Mahir Fathima Akeesa கவிதை
🌺ஆசானே🌺
🌸பள்ளிப்பூஞ்சோலையில் கால்தடம் வைத்ததும் என்னை சிற்பமாக வடிவமைத்த என் சிற்பியான ஆசானே! 🌸
🌸பாறைக்குள் இறுந்த சுனைநீரான என் அறிவாற்றலை என்றுமே தாவித்திரியும் நீரோடையாய் மாற்றியவறும் நீரே🌸
🌸என் பாத சுவடுவகள் சாதனையை நோக்கி பல மண்மேடுகளில் புதைய அதற்கு படிக்கல்லாய் இறுந்தவறும் நீரே🌸
🌸ஆயிரம் பேர் என்னோடு கைகோர்த்து நின்றாலும் உன் அரவணைப்புக்கு முன் அனைவறும் சிறு கடுகளவேனும் இல்லையே ஆசானே🌸
🌸உன்னை எதை கொண்டு வர்ணிப்பது வர்ணிப்பதற்கான இவ்வுலக பொறுட்கள் அனைத்தும் உன் முன் தோற்றுப்போய் அவைகள் உனது காலடியிலேயே சரணடையும் என் இனிய ஆசானே🌸
🌸நான் பல சாதனைகள் படைத்து இவ்வுலகுக்கு ஓர் மாவிளக்காய் ஜொலித்தாலும் உன்னிடத்தில் அதே பள்ளி மாணவியாகிறேன் மீண்டும்🌸
🌸இவ் வையகம் சுழல்வதே உன்னை அச்சாணியாக கொண்டு தானே நீ இல்லையெனில் இப் பூமி என்னாவது ஆசானே🌸
🌸வறுடா வறுடம் உமக்கு ஓர் ஆசிரிய தினக்கொண்டாட்டம் அவை இப்போது எமது வித்தியாலயத்தில் மாபெறும் திறுக்கொண்டாட்டம்🌸
🌸பொறுமை கொண்டு சிறுமை அடையாதே உன் மகத்தான பெறுமதியை இவ் வையகத்திற்கு காட்ட இப்போதே எழுந்திடு ஓர் நட்ச்சத்திரமாய்🌸🌸
✍️மாஹிர் பாத்திமா அகீஸா✍️
MAHIR FATHIMA AKEESA
PALAMUNAI.
AMPARA DISTRIC
GRADE 13
AK/ MINHAJ NATIONAL SCHOOL
ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇