Z.F.Zuha Zeenath கட்டுரை
மாணவர்களும் தொடர்பாடலும்
மாணவர்கள் என்பது 5 வயதிற்கும் 18 வயதிற்கும் உட்பட்டவர்கள் என சுருக்கமாக குறிப்பிடலாம். தொடர்பாடல் என்றால் ஒரு கருத்தை அல்லது தகவலினை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரிமாற்றம் செய்வது ஆகும்.நவீன காலமான தற் காலத்தில் தொடர்பாடலுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான தொடர்பு மிக மிக நெருக்கமானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் காணப்படுகிறது.
இன்றைய தொழில் நுட்ப யுகத்தில் தொடர்பு சாதனங்கள் ஒருவரது நடத்தையில் பலவாராக செல்வாக்கு செலுத்துகிறது.தொழில் நுட்பம் மூலம் தேவையான தகவல்களை அனுப்ப அல்லது பெற முடிகின்றமையால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் சிந்தனையின் மையப் புள்ளியாக இது விளங்குகிறது. மாணவர்களின் அன்றாட வாழ்வியல் அம்சங்களில் பாரிய தாக்கத்தை செலுத்துகிறது.மாணவர்கள் விரும்பியோ விரும்பாமலோ தொடர்பு சாதனங்களின் ஆட்ச்சிக்குள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு நேரத்தினை,கடமைகளை மறந்து செயல் படுகின்ற அளவு இதன் ஆக்கிரமிப்பு அதிகரித்து விட்டது
தொடர்பு சாதனங்களின் மூலம் பாடசாலை மாணவர்களாகிய எமக்கு அறியாத தகவல்களை பெறவும் கல்வி சம்பந்தமான விடயங்களை அறிந்துக் கொள்ளவும் தேவையான புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளவும் மற்றும் பொது அறிவு விடயங்களை பெற்றுக் கொள்ளவும் பெரிதும் உதவி புரிகிறது.கல்வியில் மட்டும் அன்றி எமது ஆளுமை விருத்தியிலும் நல்ல முன்னேற்த்தை ஏற்படுத்த முடியும்.
இத்தொடர்பு சாதனங்கள் பாடசாலை மாணவச் சமூகத்தை தம் கைப்பிடிக்குள் வைத்து அடிமையாக்கி விட்டதன் பலனாக சமூக சீரழிவு, கலவு,கொள்ளை,கொலை,போதைப் பொருள் பாவனை போன்ற இன்னோரன்ன தீய செயல்களுக்கு இட்டுச் செல்கிறது அது மட்டும் அன்றி ஒரே இடத்தில் அமர்ந்து இச் சாதனங்களில் விளையாட்டுகளில் ஈடுபடுவதனால் ஆரோக்கியம் மட்டும் அன்றி கல்வி நிலையும் பாரிய சீரழிவை ஏற்படுத்துகிறது.
மாணவர்கள் ஆகிய நாம் திட்டமிட்டு தொழில் நுட்ப சாதனங்களை உரிய முறையில் நல்ல வழிகாட்டளிளும் அறிவு பூர்வமான ஆளுமை விருத்திகலிலும் பயன்படுத்ததும் போது நல்ல முன்னேற்றத்தை பெற்றுக் கொள்ள முடியும்
Z.F.Zuha Zeenath
K/Udapitiya Al-husna M.M.V
Grade 10
15 Year
Pallegama Deltota
Kandy
Central Province
ஏனைய அனைத்து கட்டுரைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇
