M.F.Aysha Zainab Essay

M.F.Aysha Zainab Essay

 M.F.Aysha Zainab கட்டுரை


வாசிப்பை நேசிப்போம்

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

   தேசத்தின் எல்லையை அறிந்தாலும் நேசத்தின் எல்லையை அறிய முடியுமா? நேசம் வைத்ததற்காக பல தேசங்களை தனது வாளின் கூர்மையாயல் அடக்கி பிடித்தவன் நெப்போலியன் பொனபாட் ஆனால் வாளின் கூர்மையை விட மிகவும் வலிமையானது நூலின் கூர்மைதான் வாள் சுழற்றிய மாவீரன் ஒரு நாள் தோல்வியால் மாண்டு போகலாம் ஆனால் நூல் படித்த மேதைக்கு தோல்வியென்பது கிடையவே கிடையாது.


"தொட்டனைதூறும் மணற்கேணி மாந்தற்கு குற்றனைதூறும் அறிவு" என்கிறார் பொய்யாமொழி புலவர்

தோண்டத் தோண்ட நன்னீர் ஊற்றெடுக்கும் கிணற்றைப் போல் வாசிக்க வாசிக்க நல்லறிவு பெருக்கெடுக்கும். என்று சொன்னார் அவர்.


     உலகில் தோன்றிய அனைத்து புரட்சியையும் விட வலிமை பொருந்தியது வாசிப்பு புரட்சியே எனவே தான் வாசிப்பு மனிதனை முழுமனிதனாக உருவாக்கும் என்பார்கள்.


"நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு" என ஒளவையார் நாலடியார் எனும் நூலில் பாடுகிறார். அதாவது மனிதனை மனிதனாக்குவது இந்த கல்வியும் அதனோடிணைந்த வாசிப்பும் தான்


      வாசகசாலைகளுக்கு அருகாமையாக தனது வாசஸஃதலத்தை உருவாக்கச் சொன்ன அம்பேத்கர் போல தான் படித்த புத்தகத்தை படித்து முடிக்கும் வரையில் தனது அறுவைச் சிகிச்சையைத் தள்ளிப் போட்ட அறிஞர் அண்ணாவைப் போலே படிப்பால் மட்டுமே பாரதத்தை பாருலகம் போற்றும் தேசமாக மாற்றலாம் என்று சொன்ன அப்துல் கலாமைப் போல 33 வருடகாலம் வாசக சாலையில் தவம் கிடந்து உலகம் போற்றும் கம்யூனிஸ சித்தார்ந்த நூலான மூலதனத்தை உருவாக்கித் தந்த கார்ல் மாக்ஸ் போலே நாமும் வாசிப்பின் மகிமையை உணர வேண்டும். அப்போது தான் புதுப்புது சிந்தனைகள் நம்மில் உருவாகும்.


இன்றைய நவீன உலகில் பெரும் சவாலாக உருவெடுத்திருக்கும் ஸ்மார்ட் போன்களின் காரணமாக புத்தகங்கள் புறக்கணிக்கப் பட்டு வருகின்றன.வாசிப்பின் மீது மனிதன் வைத்திருந்த நேசம் மிக மோசமாகி வருகின்றன.

வாசிப்பின் மூலமந்திரமே புத்தகங்கள் தான் நாம் அதை வாசித்தால் மாத்திரமே உண்மையான ஞானம் நம்மில் பிறக்கும் கிரகித்தல் தன்மை நம்மில் உருவெடுக்கும் அறிவின் வளர்ச்சி நம்மில் பரிணமிக்கும்.


அன்பில் உருவெடுக்கும் புனித காதல் போலே வாசிப்பில் நாம் வைத்திருக்கும் நேசமும் நம்மை புனிதப் படுத்தும்


     உள்ளெடுக்கும் சுவாசம் போலே தினம் தினம் வாசிப்பையும் நமது மூச்சுக் காற்றாய் மாற்றியமைப்போம் அப்போது தான் உண்மையான அறிவின் ஊற்றுக்கண்கள் திறந்து கொள்ளும் "வாசிப்பை நேசிப்போம் நம் உயிர் போலே அதை போசிப்போம்"


M.F.AYSHA ZAINAB

MR/ARAFA CENTREL COLLAGE 

GRADE---08

MATARA DISTRIK WELIGAMA




ஏனைய அனைத்து கட்டுரைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin