M.H.Fathima Poem

M.H.Fathima Poem

 M.H.Fathima கவிதை


கல்வி

    கல்வி கற்று வரும் பிள்ளை!! 

    பாரில் உயர்ந்து வரும் முல்லை!! 

    கள்ளத்தில் கழித்திருந்த நாளை!! 

    பிற்காலத்தில் கவலை தரும் மூளை!! 


    கற்றவனுக்கு நிகரில்லை பாரில்!

    கல்லாதவனுக்கு ஏது புகழ் ஊரில்!

    எத்திசையும் இவன் பெருமை பேசும்! 

     கல்வி இல்லாவிடில் சுற்றமும் ஏசும்! 


     வருவதில்லை கல்வி தானாய்!! 

     அது வந்துவிட்டால் இனிக்கும் தேனாய்!! 

      கொடுப்பதால் ஊரவரும் ஊற்றாய்!! 

      அதைப் பெறுவதால் வளர்ந்திடும் அறிவு நாற்றாய்!! 


    கல்வியே முகத்திற்கழகு!! 

     கனிவாய் நீயும் பேசிப் பழகு!! 

     செல்வம் எப்பொழுதும் பழது!! 

      அது சென்று விடும்

       ஒரு பொழுது!!


Name. M. H. Fathima 

School Name. Mo.k.M.M.V 

Grade. 13

Vilage. Kanulwela

District. Monaragala





ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin