Mohamed Ameer Fathima Shahna கட்டுரை
தொலைக்காட்சியும் விளைவுகளும்.
இன்று உலக மயமாக்களின் காரணமாக பல தொழிநுட்ப சாதனங்கள் நடைமுறையில் உள்ளன . அவற்றில் தொலைக்காட்சி , கணினி , தொலைபேசி , பத்திரிகை எனப் பல வகைகள் உள்ளன. அவற்றில்தொலைக்காட்சியானது மனிதவாழ்வில் மிகுந்த செல்வாக்குச் செலுத்துகின்றது. அவற்றில் சாதகமான பல விடயங்கள் , பாதகமான சில விடயங்களையும் சுமந்து வருகின்றது.
தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சி நிரல்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் செய்திகள் , நாடகம் , திரைப்படம் , சிறுவர் நிகழ்ச்சிகள் , நற்சிந்தனைகள் , கலைகள் , விளையாட்டு நிகழ்ச்சிகள் , வர்தக விளம்பரங்கள் , நகைச்சுவைகள் , அறிவுப் போட்டி என நிகழ்ச்சிகள் பல உள்ளன. இவற்றை தொலைக்காட்சி நிறுவனங்கள் அவற்றின் வளர்சிக்கேற்ப வெளிப்படுத்துகின்றன. தொலைக்காட்சி நிறுவனங்களிடையே ஏற்படுகின்ற போட்டிக் காரணமாக புது புது நிகழ்ச்சிகளை இணைத்துக் கொள்கின்றனர்.
அதிகமான பெற்றோர் தமது பிள்ளைகள் தொலைக்காட்சி பார்பதை விரும்புவதில்லை. ஆனால் மாணவர்களின் அறிவை தூண்டும் வகையிலும் தமது கல்வி வளர்ச்சியில் பாரிய செல்வாக்கை செலுத்துகின்றது. செய்திகள் மூலம் பொது அறிவையும் , நாட்டு நடப்புகளையும் , உலக நிகழ்வுகளையும் அறிவதுடன் பல போட்டி நிகழ்ச்சிகளும் சிறுவர் நிகழ்ச்சிகளாலும் விளையாட்டு மூலமும் மாணவர்கள் தமது அறிவை வளர்த்துக் கொள்கின்றனர்.
கலைகள் நிகழ்ச்சியில் தையல் , ஓவியம் , சமையல் , அலகுக் கலை , சிறு கைத்தொழில் வழிக்காட்டிகள் என பல வர்தக கலைகளை ஒளிபரப்புகின்றது. இதனால் பல வீட்டுப் பணிப் பெண்கள் நன்மையடைவதுடன் சிறுக் கைத்தொழிலுக்கும் வழி வகுக்கின்றது.
பல்வேறு நேர அடிப்படையில் செய்திகளைத் தொகுத்து ஒளிபரப்புவதால் உலகம் அனைவரதும் வீடுகளுக்குள்ளும் வந்துவிட்ட நிலை உறுவாகிவிட்டது. காரணம் இன்று உலகில் தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை என்றே கூறலாம். நாட்டின் அரசியல் நிலைகளை மாற்றும் முக்கியமான விடயங்களையும் சர்வதேசம் பற்றிய தகவல்களையும் செய்திகள் மூலமே அறியக் கூடியதாக உள்ளது.
வினோத உலகத்தின் விந்தைகளை சிலர் இணையம் மூலமும் பலர் தொலைக்காட்சி மூலமுமே அறிகின்றனர். புதிய புதிய கண்டு பிடிப்புக்கள் , பல் தரப்பட்ட கடல் வாழ் அங்கிகள் , நுண்ணங்கி அதிசயங்கள் போன்றவற்றை நிகழ்வாகவும் படமாகவும் அனைவரும் பார்த்து விளங்கும் வகையில் ஒளிபரப்பப் படுகின்றது.
தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை உலகில் தங்கி வாழ்வோரின் முக்கிய பொழுதுபோக்கு சாதனமாக தொலைக்காட்சி விளங்குகின்றது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்பது மட்டுமல்லாது இருவட்டு மூலமும் பல நாடகம் , திரைப்படம் போன்றவற்றையும் பார்த்து , இரசித்து தமது பொழுதை கழிக்கின்றனர்.
பல் தரப்பட்ட இனிமையான விடயங்களை கொண்டுள்ள தொலைக்காட்சி சில கசப்பான விடயங்களையும் கொண்டுள்ளது. முக்கியமாக மாணவர்களின் கல்வி அறிவுக்கு மிகுந்த காரண கருத்தாவாக விளங்குகின்றது. மாணவர்கள் திரைப்படம் , தொடர் நாடகம் , திரையிசைப் பாடல்கள் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். இதனால் தாம் கற்கும் நேரத்தை வீணாக்கி தொலைக்காட்சியில் மோகம் கொள்கின்றனர். சிலர் இருவட்டுக்கல் முலம் ஆபாச திரைப்படங்களையும் மொழிப்பெயர்ப்புப் படங்டளையும் , பல் தரப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளையும் பார்த்து இவற்றிட்கு அடிமையாகின்றனர்.
*_" இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் "_* என்ற வாசகத்திற்கு எதிராக எதிர் காலத்தை வீண் அடிக்கும் இளைஞர் , யுவதிகள் பலர் உள்ளனர். நன்னடத்தை அற்றவர்களாகவும் , மது போதைக்கு அடிமையாவதுடன் காதல் , இளம் வயது திருமணம் , பாலியல் வல்லுரவு , பெண்கள் மீதான வன்முறை போன்றவற்றில் தம்மை ஈடுபடுத்தி பல துயரங்களை எதிர் கொள்கின்றனர்.
பெண்களின் நடத்தைகள் மூலம் பாதிப்படைந்து வருகின்றது. பணத்துக்காக திரைபடங்களில் நடிகர்கள் பல விதமாக தம்மை பிரதி பலிக்கின்றனர் . ஆனால் சமூகமோ அவற்றை பின்பற்றி இழிவு படுகின்றது. குறிப்பாக தமிழர் பண்பாடு மிகவும் சீரழிந்த நிலையில் உள்ளது. நடை , உடை போன்றவற்றில் நவீன நவ நாகரீத்தில் மூழ்கி வரும் சமுதாயம் பாரம்பரிய பண்பாட்டைச் சீரரித்து விடுகின்றனர்.
தொலைக்காட்சி பார்பதன் மூலம் குறிப்பிட்ட கால , தூர இடைவெளிகளை பின்பற்றிப் பார்க்க வேண்டும். அவ்வாறு அவற்றை மீறும் போது மனம் சம்மந்தமான நோய்களும் ஏற்படுவதுடன் நிகழ்ச்சிகளில் சில சந்தர்பங்களில் ஏற்படும் மனக் கவலைகளால் உள்ளம் சார்ந்த பாதிப்புகளும் உறுவாகின்றன. அவை நீடிக்கும் போது பெறு நோயாகவும் உறுவாகின்றன.
அனேகமான வீடுகளில் கனவனுக்கும் மனைவிக்கும் ஏற்படும் முரண்பாட்டுக்கு தொலைக்காட்சிமே காரணமாகும். தொலைக்காட்சியை அதிகமாக பார்க்கும் பெண்கள் பிள்ளைகளை கவனிக்காது வீட்டு வேலைகளை சரியாக செய்யாமைக் காரணமாக பல வித முரண்பாடுடளுக்கு உள்ளாகின்றனர்.
தொலைக்காட்சி , வர்தக விளம்பரம் மூலம் பல பெண்கள் ஆடை அணிகலன்கள் , அழகுப் பொருட்களுக்கும் வீண் செலவு செய்கின்றனர். இவ்வாறான காரணங்களாலும் முரண்பாடுகள் தோன்றுகின்றன.
வர்தக விளம்பரங்களில் வெளியாகும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் மூலம் அதிகமானோர் அரேபிய நாடுடளுக்கு செல்கின்றனர். இதனால் நாட்டில் வறுமை ஒளிந்தாலும் பல பெண்கள் வீட்டுப் பணிக்காக செல்வதால் குழந்தைகள் உள ரீதியாக பாதிக்கப்படுவதுடன் சமூகத்தால் ஒதுக்கப்படுகின்றனர். வெளிநாடு செல்பவர்கள் அங்கே பல வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு மரணிக்கும் நிலைக்கும் உள்ளாகின்றனர்.
தொலைக்காட்சி பார்பதன் மூலம் அதன் விளைவாக அனுகூலமும் , பிரதிகூலமும் விளைகின்றன. *பாலில் காணப்படும் நீரைத் தவிர்த்து பாலை மட்டும் அருந்தும் அன்னப் பறவை போல நன்மையான விடயங்களை ஏற்றுக் கொள்வது மேலானது.* வள்ளுவர் *" இனிய உலவாக இன்னாது கூறல் "* என்றார்.
தொலைக்காட்சி எனும் மரத்தின் காய்களை தவிர்த்து கனிகளை ஏற்பது இனிமையானது.
*_நலமுடன் நன்மையும் பயக்கும்_*
▪️Name:- MOHAMED AMEER FATHIMA SHAHNA
▪️School name:- AMINA GIRL'S NATIONAL SCHOOL, MATALE
▪️Grade:- 09
▪️Age:- 14
▪️Address:- MUHANDHIRAM ROAD, MATALE
▪️District:- MATALE
ஏனைய அனைத்து கட்டுரைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇
