி வீட்டிற்கு வந்து பானுமதி அவர்களுடன் பேசி நடந்து கொண்ட விதத்திலே அறிந்து கொண்டனர்....


இப்படியாக உரையாடல்கள் தொடர்ந்து கொண்ட போது....

 சரி முதல்ல நாம கெளதமிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவோம்..

அப்றம் மகளிர் கோட்ல கேஸ் வரும்.. மீதிய அங்க பார்துக்கலாம். ....


ஐஸ்வர்யா நீ கோடில ஒருத்தி ரொம்ப தைரியசாலி பொண்ணு ஒரு பெண் இப்படித்தான் இருக்கனும்.... உன்ன நினைச்சு பெருமைபடுறன்.....

 ஆனால் இந்த உலகம் உன்மேல் இருக்கும் நியாயத்தை பார்க்காது உன்ன எப்படி காயப்படுத்தி மானபங்க படுத்துறது என்டுதான் யோசிக்கும்... நீ எதுக்கும் கவல படாத கண்டிப்பா நாங்க உனக்கு இருக்கம் என்டு நம்பிக்கை வார்த்தைகளை ஐஸ்வர்யாவின் மனதில் விதைத்தார் பானுமதி.....


ஒரு வாரத்தின் பின் ஐசு வின் வழக்கு நீதிமன்றத்தில் நீதிக்காக காத்திருந்தது....


  இதற்கிடையில் ஐசு படித்த பாடசாலை தேசிய பாடசாலை என்பதாலும் இருவரும் ஆசிரியர்களின் பிள்ளைகள் என்பதாலும் எப்படியோ நாடு முழுவதும் தலைப்பு செய்திகளிலும் , சமூக வலைத்தளங்களிலும் இருவரை பற்றிய செய்திகளும் வதந்திகளும் கட்டணம் செலுத்தப்படாத விளம்பரமாய் வளம் வரத்தொடங்கியது.....


இதனால் நீதி மன்ற வாசலில் கேமராக்கள் ஏந்தியபடி பல விமர்சகர்கள் வீதியோரங்களில் காத்திருந்தனர்..


ஐசுவும் தந்தையும் ஏற்கனவே நீதிமன்றத்தின் உள்ளே அமர்ந்து இருந்தார்கள்..


மகளிர் நீதி மன்றத்தில் நீதவான் உட்பட அனைவரும் அமர்ந்திருந்தனர்...

வழக்கு முன் நிறுத்தப்பட்டது.

    

வழக்கு முழுமையாக வாசிக்கபட்ட பின் நீதிமன்ற கூண்டில் எதிரே கெளதம் நிற்க ஐஸ்வர்யா தயங்கிய படி அங்கிருந்தவர்களின் பார்வை அவளை இரத்தம் இன்றி கொலை செய்வதை போல் உணர்ந்தவளாய் தலை குனிந்த படி கூண்டில் ஏறி நின்றாள்..

பாடசாலை மாணவி என்பதாலும் சிறிய வயது பெண் என்பதாலும் அவளின் எதிர்காலத்தை எண்ணி ஐஸ்வர்யாவின் முகத்தை மறைத்துக் கொண்ட படி வரவழைத்தனர்.


பானுமதி .... ஐஸ்வர்யாவிடன் உங்களின் பெயர் என்பதில் ஆரம்பித்து எதிரே நிற்பவரை தெரியுமா? 

எவ்வாறு தெரியும் என்ன நடந்தது என்று கூறச்சொன்னார்...


ஐஸ்வர்யாவும் நடந்தவை எல்லாவற்றையும் உள்ளபடி கூறி முடித்தாள்..

அதன் பின் பானுமதி எழுந்து...

கணம் நீதிவான் அவர்களே!..


சட்டம் பெண்களுக்கு சாதகமாய் இருந்த போதிலும் இந்த சமுதாயம் பெண்களுக்கு சாதகமாய் இருப்பது இல்லையே.....

பெண்கள் வசப்படுத்தப்படுகிறவர்கள் அன்பு வசப்படுகிறாள், காதல் வசப்படுகிறாள், ஆண்கள் வசப்படுத்தவைப்பவர்கள்..

ஒரு ஆண் சாதாரணமாக ஒரு பெண்ணை காதலில் சம்மதம் கூற வைப்பதற்கு எவ்வளவு தூரம் வரை சென்று செல்கிறான் அவளை காதலிக்கவும் வைக்கிறான்...


இளவயது பள்ளி மாணவி சமூகத்தில் நடக்கும் அவளங்களை அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.. யாரோ ஒருவர் தன் மீது அதிக அன்பை செலுத்தும் போது அது போலியானது என்பதை கூட இனம்கான தெரியாது... கயவர்களின் வஞ்சக வலையில் சிக்கி கொள்கின்றார்கள் அப்படி சிக்கி கொண்டவர்களில் தற்பொழுது ஐஸ்வர்யா யும் ஒருத்தி...


இதுமட்டுமல்ல காதல் எனும் பெயரின் பின் சமுதாயத்தில் எவ்வளவோ இவ்வாறான காதல் லீலைகள், சமூக சீரழிவுகள் நடந்தேறி முடிகின்றன..

இதற்கு முக்கிய காரணம் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக உருவான ஃபோன் மற்றும் சினிமா அடுத்தது போதைப் பொருள் பாவனை...


தொலைபேசி என்பது தொலைவில் இருப்பவர்களை இணைப்பதற்கும், நாம் அறியாத புதிய அறிவியலை , புதிய தகவல்களை நல்ல விசயங்களை அறிந்து கொள்வதற்கும் தான்..

ஆனால் இன்று அது தேவையில்லாத நிறைய சினிமா குப்பைகளையும் யாரென்றே தெரியாத அந்நியர்களின் தொடர்பை பேணுறத்துக்கும் வைத்திருக்கிறோம்..

வாட்ஸ்அப் என்பது நம்முடைய நேரத்தை களவாடக்கூடிய ஒரு கண்டுபிடிப்பு இதனால் நம்முடைய தகவல்கள் திருடப்படுகிறது, தனிப்பட்ட நிறுவனங்களுக்கு வருவாயே தவிர நமக்கு பயன் குறைவுதான்....

 ஃபோன் என்பது கத்தி மாதிரி அதை எப்படி பயன்படுத்துகிறோமோ அதன்படி நம் வாழ்க்கை அமையும்....

   

சினிமா என்பது ஒரு வகை விபச்சாரம் ஆபாச படங்களையும் தேவை இல்லாத குப்பைகளையும் மக்கள் மனதிலும் இள வயது பாடசாலை மாணவர்களின் மனதிலும் விதைக்கின்றனர் இதனால் அவர்கள் அடைவது என்னவோ இலாபம் ஆனால் இவற்றையெல்லாம் நேரம் வீணடித்து பார்த்தவர்களுக்கு கிடைப்பது என்ன.?....


எதுவுமே இல்லை ஆனால் சினிமா என்பது எல்லா மாணவர்களின் வாழ்க்கையையும் ஒழுக்கத்தையும் சீரழிக்கின்றது என்பதே மெய்...

 சகோதர, சகோதரிகளாக பார்க்க வேண்டியவர்களை ஆபாசமாக பார்க்க வைத்தது இந்த கேவலமான சினிமா...


நீதிவான் அவர்களே கெளதம் என்பவர் ஐஸ்வர்யாவை காதல் வலையில் சிக்க வைத்து போதைப் பொருள் கொடுத்து அவளிற்கு தெரியாமலே அவளை கற்பழித்திருக்கிறான்..

இவருடைய இந்த வலையில் ஐஸ்வர்யா மட்டுமன்றி இன்னும் சில பாடசாலை மாணவிகளும் சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள்..


இதற்கு ஆதாரமாக கெளதமின் வீட்டிற்கு முன்னே இருக்கும் கல்யாணமண்டபத்தின் cct camera வில் ஐஸ்வர்யாவை கெளதம் அழைத்துச் செல்வது நன்றாக தெரிகிறது.. இது நடந்தது சம்பவம் நடந்த அதே திகதி என்பதால் ஐஸ்வர்யா கூறுவது அனைத்தும் உண்மை என்பதுடன் கௌதமினால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி கௌதம் கூறும் அனைத்தும் பொய்..


இவன் நிறைய பெண்களின் வாழ்க்கையை ஒரு பொழுதுபோக்காக நினைத்து அனைவரது வாழ்வையும் சீரழித்து இருக்கிறான்...


இவனைப் போன்று இன்னும் எத்தனையோ அயோக்கியர்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்..

 இவனுக்கு கொடுக்கும் தண்டனை அனைத்து அயோக்கியர்களுக்கும் ஒரு சிறந்த பாடமாக இருக்க வேண்டும்... 

தண்டனைகள் கடுமையாக இருக்கும் போதுதான் தவறுகள் குறைக்கப்படும் என்று சொல்வார்கள் அதன்படி கௌதமிற்கு அதிகபட்ச தண்டனை வழங்கி நாட்டில் பெண்களை தவறாக பார்க்க நினைக்கும் அனைவருக்கும் இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறி தன்னுடைய வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் பானுமதி....


இவற்றையெல்லாம் கேட்ட அந்த சபை ஒரு கணம் அமைதியாய் இருந்தது.

கௌதமிற்கு சார்பாக வாதாட வந்தவர் வார்த்தைகளின்றி தத்தளித்தார்..

அவர் எழுந்து வாதிடுவதற்கு எதுவும் இல்லை என்று கூறி தலை குனிந்தார்...


தீர்ப்பு ஐஸ்வர்யாவிற்கு சாதகமாய் அமைந்தது..

கௌதமின் இந்த இழி செயலிற்காக 13 வருடங்கள் சிறை வாழ்க்கை பரிசாக கிடைத்தது....


ஐஸ்வர்யாவின் தந்தை கண்ணீருடன் புன்னகையில் அமர்ந்திருந்தார்...இவரின் அந்த நொடி சந்தோஷத்தை வார்த்தைகளால் எழுதிட முடியாது...

தன் மகள் இந்த சமுதாயத்தில் வாழத்தகுதியானவள் என்பதில் மனம்குளிர்ந்தார்..


ஐஸ்வர்யா தன் இரு கைகளை குவிந்தவாறு நன்றி சொல்லி கண்ணீர் மழ்க பானுமதியை கட்டிப்பிடித்து அழுதாள்....


 இங்க பாரு ஐஸ்வர்யா மனிதன் தவறு செய்யக்கூடியவன் தான் ஆனால் ஒரு தடவை தவறு என்று தெரிந்த பின் அந்த தவறை செய்யாது இருக்க வேண்டும் அதுதான் முக்கியம் இதோட உன் வாழ்க்கை முடிய போறது இல்லையே இனிமேல் நீ வாழப்போற வாழ்க்கை தான் உன் அப்பாக்கு நீ கொடுக்கபோற மிகப் பெரிய சந்தோஷம்....

இந்த சமுதாயத்தை பார்த்து பயப்படாத இங்கு உன்ன விட பலமானவங்க யாரும் இல்லை ஏன் என்றாள் நீ பெண்....

ஒரு பெண் நினைத்தாள் இந்த உலகத்தில் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை..

கண்டிப்பா நீ நல்லா இருப்பாய் மிகப் பெரிய சாதனைகள் எல்லாம் செய்யப் போறாய் பாரு என்று தோள் தட்டிக் கொடுத்தார் பானுமதி.....


இறுதியாக ஐஸ்வர்யாயும் தந்தையும் நீதிமன்ற வாசலில் வெளியே செல்வதற்காக வந்தனர்..

 ஒரு பெரிய பத்ரிகையாளர் , யூடியுப் விமர்சனங்கள் என்று ஒரு பெரிய கூட்டமே உள்ளே நடந்தது என்ன என்று அறிவதற்கு ஆர்வமாய் நின்றனர்....

  

வாசலில் சென்ற ஐசு அனைவரையும் ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தாள்.. தன்னுடைய முகத்தில் போட்டிருந்த துணியை அகற்றினால் அங்கிருந்த அத்துனை கேமராக்களும் தலை குனிந்தன.....


ஏனெனில் ஐசுவிற்கு தெரியும் தனக்கு முன்னே நிற்பது மற்றவர்களது கதையை ஒரு வியாபாரமாக பார்க்கும் ஒரு இலட்சிய மற்ற அற்ப கூட்டம் என்பது எனவே அவள் அவர்களை பொருட்படுத்தவில்லை...


தவறுகளுக்கு பின் அவள் தன்மானம் இருமடங்காய் அதிகரித்தது யதார்த்ததிற்கும் கற்பனைக்கும் வித்தியாசம் கண்டுகொண்டாள்...

 தன் பார்வையை. நேராக்கிக் கொண்டவள் இம் முறை பல்லாயிர மடங்கு தன்னம்பிக்கையோடு தன் யதார்த்த வாழ்வில் சாதனைகள் படைக்க திமிரோடும் கர்வத்தோடும் தனக்கான பாதையில் நடந்தாள்......


ஏனெனில் அவள் பெண்...


Story By : Nifsha Banu 

                    (Mannar)


Part 01  

https://studentsmaking.blogspot.com/2024/07/part-01.html


Part 02  

https://studentsmaking.blogspot.com/2024/07/part-02.html


Part 03

https://studentsmaking.blogspot.com/2024/07/part-03.html