Gafoor Fathima Nufla Poem

Gafoor Fathima Nufla Poem

 Gafoor Fathima Nufla கவிதை


என் முதல் ஆசான்


 பத்து திங்கள் வயிறு எனும்

மாளிகையில் வைத்து பாதுகாத்தாய்

தாய்மடி எனும் தங்கப்பெட்டியில் வளர்த்தாய்

என் மழலை மொழி கேட்டு மலர்ந்தாய்

பாசத்தை பாலாய் ஊட்டினாய்

அறிவை அமுதமாய் பருக்கினாய்

எனக்காய் உளி தாங்கும் கல்லானாய்

இத்தனைக்கும் என்ன கைமாறு 

செய்வதென்று தெரியவில்லை

நம் கருவறை பந்தம் 

கல்லறை வரை வேண்டும்.


Name- Gafoor Fathima Nufla

University of vavuniya

( ICT Department )

Age - 21

Sammanthurai

Ampara district





ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin