Reeshma Niyas கட்டுரை
நான் ஏன் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றேன்..
இஸ்லாம் மனிதன் இவ்வுலகில் எவ்வாறு வாழ வேண்டும் எவ்வாறு வாழக் கூடாது என்பதை முழுமையாகவும், தெளிவாகவும் கூறுகின்றது.
இஸ்லாம் தாய்,தந்தை, பெரியோர்ளின் கன்னி யத்தைப் பாதுகாப்பாதோடு உயிரினங்களை துன்புருத்தல், கொடுமை செய்தல் போன்றவற்றை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. "எவர் ஒருவர் ஒரு உயிரை தகுந்த காரணம் இன்றி கொலை செய்வாரோ அவர் முழு மனித சமுதாயத்தையும் கொலை செய்தவர் போன்றவர் மேலும் எவர் ஒரு ஆன்மாவை உயிர் வாழச் செய்வாரோ அவர் முழு மனித சமுதாயத்தையும் உயிர் வாழச் செய்தவர் ஆவர் "என சூரதுல் மா'இதா வின் 23 ஆவது ஆயத் கூறுகின்றது. இதன் மூலம் இஸ்லாத்தில் உயிர்களின் உயிர் வாழ் உரிமையின் முக்கியத்துவம் பற்றி விலங்குகின்றது.
ஒரு பெண் என்ற வகையில் இஸ்லாம் எனது உரிமைகளையும் பாதுகாக்கின்றது. எனது கல்வி கற்கும் உரிமை, வாரிசுரிமை என்பவற்றை பெற்றுத்தந்து எனது கன்னியத்தையும் உயர்த்துகின்றது. பெண்குழந்தைகளின் பிறப்பை இழிவாகக் கருதி பெற்ற தாய் தந்தையரே குழி தோண்டிப் புதைத்த ஜாஹிலிய்யாக் காலத்தில் இஸ்லாமே முதன் முதலாக பெண் பிள்ளைகளின் பெருமதியையும், கன்னியத்தையும், உரிமையையும் பாதுகாத்து அந்நி லையை மாற்றியமைத்தது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் தூர்பக்கியசாலிகள் என ஒதுக்கித் தள்ளப்பட்ட நேரத்தில் நபி (ஸல் ) அவர்கள் ஆயிஷா (ரழி ) அவர்களின் மடியில் சாய்ந்து பெண்களின் அந்நிலை துர்ப்பாக்கியம் அல்ல என நிரூபித்தார்கள். இன்னொருமுறை ஒரு சஹாபி நபியவர்களிடம் வந்து நான் முதலாவதாக யாருக்குப் பணிவிடை செய்ய வேண்டும் எனக் கேட்டார்கள் அதற்கு நபியவர்கள் "தாய்க்கு" என பதிலளித்தார்கள். இரண்டாவதாக நான் யாருக்கு பணிவிடை செய்ய வேண்டும் எனக்கேட்ட போது "தாய்க்கு" என பதிலளித்தரகள் மூன்றாவது முறை கேட்ட போதும் "தாய்க்கு" என்றே கூறினார்கள். நான்காவது முறை கேட்க "தந்தைக்கு" என கூறினார்கள். இச் சம்பவத்தின் மூலம் தாய்மையின் உயர்வு பற்றிய இஸ்லாத்தின் பார்வை எடுத்துக்காட்டாக அமைகின்றது.
மேலும் பெண்கள் எவ்வாறு ஆடை அணிய வேண்டும், எவ்வாறு ஆண்களுடன் பழக வேண்டும் எனும் வரையறைகளைக் கற்றுத்தந்து பெண்களின் பாதுகாப்பு விடயத்தில் மேலும் கவனம் செலுத்துகின்றது. பெண்களின் உயர்வையும் , உரிமையையும் மட்டும் பேசும் பொருளாகக் கொள்ளாமல் ஒரு பெண் தன் கணவனுக்கு, தந்தைக்கு, சகோதரனுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளையும் கூறுகின்றது. இஸ்லாம் மனித வாழ்க்கைக்கு இயல்பானது, ஏற்றமானது.1400 வருடங்கள் கழிந்தும் இன்னும் எல்லாக்காலங்களுக்கு ம் பொருந்தும் வகையில் இஸ்லாம் இருக்கின்றது. மேலும் ஏற்றத்தாழ்வின்றி முழு மனித சமுதாயத்தினதும் உரிமைகளை பாதுக்கின்றது. ஒரு பெண் என்ற வகையிலும் சமூகத்தின் ஒரு அங்கத்தவர் என்ற வகையிலும் இஸ்லாம் எனது உரிமைகளைப் பாதுக்கின்றது. எனவே இஸ்லாத்தை உயர்வாகக்காறுதி நான் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றேன் அதனையே நான் விரும்பவும் செய்கின்றேன், மாறாக நான் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த பெண் என்பதால் அல்ல. நன்றி!
REESHMA NIYAS
AL - MADHRASATHUL MUBASHSHARAH
YATIWAWALA, KATUGASTHOTA,
KANDY.
ஏனைய அனைத்து கட்டுரைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

