Rafaideen zulsha கவிதை
சகியே! உன்னை நினைத்து கிறுக்கத்துவங்கினேன் நான் கிறுக்கய வரிகளல்லாம் கவிதைகளாகின எனை அறியாமலே
14ஆம் பிறை நுதலிலே வில்லாய் இரு புருவங்கள் நிச்யமாய் சொல்கின்றேன் கம்பன் மற்றும் இன்றிருந்தால் நீயொரு காவியப் பெண்.
கயல் மீன் விழியிரண்டையும் சுற்றி பரவசமாய் சிறகடிக்கும் பட்டாம் பூச்சி இமைகள் ஐந்தென்ன ஐயாயிரம் காப்பியங்கள் படைக்கும்.
மென் பனியில் குளித்த பன்னீர் ரோஜாவை தோற்கடிக்கும் உன் அதரங்களை சுற்றி பல தேனீகள்.
சலங்கைகள் சலசலக்க அன்ன நடை நீ நடந்து அவனியிலே வருகையிலே வானலோக தேவதை மண்ணிறங்கி வந்ததோ என்றென்னி பூலோகமும் ஒரு நிமிடம் விழியுயர்த்தி எனை பார்க்கும்.
மண் உலகில் நான் கண்ட பெண் தேவதை உன் வனப்பை செதுக்கினால் மொனாலிசா கூட உன் முன் வெறும் சித்திரமே
Rafaideen zulsha
Al.qamar central college
Grade:-A/l
Age :-18
bammanna
Kurunegala
ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇