கவிதைகள்-05
ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇
கவிதை-01
மதச் சுதந்திரம்.....
பாரினில் மானிடன்
வேண்டிடும் மதத்தினைப்
பின்பற்றிட முடியும்...
ஒவ்வொரு தேசத்திலும்
பல்வேறு மதங்கள் பின்பற்றப்படுகின்றனல்லவா!
நாம் பின்பற்றும்
மார்க்கம் தவிர்ந்த
ஏனைய மதங்களை
மதித்திட கூறும்,
நன்னெறி போற்றிடும்
மதங்கள் எல்லாம்
பஞ்ச பாதகங்களை
எதிர்த்தே நிற்கின்றன !!!
உன் நெஞ்சுக்கு விரும்பிய
வழியினை (நெறியினை)
சன்மார்க்கமாய் எடுத்து நடந்திடு...
மதமொன்றும்
மதம் கொண்ட யானை அல்ல
பிறர் மனதைப்
புரிந்து நடத்திடும் ஆணை
(இறை ஆணை)
முரண்பாடுகள் எழுகின்ற
வையகத்தில்
முறையாக நடக்கச் செய்வது
மதங்களே!
பெற்றோரை மதிக்காத
பூவுலகிலே
அன்பெனும் கருணையால்
பெற்றோரை மதிக்க வைத்தது
மதங்களே!
ஆபத்தெனும் போதினிலே
அவசர அவசரமாய்
உதவ தூண்டில்
மனிதாபிமானமா?
மதக்கொள்கையா?
உதவி என்று கேட்டுவரும்
போதினிலே - தம்
உள்ளத்தால் வெறுக்காது
கொடுத்துதவுவது
மனிதாபிமானமா?
மதக்கொள்கையா?
நிறத்தினால்
குணத்தினால்
வேறுபட்ட போதும்
உன் மதத்தினால்
நல்வழி தேடும்
மாந்தர்கள் கோடி....
கலியுகம் கண்ட உலகமே!
உன் கற்பாறை உள்ளதாலும்
கடின உழைப்பாலும்
நீ விதியை
வெல்ல பார்க்கின்றாய்
ஆனாலும்
மதமெனும் நேர்வழியே
உன் மனதுக்கு நிம்மதி தரும்
உதயசூரியனின் வருகை
முதல் அஸ்தமனம் வரையும்
அஸ்தமனம் முதல்
இருளாகி விடியும் வரையும்
மனதுக்குள் ஏற்படும்
துன்ப துயரங்களையும்,
கஷ்ட நஷ்டங்களையும்
சமாளிக்க முடியுமானது
மத நேர்வழியே !
மத மூலமே!
யாருக்கும்
எம் மதத்தையும்
பின்பற்றும் உரிமை
மதச்சுதந்திரமே!
இது உலகத்தில்
பல்வேறு சமூகத்திற்கும்
கொடுக்கப்பட்ட
ஜனநாயக சுதந்திரமே!!!
Asna Rahmathullah.
Muslim Ladies Arabic College Kal-Eliya.
Final Year.
Grade 13
கவிதை-02
இருள் சூழ்ந்த இந்நொடியினிலும்
உன் அழகிய வதனமதை வான்மேலே நான் விண்மீனாய்க் காண்கின்றேன்....
உன் ஒளியில் சிறைப்பட்டேன் விடுதலை பெற்றிடாக் கைதியாக...
ஊரும் உள்ளங்களும் உறங்கிடும் வேளையிலும் ......
அம்பும் வில்லும் கொண்டு தாக்கப்பட்டதாய் உணக்கிறேன் என் மனம் எனும் பூமி..
அம்பு பாய்ந்த காயம் ஆறவில்லையே இன்னும் நீ வம்பு செய்து என்னை விட்டு எங்கு சென்றாயோ.....
நீ பாய்ச்சிய அம்பினால் தோய்ந்த இரத்தமதைக் கொண்டு நீ தந்திட்ட நினைவுகளை நான் என் மனவறையில் காவியமாய் செதுக்கி விட்டேன்...
செதுக்கிய காவியத்தின் ஈரம் காயும் முன்பே ....
வந்துவிடு என் மனவறைக் காவியத்தின் சொந்தக்காரனாய்......
JA
Assiraj maha vidyale national school,
central camp,
Ampara.
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇
Contact : Click here
கீழுள்ள Like இனை அழுத்தி ஆக்கங்கள் அனுப்பியவர்களை ஊக்கப்படுத்துங்கள்.