20) மாணவர்களது சிறுகதைகள் (2021/10/24)

20) மாணவர்களது சிறுகதைகள் (2021/10/24)


சிறுகதைகள்-04

ஏனைய அனைத்து சிறுகதைகளையும் பார்வையிட👇👇
              Click



சிறுகதை-01




தொலை அன்பு

        தெருவிளக்கின் மங்கலான ஒளியில் நிழல் பின்னோடு ஓடிவர ஓட்டமும் நடையுமாய் வந்தான் . கொழும்பில் எந்த நேரமும் பஸ் இருக்கிறது.இருப்பினும் இந்த பஸ்ஸில் சென்றால்தான் குமரனின் ஊருக்கு செல்லும் பேருந்தை பிடிக்க முடியும்.பஸ்ஸில் ஏறி ஓரமாய் அமர்ந்து வீதியை பார்த்தவாறு கொல்ல முயற்சிக்கும் தனிமையை தான் கொல்ல முயற்சி செய்து பழைய ஞாபங்களில் லையித்து இருந்தான்.பிறந்ததிலிருந்து அம்மாவை கண்டதில்லை.குமரன் அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்து விட்டான் .அப்பாவின் கையை பிடித்து நடந்ததை விட அப்பாவின் வேகத்தை ஈடு கொடுக்க முடியாமல் நடந்ததே அதிகம்.அப்பா முன்னே வேகமாக நடந்து செல்ல குமரன் பின்னே அவரை ஈடு கொடுக்க முடியாமல் நடந்து செல்வான் என்றாவது ஒருநாள் உங்களை ஈடுகொடுத்து நடப்பென் என்ற நினைப்புடன் ......
        குமரனின் அப்பா பாடசாலை அழைத்து செல்லும் போது தினமும் போகும் வழியெல்லாம் "நீ இப்படி ஆக வேண்டும்.இப்படி இருக்க வேண்டும்.உன்னை ஒரு உயரத்தில் கொண்டுபோய் விடுவேன்."என்று ஒரே பாட்டை திரும்ப திரும்ப பாடுவார் . அவர் ஒன்று சொல்லி அடுத்தது என்ன சொல்ல போகிறார் என்பது குமரனுக்கு தெரிந்தாலும் இப்போதுதான் புதிதாக கேட்பது போல் தலையாட்டி கொண்டு போவான். அவனுடைய தந்தை அடிக்கடி நீ எப்படி என்னை பெரியவனாகி பார்த்து கொள்வாய் ?என்று எல்லாரும் வழமையாக கேட்கும் கேள்வியை கேட்டார். அவ்னும் இப்படி அப்படி என்று ஒருவாறு சொல்லி முடித்தான் .இதற்கு பின் இவனது தந்தை இந்த கேள்வியை அடிக்கடி கேட்டு கொண்டே இருப்பார். ஒருமுறை கோபம் வந்து இப்படியெல்லாம் பார்த்து கொள்வேன் என ஒரு தாளில் எழுதி கொடுத்தான்.குமரனுடய குறும்புதனத்தால் எந்த பரிட்சையிலும் தேறவில்லை . அவனுடைய தந்தை அதை அவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை. வயது செல்ல செல்ல தந்தையின் நிலைமையும் வீட்டின் நிலமையும் மோசமகியது.குமரன் தான் கொழும்புக்கு செல்ல முடிவு எடுத்தான்.தந்தை அதற்கு மறுப்பு தெரிவித்து "இங்கே எங்காவது வேலை செய்"என்று சொன்னார்.இருப்பினும் தன்மானம் என்று தனக்கு தானே கற்பித்து கொண்டது அவனை தடுத்து . அதன் பின் தந்தை ஒன்றும் சொல்ல வில்லை.நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று வந்த அவனுக்கு ஏமாற்றம் மட்டுமே வந்தது ஒழிய மாற்றம் வரவில்லை.
       ஒருமாதம் சென்றபின் அப்பாவை பார்க்க சென்ற அவனுக்கு இன்னும் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. அவன் அப்பா வீட்டலிருக்கவில்லை . எங்கு தேடியும் கிடைக்கவில்லை.அவனுக்கு விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் அவன் வீட்டுக்கு செல்வான் அப்பா இருப்பார் என்ற நம்பிக்கையுடன்.....இன்றும் அப்படித்தான் செல்கிறான்.
       பஸ்ஸில் இருந்து கீழே இறங்கினான்.அவன் ஊருக்கு செல்லும் பஸ் வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது .அவன் வீதியை உற்று நோக்கி கொண்டிருந்தான்.முதியவர் பாதையை கடக்கும் போது ஒரு வாகனத்தில் மோதி இரத்த வெள்ளமாய் கிடப்பதை பார்த்த அவன் ஓடி போனான். முகமெல்லாம் இரத்தம்...முதியவரின் முகம் தெரியவில்லை.இரண்டு மூன்று பேர் அப்பெரியவரை தூக்க இவனும் அவரை தூக்கி வைத்தியசாலையில் சேர்த்தார்கள்.
       தான் அப்பாவை தேடி வந்த இவனுக்கு இவ்வாறு நடந்ததும் மனதுக்குள் கலவரம் பிடித்து கொண்டது. கட்டாயம் பெரியவரின் முகத்தையாவது பார்க்க வேண்டும் என்று கீழே பார்த்தான். இந்த கலவரத்தில் அவனது செருப்பு அருந்து இருப்பதை அவதானித்தான். உடனே செருப்பு கடையோரம் ஓடினான்.கருப்பு உடல், நரைத்த முடி ,பலநாள் சவரம் செய்யாத நறை விழுந்த தாடி ...அறுபது வயது படைத்த ஒருவர் இருந்தார். "ஐயா! இச்செருப்பை தைத்து தாங்களேன்." என்று கூறி கொடுத்தான் . 
        அவரும் பின் முறுவழுடன் வாங்கி கொண்டார்.அந்த புன்முறுவலில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. அதன் பின் அவர்கள் எதையும் பேசிக்கொள்ளவில்லை.குமருனுகோ அடிபபட்டு கிடக்கின்ற அந்த பெரியவரின் முகத்தை பார்க்க வேண்டும் என்ற ஒரு வேகம் இருந்தது.அவர் தன் தந்தையான கூட இருக்கலாம் என்று ஒரு சந்தேகம்.... பின் தைத்த செருப்பை வாங்கி கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் .
      செருப்பு தைப்பவர் குமரன் தொலைவில் ஒருபுள்ளியாக மறையும் வரை அவனை பார்த்து கொண்டிருந்தார் .அவரை அறியாமலேயே அவர் கண்களில் நீர் பெருகியது . அவர் தான் வைத்திருந்த பெட்டியில் இருந்து ஒரு தாளை எடுத்து பார்த்தார் .அவரின் கண்ணீர் தாளை வாசித்தார். அது குமரன் எழுதிய தாள் தான் அப்பாவை எப்படியெல்லாம் பார்த்து கொள்ள போகிறேன் என்று _எழுதியது.        
         *அன்புக்காக மட்டுமே கடைசி காலககளில் ஏங்குபவர்களுக்கு பணத்தை மட்டும் கொடுத்து ஈடு செய்ய முடியாது என்ற யதார்த்தம் குமரனுக்கு இன்னும் புரியவில்லை.புரியும் வரைக்கும் அவன் தேடுவான் அவனது தந்தையை.........*


R.Dayana
12
Matale



சிறுகதை-02




Name= Zikra fairoos 
Grade =2
School. Al-Gazzaly primary vidiyalaya atulugame. Bandaragama




சிறுகதை-03


தாயின் சொல்லைத்தட்டாதே 

ஒரு தாய்க்கோழி தனது மூன்று குஞ்சுகளுடனும் இரை தேடச்சென்றது. தாய்க்கோழி தனது கால்களால் கிளறி உணவுகளை எடுத்து தனது குஞ்சுகளுக்கு கொடுத்துக் கொண்டு இருந்தது. 
                                            அவ்வேளை பருந்து ஒன்று வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இதை அவதானித்ததாய்க்கோழி குஞ்சுகளைத்தன்னுடனே இருக்கும்படி கூறி எச்சரிக்கையாக இருந்தது. அதில் ஒரு குஞ்சு தாய் கூறியதை கேட்காமல் தாயை விட்டு சற்று தூரம் சென்று விட்டது. மற்றைய இரு குஞ்சுகளும் தாயின் இறக்கைகளினுள் நுழைந்தது கொண்டன. 
                                                                                                       மீண்டும் தாய்க்கோழி எச்சரித்தும் தனியாக இருந்த குஞ்சுக்கோழி அதனை கேட்கவில்லை. சில நொடிப்பொழுதில் தனியாக நின்ற குஞ்சுக்கோழியை அவதானித்த பருந்து வேகமாக வந்து தனது கால்களினால் அதனை தூக்கிக்கொண்டு சென்றது. தாய்க்கோழி வேகமாக பறந்து சென்று தனது குஞ்சைக்காப்பாற்ற முயன்றது. பயன் கிடைக்கவில்லை. தாய்க்கோழி கூறியபடி கேட்டிருந்தால் குஞ்சுக்கோழியின் உயிர் தப்பி இருக்கும். எனவே நாமும் தாயின் சொல்லைத்தட்டாது தாயின் சொற்படி கேட்டு நடப்பது நல்லது.



M.R.M RAKEEB 
NOORANIYA MUSLIM VIDYALAYAM 
GRADE 3
8 YEARS
NUGAGAHAGEDARA 
PAHAMUNA 
NARAMMALA
KURUNEGALA



உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇


Contact : Click here 



கீழுள்ள Like இனை அழுத்தி ஆக்கங்கள் அனுப்பியவர்களை  ஊக்கப்படுத்துங்கள்.