Aaysha Maahir Short Story

Aaysha Maahir Short Story

 Aaysha Maahir சிறுகதை


பெற்றோரை நேசிப்போம்


இரவு வேளை நண்பர்களோடு விளையாடிவிட்டு வந்து தூங்கி இருந்தான் அல்தாப் . "மகன்! எழும்புங்கோ! ஐந்து மணியாச்சு வெள்ளிக்கிழமை சுபஹு இல்லயா? ஜும்மாவுக்கு போகனுமெனா? சுபஹு தொழவுமில்ல ஒன்டுமில்ல .தங்கச்ச பாருங்கோ எவளோ நல்லமிண்டு". "நீங்க எப்பவுமே தூங்க உட்ரயில்லென் உம்மா. எப்பவுமே சுபஹோட எழுப்புற. தங்கசி தான் எல்லாருக்கும் நல்லம்" என்று முணுமுணுத்தவாறு பாத்ரூமுக்குள் நுழைந்தான் அல்தாப். அல்தாப் நல்லவன் பாடங்களை ஒழுங்காக படிப்பான். பெற்றோருக்கு மரியாதை செய்வான். தங்கையுடன் இரக்கமாகவும் இருப்பான். காலம் செல்லச் செல்ல நண்பர்களுடன் இணைந்து போதப்பொருள் பாவனையிலும் ஈடுபட ஆரம்பித்து விட்டான். இரவு வேளையில் நண்பர்களுடன் இணைந்து விளையாடி விட்டு வந்து இரவு ஒரு மணியளவில் தூங்குவான். முந்தைய காலங்களில் ஐவேளையும் தொழுதவன் இப்பொழுது தொழுகையில் அக்கறை இல்லாமல் செயற்படுகின்றான். "மகன் இந்தாங்கோ டீயக் குடிங்கோ"." எனக்கு டீ வானம். நான் போறன். எனக்கு இருநூறு ரூபாவத் தாங்கோ"."எனக்கு எந்த நாளும் இப்பிடி சல்லி தந்து கொண்டீக்க ஏலாது மகன். அஸ்மாட படிப்பு செலவுகளுக்கும் வேணும் எனா. வாப்பாட நாள் கூலியே ஆயிரம் ரூபா தான். அதுல நீங்க இருநூறுவா கேட்டா நான் எங்கால தாரது. அது மட்டுமில்ல நீங்க படிப்பு செலவுகளுக்கில்லியேன் இதெல்லம் கேக்குற"."உம்மா ஒங்களுக்கு எப்பவுமே சல்லி இல்லியேன் அஸ்மாட படிப்பு செலவுக்கு ஈக்கிறதால தாங்கலே". "எனக்கு அப்பிடி தர ஏலாது மகன். நீங்க ஒங்களுக்குண்டு ஒழச்சிகொங்கோ.படிக்கிறதுகு கூட்டிண்டு பெய்த்து உட்டா ஒன்னற வருடதுல வந்தீங்க. அப்பிடி படிச்சிருந்தீங்கன்டா ஒங்களுக்கு இப்பநான் இருநூறுவா தந்தீப்பன். எந்த நாளும் ப்ரென்ஸ்ட பேச்ச கேட்டு கொண்டே இரீங்க. ப்ரென்ஸ்ட விருப்பம் தான் அல்லஹ்ட விருப்பம் இல்ல பேரன்ஸ்ட விருப்பம் தான் அல்லாஹ்ட விருப்பம்"." உம்மா நான் இப்ப ஒங்களுக்கிட்ட எட்வய்ஸ் கேக்கல்லயே. வெறும் இருநூறுவா தான் கேட்டன். ஒங்களுக்கு தர்ரதுக்கு ஏலுமா ஏலாதா?" "நான் தார இல்ல மகன் நீங்க மோசமான வழியில போறத எனக்கு பாத்து கொண்டீக்க ஏலா". "போங்க உம்மா போரதுக்கு எப்பவுமே ஒங்கட கத இது தான் நான் போறேன்"."மகன் ஜும்மா முடிஞ்சி போர எடத்துக்கு போங்க. இப்ப குளிங்க". "எனக்கு அங்க ரெண்டு மணித்தியாலம் ஈக்கிரத விட ப்ரென்ஸோட நல்ல ஜொலியா ஒரு ட்ரிப் பெய்ட்டு வர ஏலும்". "நாநா நீங்க எந்த நாளும் உம்மாட மனச ஒடச்சிதான் பேசுற பாவம் இல்லயா உம்மா". "எனக்கு எல்லோருடயும் எட்வய்ஸ் தேவயில்லம்". என்டவன் அஸ்மாவுக்கு அடித்து உதைத்து விட்டு வீட்டை விட்டு சென்றான். அஸ்மா அழுதுகொண்டு இருந்தாள். உம்மா தொழுது கொண்டு இருந்தார். வாப்பா ஜும்மா முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தால் வீடே மாறிப்போய் இருந்தது. "என்ன அல்தாப் இன்டக்கி ஜும்மாவுக்கு வரல்ல? நான் வேல முடிஞ்சி ஊட்டுக்கு வராமக்கி பள்ளிக்கி போனா இது தான் நெலம".உம்மாவுக்கு முந்தி அஸ்மா நடந்தவை எல்லாவற்றையும் கூறினாள். "யா அல்லாஹ் இந்த அல்தாப் எப்ப திருந்த போரானோ? இவனுக்கு நாங்க அடிக்காம செல்லம் காட்டினது கூட". இவன்ட போனுக்கு கோல் அடிச்சி பாப்பம் 

ரிங்..ரிங்.. 

"அல்தாப்ட போன் ஆன்சரில்ல"."வாப்பா நாநா போன எடுத்துட்டு பெய்ட்டோ தெரியா". "அது சரி அவன் வந்ததுக்கு பொறவு பாத்துக்குறேன்". "இந்த அல்தாபுக்கு என்ன தான் செய்ரோ தெரியா.இவன நெனச்சி நெனச்சே நாங்க நோயாளியாகுறது தான் மிச்சம்". ஒரு புறம் அல்தாபின் தாய் கவலைப்பட்டாள்."நீங்க கவல பட வானாம் உம்மா.. நாநா எப்ப சரி திருந்தியொன்டு . அல்லாஹ் எந்த நாளும் ஒரு மனுசன இப்புடி வெக்க மாட்டான்". சுவரில் தலையை சாய்த்து வைத்த படி கவலையோடு அமர்ந்து கொண்டிருந்த உம்மாவுக்கு அஸ்மா ஆறுதல் கூறினாள். "படி என்டு கூட்டிட்டு பெய்ட்டு படிக்க உட்டா படிக்கனம். ஆரம்பதுல நல்லா படிச்சவனுக்கு என்ன நடந்தோ தெரியா போக போக மாக்ஸ் எல்லாம் கொரவு ஊட்டுக்கு வரனும் என்டு புடிச்ச புடி. ஊட்டுக்கு வந்ததுக்குப் பொறகு ப்ரென்ஸோட விளையாட்டு. விளையாட்டு மட்டுமா.. போத அது இதுன்டு போறான். ஜொப் ஒன்டும் இல்ல. எப்பவுமே ஏன்ட கையதான் பாத்துன்டு ஈக்குற. ஒரு முற ஊருக்கு பொலிசால வந்தா சரி. இவனுக்கெல்லாம் கம்பி என்னவாகும். இல்லாட்டி பரிவாச அது இதுன்டு அலயவரும்". "ஐயோ! வாப்பா நீங்க இப்டி பேச வானாம் பேரன்ட்ஸ்ட துஆக்கள் ஏத்துக்க படுகுர நேரம் தெரியா. அது வேற இன்டக்கி வெள்ளிக் கெழம". " அஸ்ஸலாமு அலைக்கும்.....". "வாப்பா யாரோ ஸலாம் சொல்லுற பாருங்க".அஸ்மா கூறவும் ஆழ்ந்த யோசனையில் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்த வாப்பா எழுந்து சென்றார். "ஆஹ்! ஸலீம் நாநா அஸ்ஸலாமு அலைக்கும் உள்ள வாங்கோ ஈக்கிரதுக்கு". "ஈக்கிறதுக்கு நேரம் இல்ல காசிம் ". "என்ன இவலோ பதற்றம்". "இங்க பாருங்கோலே காசிம் எங்கட ஆமிர் ஒங்கடவன் இப்பிடி அஞ்சாறு பேர் வந்து டேம்ப்ல குடிச்சிட்டு இருந்துட்டு ஈக்கிற சுத்தி இருந்த மனுசரு பாக்குறதுக்கு கஷ்டத்துக்கு பொலிஸுக்கு கோல் பண்ணி ஒடனே பொலிஸால வந்து எல்லாரயும் எடுத்துட்டு பெய்ட்டு" . "அல்லாவே இவலோ எல்லாம் நடந்தாச்சா எனக்கு ஒன்னுமே தெரியாதே" நடந்தவற்றை நம்ப முடியாது ஆச்சரியத்தில் இருந்த அல்தாபின் வாப்பா கேட்டார். "எனக்கும் தெரிய தான் எனக்கு சம்பத் கோல் பண்ணி சொன்னான் அவனுக்கு எங்கட ஆமிரத் தெரியும் என்டதால கோல் பண்ணி சொன்னான். என்னத்த செய்றோ தெரியா நான் போறேன் காசிம்". "யா அல்லாஹ் ! ஏன்ட மகனுக்கு இப்புடி ஒரு நெலமயா". ஸலீம் நாநாவின் கதைக்கு காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்த உம்மா கேட்டார். " நீங்க பேசாம இரீங்கோலே. நான் அவலோ கஷ்டப்பட்டும் இவனுக்கு எங்கல கணக்கில்லியேன்". கவலை ,கோபம் இரண்டும் கலந்து இருந்த வாப்பா கூறினார். "வாப்பா நீங்க பெயட்டு நாநாவ கூட்டின்டு வாங்கோ". "எனக்கு ஏலாது அவன் அங்கயாலும் இருந்து திருந்தட்டும் நாங்க சொல்றத்ததானே அவனுக்கு கேக்க ஏலாத".  


"அனே அப்பிட்ட சமாவென்ட சேர். மே வெரத்த அப்பி பிலி கன்னவா சர் அவுருது துனக்கட்ட அப்பிட்ட மெஹெ இன்ன பே சேர்".("அய்யோ எங்கள மன்னிச்சி கொள்ளுங்க சேர். நாங்க எங்கட பிழய ஏத்து கொள்றோம் சேர் .எங்களுக்கு மூனு வருஷத்துக்கு இங்க இருக்க ஏலா சேர்".) 18வயது கடக்காத அல்தாபும் அவர்களது நண்பர்களையும் சிர்த்திருத்த பள்ளிக்கு. மூன்று வருடங்களுக்கு அனுப்ப தயாராக இருக்கும் பொலிஸ் நிலையத்தில் கெஞ்சினர். 

  பெற்றோரின் நேசத்தை உணர்ந்த அல்தாப் பெற்றோரின் வருகையை எதிர்பார்த்தவனாக சீர்த்திருத்தப் பள்ளியின் நுழைவாயில் அருகில் நின்று கொண்டிருந்தான்.



      Aaysha Maahir

      Mellapotha 

      Minuwangeta

      Kurunegala

      2023 A/L batch-

       Ars stream




ஏனைய அனைத்து  சிறுகதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin