கட்டுரைகள்-04
ஏனைய அனைத்து கட்டுரைகளையும் பார்வையிட👇👇
கட்டுரை-01
கல்விச் செல்வம்
இன்றைய உலகில் கல்விச் செல்வம் பொருட் செல்வம் என இரு வகைச் செல்வங்கள் உண்டு என்பதை எல்லோரும் அறிந்த விடயம். இரு வகைச் செல்வங்களையும் எடைபோட்டுப் பார்த்தால் கல்வியே சிறந்த செல்வமாக இருப்பதை அறியலாம்.காரணம், கல்விச் செல்வம் நிலையானது. காலத்தால் அழியாதது.கல்வரால் கவர முடியாதது.அக்கினியால் அவியாதது. வெள்ளத்தால் அள்ளிக் கொண்டு ஓட முடியாதது.கெடுக்கக் கொடுக்கக் குறையாதது. இறைக்க இறைக்க சுரக்க வல்லது.
பேதையை ஞானியாக்கும். மூடனை முதல்வனாக்கும்.ஏழையை இயல்வோனாக்கும். வறியவனை வாழவைக்கும்.அறிவிலியை சான்றோனாக்கும். அறியாமையைப் போக்கி அடிமை உணர்வை நீக்கும். ஆனால் ,பொருட் செல்வமோ பொழுதொறு வண்ணம் மாறும். வெள்ளத்தால் அள்ளுண்டு போகும். அள்ள அள்ள இல்லாதொழியும். தீயினால் வெந்து போகும். திருடரால் கொள்ளை போகும். ஞானியை பேதையாக்கும்.ஆழ்பவனை தாழ்விழ் தள்ளும். அரசனை ஆண்டியாக்கும். இதனால் தான் ,
"கல்வியில்லாதவன் கண்ணில்லாதவன்" எனக் கற்றோர் கூறினர். படிப்பறிவில்லையென்றால் பகுத்தறிவில்லையென்றனர். கல்வியானது மனித இனத்துக்கு மாண்பு தரும் மருந்து போன்றது. ஒவ்வொருவருக்கும் உயர்வு தரும் ஒளி விளக்கு போன்றது. அடிமைத்தனத்தை அறுத்து ஆளவைக்கும் திறன் கொண்டது. எனவே தான்
'கண்ணுடைய ரென்பர்கற்றோர்; முகத்திரண்டு புண்ணுடையோர் கல்லாதவர்'
என்றார் திருவள்ளுவர். 'எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும் என்றார் ஔவையார்.
தனது தமிழ்ப் புலமையினால் அரசர்கள் பலரை ஆட்டிப் படைத்த ஔவையார் கூட ஒரு சந்தர்ப்பத்தில் 'தான் கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது உலகளவு என்பதை ஒத்துக் கொண்டார்.
இத்தகைய சீறும் சிறப்பும் பெற்ற கல்வியைக் கற்பதற்கு வயதெல்லை கிடையாது. மானிடப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும் சேர்க்க வேண்டிய செல்வம் கல்வி. கல்வியை கற்றால் மட்டும் போதாது. கற்க வேண்டிய அனைத்தயும் தெளிவுற, பிழையற கற்க வேண்டும். அத்தோடு எதை எவ்வாறு கற்றோமோ அவ்வாறே அதன்படி நடக்கவும் வேண்டும்.அதை தான் வள்ளுவரும்,
கற்க கசடற, கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
எனக் குறிப்பிட்டார். ஆகவே கல்விச்செல்வத்தால் நமது குடும்பமும் நமது சமூகமும் நமது தேசமும் முன்னேற வழியுண்டு என்பதை மனதில் கொண்டு அதைத் தேட முயற்சித்தல் வேண்டும்.
"பாடை ஏறினும் ஏடது கை விடேல்"
Z.F.Zahla
17 years old
Kandy Badi ud din mahmud girls college
கட்டுரை-02
நூலகம்
''கண்டதும் கற்கப் பண்டிதனாவான் ''
ஆம்! வாசித்தல் ஓர் சிறந்த பொழுதுபோக்கு மட்டுமன்றி வசிப்பதனாலேயே மனிதன் பூரணமாகின்றான். வாசித்தல் மூலம் மனிதன் உலகின் பல்வேறு விஷயங்களையும் அறிந்து கொள்கின்றான்.
இவ்வாறு நூல்களைக்கொண்ட இடமே நூலகமாகும். இது ஒரு நூலகரினால் ஒழுங்குபடுத்தப்பட்டு இருக்கும்.எமக்கு என்னென்ன விடயங்கள் வேண்டுமோ அந்தந்த விடயங்களில் எல்லாம் வோண்டிய நூல்கள் யாவும் அங்கிருக்கும்.
எப்போதும்அமைதி காக்கப்பட்டிருப்பதால் எந்தவித இடையூறுமின்றி வாசிப்பதற்கோ, படிப்பதற்கோ சிறந்த இடமாக விளங்குவது நூலகமே.
உயர் வகுப்புகளிலோ, பல்கலைக்கழகங்களிலோ சரி பாடவிதானத்தில் ஒரு பகுதியைமட்டுமே கற்பித்து விட்டு மீதி விளக்கங்களை நூலகத்தில் கற்கும்படி கூறுவர்.
சிறுவயதிலேயே நாம்நூலகத்தைப் பயன்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.
பாடசாலை நூலகங்கள், கிராமிய நூலகங்கள், அலுவலகங்களில் உள்ள நூலகங்கள் என எங்கு பார்ப்பினும் நூலகங்கள் காணப்படும். ஆசிரியர்கள் போல் உலக அறிவு விஷயங்களைத் தரும் நூலகங்கள் எமக்கு நல்ல நண்பர்கள் போன்றனவாகும்.
M.R.M ILMAS
NOORANIYA MUSLIM VIDYALAYAM
GRADE 6
NUGAGAHAGEDARA PAHAMUNA
NARAMMALA
KURUNEGALA
கட்டுரை-03
இயற்கை வளங்களை பாதுகாப்போம்.
....... இன்றைய சூழலில் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவதில்லை. சுத்தமான நீரை பருக முடியாத நிலை உள்ளது. நீர், நிலம் இவ்விரண்டுமே தனது தன்மையை இழந்து வருகிறது. நீர் நிலைகள் அழிந்தும், வன வளங்கள் அருகியும் வருவதால் நாம் இது போன்ற பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது.
...... 25 ஆண்டுகளில் நாம் அனுபவித்து வந்த இயற்கை வளங்கள், இன்று அருகி வருவதைக் காண்கிறோம். நீர், மணல், வளங்கள், வன உயிர்கள், புல் வெளிகள், தாதுக்கள் என எண்ணற்ற இயற்கை வளங்களை நாம் பெற்றுள்ளோம். இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டும் இல்லாமல் அவை அழிவதை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்... நாம் அனைவரும் கடும் முயற்சி எடுத்து இயற்கை வளங்களை பாதுகாப்போம்....
NUHA NAWFAR
AL AMEEN CENTRAL COLLEGE
GRADE. 09
KURUNEGALA.
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇