மறுநாள் காலையில் ஐசு ரொம்ப சந்தோஷமாக இருந்தாள்.
கண்ணாடியே அவளைப் பார்த்து வெட்கப்படும் அளவிற்கு அளவுக்கதிகமாக தன்னை ஒப்பனை செய்வதில் ஆர்வம் காட்டினாள்.
ஐய்யோ! ..
அப்பா இப்போ எங்க போறா என்டு கேப்பரே என்ன சொல்றது?......
ம்ம்.. வழக்கம் போல
இன்றைக்கும் எக்ஸ்ரா கிளாஸஸ் இருக்கு என்டு சொல்ல வேண்டியதான்.. அப்பா வந்து பார்க்கவா போறாரு....
அப்பா! அப்பா! போய் வாரன். இன்றைக்கும் வீட்ட வர லேட் ஆகும் எக்ஸ்ரா கிளாஸஸ் இருக்கு.....
என்டு வாசலை நோக்கி நடந்த வாரே கூறிக்கொண்டு சென்றாள்......
அப்பா ஒரு கையில் கரண்டியோடும் மறு கையில் கரித்துணியயோடும் சமையறை வாசலில் நின்றவாறே சாப்பிட்டு போ ஐசு என்றார்......
அதை அவள் கேக்கும் அளவிற்கு பொறுமை இல்லாமல் வீட்டு வாசலை கடந்து சென்றாள்.........
ஐசுவிற்கு கௌதமின் வீடு நன்றாகவே தெரியும்.. ஆனால் வீட்டினுள் சென்றதில்லை கௌதமின் வீட்டிற்க்கு முன்பாக ஒரு திருமண மண்டபம் உள்ளது..
ஐசு கூட ஏதோ ஓரிரு திருமணங்களிற்கு அப்பாவோடு வந்திருக்கிறாள்....
அப்போதும் கூட கௌதமின் வீட்டை பார்த்த படியே செல்வாள்......
ஐசு இப்போ அந்த திருமண மண்டபத்திற்க்கு முன் தயக்கத்துடனும் பதற்றத்தை மறைக்க உதட்டில் சிறு புன்னகையுடனும், தனது துப்பட்டாவை பதற்றத்தில் விரல்களின் நடுவே சுற்றிக்கொண்டு எட்டி எட்டி கௌதம் வரும் வழியை எதிர்பார்த்த வளாக வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள்.....
கௌதம் தன் வீட்டில் இருந்து வந்து ஐசுவை தன்னோடு அழைத்துச் செல்லும் போது .........
கௌதம் உங்கட அப்பா, அம்மா எங்க அவங்க வீட்ல இல்லையா...?
இல்லை ஐசு அவங்க எங்க மாமி ஒருத்தங்கல பார்க்க ஊருக்கு போயிருக்காங்க நாளைக்குத்தான் வருவாங்க என்றான் கௌதம்.....
கௌதமின் வீட்டில் இருந்த விலையுயர்ந்த அழகான சோஃபா வில் ஐசு வை அமர வைத்துவிட்டு கௌதம் உள்ளே சென்றான்.......
ஐசு சிறிய காத்திருப்பின் பின் எழுந்து ஜன்னலோரமாக காற்றுவாங்கிய படியே வெளியே எட்டிப் பார்த்துக்கொண்டு இருந்தாள்...
ஐசு என்று ஒரு குரல் கேட்டது..,.
ஐசுவும் உடனே திரும்பிப் பார்க்க.......
அப்பொழுது அவள் எதிரே முகத்தில் அழகான புன்னகையையும் ...
கைகளில் அவளைப் போல அழகான ரோஜா மலரையும் ஏந்தியபடி ஹேன்சம் ஆக வந்து நின்றான் கௌதம்.....
" ஹாப்பி பர்த்டே
டார்லிங்"
எப்பவும் அழகா இருக்குற நீ இன்றைக்கு எவ்வளவு பேரழகா இருக்க.... தெரியுமா?..
தேவதை மாதிரி இருக்க.....
என்று கௌதம் சொல்ல தன் கன்னம் இரண்டும் புத்தம் புதிதாய் மலர்ந்த ரோஜா போல் மேலும் சிவந்து
வெட்கித்து நின்றாள் ஐசு .......
தன் கியூ கௌதம் ...
கௌதம் ஐஸ்வர்யாவிற்காக வாங்கிய கேக் யை கொண்டு வந்தான்
ஐஸ்வர்யா கேக் யை வெட்டி கௌதம் இற்கு ஊட்டினாள்.
கௌதமும் ஐசு இற்கு கேக் ஊட்டினான். அப்படி இப்படியாக இருவரும் சந்தோசத்தில் இருக்க
கௌதம் எழுந்து இரு ஐசு உனக்காக நான் ஜுஸ் ரெடி பண்ணி வச்சுருக்கேன் எடுத்து வாரன் வெயிட் பண்ணு...
ஒகே கௌதம் .....என்றதும்.
அங்கிருந்து சென்ற கௌதம் அவன் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த ஐஸ்வர்யா வின் ஜுஸ் யில் மாத்திரம் போதை மாத்திரைகளை இட்டு கரைத்தான்........
ஐசு இது எதுவும் தெரியாமல் அவன் மீது கொண்ட காதலை எண்ணி பூரித்துக் கொண்டிருந்தாள்.....
ஐசு இந்தா உனக்காக நானே ரெடி பண்ணது
குடிச்சுட்டு எப்படி இருக்கு என்டு சொல்லு பார்ப்போம் என்று ஜுஸ் கிளாஸை ஐசுவின் பக்கம் நீட்டினான்...... கௌதம்
அதனை எந்த வித தயக்கமும் இன்றி வாங்கி குடித்தாள் ஐசு........
அதனை குடித்த சில நிமிடங்களிலே அவளிற்கு போதையை தூண்டியது. முதன் முறையாக போதையை எடுத்துக்கொண்டதால் அவளிற்கு தலை சுற்றலுடன் வாந்தி வருவது போல குமட்டிக் கொண்டும் வந்தது....
இதனை பார்த்த கௌதம்
.. என்னாச்சு ஐசு?
என்ன செய்து ஏன் ஒரு மாதிரி இருக்க என்டு நல்லவன் போல் நாடகமாடினான்.....
கௌதம் எனக்கு வாமிட் வருவது போல் இருக்கு என்றாள்..
ஐசு அது என்னோட ரூம் தான் நீ அங்க இருக்குற பாத் ரூம பயன்படுத்திக்கோ என்று எதிரே இருந்த அறையை காட்டினான் கௌதம்....
ஐசுவும் வேகமாக சென்று வாஷ் பேசினில் வாந்தியெடுத்தாள்.
அவளின் உடல் ரொம்ப சோர்வாக இருப்பதாக உணர்ந்தாள்.
போதையின் வீரியத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பாத்ரூமில் இருந்து தட்டுத்தடுமாறி தள்ளாடிய படியே வந்தவள் கட்டிலின் விளிம்பில் அமர்ந்தாள்.
சிறிது நேரத்தில் அவளது கண்கள் சொருக கட்டிலில் அப்படியே சாய்ந்தாள்...........
கௌதம் வேகமாக அறையை நோக்கி வந்தான்.
அறைக்குளே வந்ததும் கதவை தாழிட்டுக் கொண்டான். கட்டிலில் கிடந்த ஐசுவைப் பார்த்து.
"ஐசு இந்த நாளுக்காகத்தான் இத்தனை நாள் உன்னோட நடிக்க வேண்டியதா போயிற்று என்று சொல்லிக் கொண்டே ஐசு வை நெருங்கினான்.. .
அவளை கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்தான்.அவளோ எதையும் அறியாதவளாக அறிவிழந்த நிலையில் இருந்தாள் அவனை அனுமதிக்கும் எண்ணத்திலோ அல்லது அவனை தடுக்கும் நிலையிலோ அவள் இல்லை.........
அடுத்த சில மணித்தியாலங்களின் பின் ஏனோ அரை குறையாக கண் விழித்த ஐசுவிற்கு தலை வெடிப்பது போல் வலி ஏற்பட தன் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர முயற்சித்தாள். ஆனால் அவளால் முடியவில்லை பெரும் முயற்சியின் பின் கட்டிலின் மீது நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள்.
மெல்ல மெல்ல கண்விழித்துப் பார்க்க கௌதமும் அவளும் ஒன்றாக இருப்பதையும் இருவரின் நிலையையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.
" இங்க என்ன நடக்குது?
நான் எப்படி இங்க வந்தன் ?.... இது .. இது எப்படி நடந்துச்சு...
கண்களில் கண்ணீரோடு ஒரு வித பதற்றத்தோடு கேட்டவள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தாள்............
ஐசு .... நீ இப்போ ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற லவ் பன்ற எல்லாரும் இப்படித்தான் இருப்பாங்க ... என்றான் கௌதம்..
ஆனால் நான் சுய நினைவோட இல்லையே எப்படி இது நடந்துச்சு ....? என்று ஐசு கூற....
அவளை யோசிக்க கூட விடாமல் கௌதம் ஐசு எப்படியும் உன்னைய நான் தான் கல்யாணம் பன்ன போறன் அப்றம் என்ன பயம்.
நீ இங்க நடந்தத யார்டயும் சொல்லாத என்று அடுக்கடுக்காக ஏதேதோ பேசி அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.....
ஐசு நிம்மதி இல்லாமல் ஏதோ பெருசா தப்பு பண்ணிட்டம் அப்பா முகத்தில எப்படி முழிக்கிறது... என்றவாறே நகத்தை கடித்துக் கொண்டு நடந்து சென்றாள் .............
வீட்டிற்கு வந்தும் ஐசுவிற்கு நிம்மதி இல்லை..
அப்பா வின் முகத்தை கூட பார்த்து பேச தைரியம் இல்லாமல் கூனிக்குறுகி அப்பாவுடன் பேசும் போதெல்லாம் ஒரு வித குற்ற உணர்ச்சியோடு பேசினாள்......
கௌதமின் உண்மை முகம் அறிய ஐசுவிற்கு நீண்ட காலம் தேவைப்படவில்லை.
கொஞ்ச நாட்களிலேயே ஐசுவை அவன் தன்னை விட்டு ஒதுக்கிவிட நினைத்தான். அவளிடம் பேசுவதையும் குறைத்துக் கொண்டே வந்தான்...
தீடிரென ஒரு நாள்....
ஹலோ கௌதம்..
எதுக்கு எனக்கு ஒரே கோல் பண்ணி டிஸ்ரப் பன்ற நான் தான் பிஸியா இருக்கன் என்டு சொன்னேன் தானே..
என்று எதிர் முனையில் கௌதம் கோவமாக கத்தினான்...
தயவு செஞ்சி நான் சொல்றதை கேளுங்க கௌதம்.. ஏன் என்னைய எப்பவும் அவொயிட் பன்றீங்க என்னோட கொஞ்சம் பேசுங்க என்றுதானே கேக்றன் என்றாள் ஐசு..
உன்னோட பேச எனக்கு இஷ்டம் இல்ல என்னைய விடுறியா ப்ளீஸ்....
ப்ளீஸ் இனிமேல் கோல் பண்ணாத
நமக்குள்ள இனி சரிவராது என்றான்...
ஏன் கௌதம் இப்படியெல்லாம் சொல்றீங்க.. என்னைய கல்யாணம் பன்றதா சொன்னீங்களே?..
அப்போ நமக்குள்ள நடந்தது ?... என்றவாறே மௌனம் காத்தாள்..
அதலாம் ஜஸ்ட் ஒரு ஆக்சிடன்ட்
அதலாம் மறந்துடு நீ வெளிய சொன்னால் உன்ட மானம் தான் போகும்..
இதுக்கலாம் போய் கல்யாணம் பண்ணனும். என்றால் நான் நிறைய பேர கல்யாணம் பண்ணனும் நான் பார்த்தது பழகின பொண்ணுல நீயும் ஒரால் அவ்வளவுதான். உன்னால என்னமுடியுமோ செஞ்சிக்கோ ஒரு பொண்ணா உன்னால என்னதான் ஏழும் போய் அழு இல்லாட்டி செத்து போடி என்றவாறே நம்பரை ப்ளாக் செய்து ஃபோன் யை ஆஃப் செய்தான் அவன்....
அவளோ நிலை குழைந்து கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுக்க கைகளால் முகத்தை மூடி அழ தொடங்கினாள்.. பாவம் அந்த அப்பாவி வேறு என்னதான் செய்வாள்....
எல்லாமே அவன்தான் என்று இருந்தவள். எதையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் பித்து பிடித்தவள் போல் இருந்தாள்......
அப்போதுதான் தன் வீட்டிற்குள் நுழைந்த கிருஷ்ணமூர்த்தி தன் மகள் கதவோரமாய் சாய்ந்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.....
பரிதவித்த படி அழுது கொண்டிருந்தாள் ஐசு....
என்னாச்சு ஐசு? ஏன் நீ அழுதுட்டு இருக்க....
சொல்லுமா என்று பக்கத்தில் அமர்ந்தவாறே கேட்டார்.....
அப்பா என்னைய மன்னிச்சுடுங்க நான் பெரிய தப்பு பன்னிட்டன். உங்களையும் ஏமாத்திட்டன். என்று அப்பாவின் முகத்தை கூட பார்க்க தைரியம் இல்லாமல் தலையை குனிந்தவாரே கண்ணீரோடு கூறினாள்...
ஐசு என்னாச்சு சொல்லுமா?.....
என்று பதட்டத்துடன் மீண்டும் மீண்டும் கேட்க அவளும் நடந்தவற்றை எல்லாம் கண்ணீரோடு தேம்பி தேம்பி கூறினாள்....
அனைத்தையும் கேட்ட கிருஷ்ணமூர்த்திக்கு தலையே வெடிப்பது போல் இருந்தது . ஒரு கணம் சுய நினைவிழந்து ஐசு வையே கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
நான் உன்னைய இப்படியா வளர்த்தன்? .. இப்படி ஒரு காரியம் செஞ்சிட்டு வந்து இருக்கியே... மானத்தையே தொலைச்சுட்டு வந்துட்டியே... என்று கோபமடைந்து ஆத்திரத்தில் கத்திய கிருஷ்ணமூர்த்தி ஐசு வின் கன்னத்தில் அடித்தார்.....
உன்ன அம்மா இல்லாத பிள்ள என்டு நீ சொல்ற எல்லாம் செஞ்சேன். நீ கேக்கற எல்லாம் வாங்கி தந்தன். ஏன் என்டு தெரியுமா?.. ஏன்டா நான் உன் மேல அவ்வளவு நம்பிக்கை வச்சு இருந்தன் ஆனால் நீ எல்லாத்தையும் நாசமாக்கிட்டியே...... என்று ஆத்திரத்தில் வாய்விட்டு அழுதார்..,.
பாவம் அந்த தந்தை அவர் தான் என்ன செய்வார்.. பிள்ளை தான் வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருந்தவருக்கு
வாழ்க்கையையே இழந்து வந்த தன் பிள்ளையை பார்ப்பதற்கு விருப்பம் இல்லாமல் வெளியே எழுந்து சென்றார்....அவர் சென்ற வேகத்தில் தன் முன்னால் இருந்த பூச்சாடியை தன் மகள் மீது உள்ள கோபத்தில் எட்டி உதைத்து தள்ளிவிட்டு வேகமாக வெளியே சென்றவர் தன் பைக்கை எடுத்துக்கொண்டு பைக்கின் சக்கரங்கள் சுழன்ற வழியே அவரின் யோசனைகளும் சுழன்று கொண்டே செல்ல எங்கே போவதென்று தெரியாமல் பைக் சென்ற வழி அவரும் சென்றார்..............
Story By : Nifsha Banu
(Mannar)
மிகுதி அடுத்த பாகத்தில்
தொடரும்......
Part 01
https://studentsmaking.blogspot.com/2024/07/part-01.html
Part 02
https://studentsmaking.blogspot.com/2024/07/part-02.html
Part 03
https://studentsmaking.blogspot.com/2024/07/part-03.html