M.Hansika Essay

M.Hansika Essay

 M.Hansika கட்டுரை


கல்வியின் உயர்வு 

 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்பது அதிவீரராம பாண்டியனின் வாக்கு. ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வி ஆகும். மனிதன் மனிதராக வாழ வேண்டுமாயின் அவர்களுக்கு கல்வி அறிவு வேண்டும். அறிவையும் ஒழுக்கத்தையும் வளர்த்திடும் கருவியாக கல்வி விளங்குகிறது. அறிவைத் தேடிக்கொள்வதற்கு உறுதுணையாக அமைவது கல்வியாகும். நாம் தேடிப்பெற்ற எல்லா செல்வங்களையும் விட மேலானது கல்வியாகும். இளமை பருவத்திற் பெறும் கல்வி கல்லிற் பொறித்த எழுத்துப்போல என்றும் அழியாதது. இதனையே 'இளமையிற் கல்வி சிலையில் எழுத்து' எனும் முதுமொழி எமக்கு உணர்த்துகிறது. இளமையிலிருந்தே நாம் பெறும் கல்வி வாழ்க்கைக்கு உகந்த கல்வியாக இருக்க வேண்டும்.. அழிவில்லா கல்வியை தேடி பெறுவதே நமது இன்றியமையாத கடமையாகும். கல்வியானது அறியாமை என்னும் அக இருளைப்போக்கி அறிவு என்னும் ஒளியை தருவதால் அறிவுடையார் எல்லாம் உடையார் என்று கூறப்படுகிறது. கல்வியறிவு இல்லாதவர் கண்ணிருந்தும் குருடரேயாவர். 'கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. மன்னருக்கு தன் தேசமல்லால் சிறப்பில்லை'. எனவே மன்னனிற் கற்றோன் சிறப்புடையான் என்றார் ஔவையார். தலைமயிரை சீர்ப்படுத்தி முடிப்பதால் வரும் அழகும், முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் பூசவதால் உண்டாகும் அழகும், உண்மையான அழகல்ல. மனத்தளவில் உண்மையாக நடந்து கொள்கிறோம் என்னும் நடுவு நிலையாம் ஒழுக்க வாழ்வை தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகு. கல்வி ஒன்றே மனிதருக்கு உண்மையான அழகைத் தரும். போலி அழகுகளில் மயங்காது உண்மையான அழகைத் தரும் கல்வியின்பால் நம் கவனத்தை திருப்ப வேண்டும். அதுவே வையத்து வாழ்வாங்கு வாழும் நெறியினைக் காட்டும். நாம் கல்வி அழகினை பெற்றிட அயராது முயற்சிப்போமாக. கல்வியை பற்றி திருவள்ளுவர் ஔவையார், பாரதியார், விவேகானந்தர் என பல பெரியோர்கள் கருத்துக்களையும், பழமொழிகளையும் எழுதி உள்ளனர். மகாத்மா காந்தி சிறைச்சாலையில் இருந்த போதிலும் புத்தகங்களையே வாசித்து கொண்டிருந்தார். பதுமனார் மற்றும் அதிவீரராம பாண்டியன் போன்றோரும் கல்வியை பற்றிய கருத்துக்களை கூறுயுள்ளனர். 'கற்க கசடறக் கற்பவை, கற்றப்பின் நிற்க அதற்கு தக' என்றும் 'ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவருக்கு, எழுமையும் ஏமாப்புடைத்து' என்கிறார் திருவள்ளுவர். கல்வியினை எல்லோருக்கும் வழங்கவேண்டும். அதனால் தான் இலங்கையில் இலவசக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தியவர் c.w.w கன்னங்கரா ஆகும். இலவசக் கல்வியை எல்லோருக்கும் சமமாக வழங்கினால் தான் நாகரிகமுள்ள சமுதாயம் ஏன்றை உருவாக்க முடியும். "அறிவு என்ற செடிக்கு அனுபவம் என்ற நீரை ஊற்றிக்கொண்டே இரு அது ஒரு நாள் வளர்ந்து விருட்சமாகும்" நன்றி


பெயர் - மா.கன்சிகா

 கல்வி கற்கும் தரம் - 9

 வயது - 14

 ஊரின் பெயர் - பள்ளேகல குண்டசாலை

 மாவட்டம் : கண்டி




ஏனைய அனைத்து கட்டுரைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin