19) மாணவர்களது கவிதைகள் (2021/10/21)

19) மாணவர்களது கவிதைகள் (2021/10/21)

கவிதைகள்-04

ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇
                 Click


கவிதை-01




அன்புள்ள அப்பா

கண் கண்ட முதல் ஹீரோ 
அனைவருக்கும் அப்பா தான் 

செல்லத்திற்கு பஞ்சம் இல்லை 
அப்பாவிற்கு செல்லப் பிள்ளை 

முறைத்துக் கூட பார்த்ததில்லை 
குறை சொல்ல தோன்றவில்லை 

குரலில் கடுமை இருந்ததில்லை 
தனியே தவிக்க விட்டதில்லை 

பிஞ்சுப் பாதம் நோகுமென்று 
கால் தரையில் பட விட்டதில்லை 

சில தவறுகள் செய்தால் கூட 
எனை விட்டு கொடுத்ததில்லை 

வேண்டியது வேண்டும் முன்னே 
கை வந்து சேர்ந்துவிடும் 

அன்பு கொண்டு அரவணைத்து 
பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை 

நீங்கள் அருகில் இருக்கும் வரை 
எனக்கு எந்த குறையுமில்லை 

பட்டம் விட கற்றுக் கொடுத்து 
பட்டப் படிப்பு படிக்க வைத்து 

எனைச் சுமந்த தோள்மீது 
என் பிள்ளையையும் சுமந்தீரே 

நாட்கள் உருண்டு ஓடியதே 
நன்றி உமக்கு உரைத்த தில்லை



name : Zainab 
school : baderiya college age : 11  
from : wilpola Aranayake 
district :kagalla




கவிதை-02


காத்திருப்பு

உன்னை காணாதப் பொழுது என் கண்களில் ஏற்படுகின்ற அந்த துடிதுடிப்பு.....
உன்னை கண்டப் பொழுது என் கண்களில் ஏற்படுகின்ற அந்த படபடப்பு!
இது என்ன புது வித மாற்றம்............
சூரியனை கண்ட பனித் துளிப் போல் மறையாது மழையை கண்ட மழைக் குருவியாய் பறக்க நினைக்கின்றது என் மனது
உன்னிடம் பேசாத இந்த நொடி தாயை தொலைத்தக் குருவிக்குஞ்சாய் என் மனம் தவி தவிக்கின்றது
உன்னை பார்க்க துடிக்கின்ற என் கண்கள் புயலில் மாற்றிக்கொண்ட புழுதியாய் அலைப்பாய்ந்து கொண்டிருக்கின்றது 
உன் பார்வையால் மயக்கினாய் என்னை உன் பார்வையை பார்த்த நொடி பறிக் கொடுத்தேன் என்னை
இரவைக் காண காத்திருக்கும் கடும்புல்லாய் என் இனியவனைக் காண காத்திருக்கின்றது என் பொழுதுகள் உன் அழைப்புக்காக காத்திருக்கின்றேன் என்னை ஒரு முறையாவாது தொடர்பு கொள்வாயா? என் அன்பே...........................
    
                       உன்னில் 
                       ஒருத்தி



பூராஜ் ரூபிணி
கம்மடுவ தமிழ் மகா வித்தியாலயம்.
12(உ /த ).
18.
நாகல வத்த கம்மடுவ
மாத்தளை.




உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇


Contact : Click here 



கீழுள்ள Like இனை அழுத்தி ஆக்கங்கள் அனுப்பியவர்களை  ஊக்கப்படுத்துங்கள்.