Rifka Jawfer கட்டுரை
*ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஊடாக கோவிட் பத்தொன்பது மற்றும் நீரிழிவு என்பவற்றை தோற்கடிப்போம்*
உங்கள் வாழ்வில் கடைசி வரை தேவை நல்ல உடல் ஆரோக்கியம் அதாவது உடல் வலு உலக நீரிழிவு நோய் தலை நகரமாக இந்தியா உருவாகி வரும் நிலையில், இந்தியாவில் இந்நோய் தலை நகரமாக தமிழ் நாடு விரைவில் உருவாகி வருகிறது. என மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிய செய்துள்ளார்கள். நம் நாட்டில் தற்போழுது அனைவரையும் அச்சுறுத்திக்கொண்டு இருப்பது நீரிழிவு நோய் மற்றும் கோவிட் பத்தொன்பது கொரோனா வைரஸ் நீரிழிவு நோய் மற்ற நோய்களுக்கு எல்லாம் தாய் என்று சொல்லுமளவுக்கு... கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட சந்தர்ப்பங்கள் அதிகம் என கூறலாம் . சிறுவர்கள் முதல் பெரியவர்கள் முதல் ஆசிரியர்,பெற்றார்,வைத்தியர்,அதிகாரிகள் வரை இந்த நோய் தாக்குதல் இருந்து கொண்டே இருக்கிறது. இந்நோய் வந்து விட்டால் கூடவே பல நோய்களை அழைத்து வந்து உடம்பில் குடியேற்றி விடுகிறது. முன்பெல்லாம் ஊரில் ஒருவருக்கு என்று ஆச்சரியமாகவும், பயத்துடனும் கூறிய சர்க்கரை நோயும், கொரோனா நோயும் இப்பொழுது ஒவ்வொரு வீட்டிலும் ஓரிருவருக்கு உள்ளது. என்று கூறும் நிலைக்கு வந்து உள்ளது..
தமிழ் நாட்டில் குறிப்பிட தகுந்த எண்ணிக்கையில் இளம் வயதினர் மற்றும் குழந்தைகளுக்கும் உடல் பருமன் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படுவதாக பகுப்பாய்வின் போது கண்டு அறிந்துள்ளனர். துரித உணவுக்கலாசாரம், பரம்பரை தன்மை போன்றவை தான் இளம் நோயாளிகளின் அதிகரிப்புக்கு காரணம் மன அழுத்தம் மற்றும் உணவு முறைகளால் மென் பொருள் பொறியியலாளர்களிடையே நீரிழிவு நோய் மிக பரவலாக காணப்படுகின்றது.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் பார்வை குறைபாடு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படுடலாம். சர்க்கரை நோய் இல்லாமல் இருப்பவர்களுக்கும் கால் எரிச்சல் உள்ளிட்ட பிரட்சினைகள் ஏற்படலாம் ஒருவரின் உடலில் சர்க்கரையின் அளவு எவ்வளவு உள்ளது என்பதை துல்லியமாக கண்டு அறிந்து, அதற்கு ஏற்ற சிகிச்சை வழங்கி நோயாளியின் ஆயுளை நீடிக்க முடியும். சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடல் பருமன்,உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல்,மன அழுத்தம், மாவு சத்து அதிகம் எடுப்பது உள்ளிட்டவை சர்க்கரை நோய்க்கான காரணிகளாகும். இதனை முன் கூட்டியே அறிந்து கொண்டால் கால்களை இழப்பது, கண் பார்வையை இழப்பது போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு பெறலாம். கொரோனா பாதித்தால் சர்க்கரை நோய் அதிகமாகிறது. கொரோனா வந்த பிறகு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்த கொரோனா வைரஸானது இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்கள் தாக்கி அழிகிறது. இதனால் இன்சுலின் குறைபாடு ஏற்பட்டு சர்க்கரை நோய் ஏற்படலாம். எனவே வரும் முன் காப்போம். என்பதை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையில் சந்தோசத்துடன் வாழ்வோம்.
நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராக சுரக்காது அல்லது குறைவாக சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக சுரக்காதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படை காரணம். இன்சுலின் சுரப்பதை தடுப்பதெற்கென பொதுவான சில அம்சங்கள் இருப்பதை நாம் அறிவோம். நீரிழிவு நோய் உருவாவதற்கு முன்பே இவை நம் உடலில் காணப்படும்.பின்னொறு நாளில் நீரிழிவு நோய் வருவதை தூண்டுகிறன. இவற்றை (சர்க்கரை நோயின் முன் காரணிகள்) என்கிறோம். இவற்றில் ஏதாவது வந்தாலே போதும் நீரிழிவு நோய் வர வாய்ப்புண்டு..
நம் உடலில் ஒவ்வொரு செல்லிலும் இருபத்து மூன்று சோடி குரோமோசோம்கள் உள்ளன. இவற்றில் தான் பரபணுக்கள் உள்ளன. என்பது எமக்கு தெரியும் இவைதான் செல்கள் எப்படி உருவாக வேண்டும், எப்போது உருவாக வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று கற்றுத் தருகின்றன. உதாரணமாக, ஆரோக்கியமாக உள்ள ஒருவரின் கணையத்தில் பீட்டா செல்கள் எப்போது, எவ்வளவு இன்சுலினை சுருக்க வேண்டும். என்று பரபணுக்கள்தான் கற்றுத் தரும். அதன் படி அந்த செல்கள் இன்சுலினை சுரந்து, இரத்த சர்க்கரையை சரியான அளவில் வைத்துக் கொள்ளும். அதனால், அவர்களுக்கு நீரிழிவு நோய் வருவது இல்லை. உதாரணமாக ஒன்றை எடுத்துக் கொண்டால் புத்தகங்களை அச்சு இடும் போது பிழைகளை ஏற்படுவதை நாம் அறிந்து இருப்பது போல சிலருக்கு இந்த பரபணுக்கள் உருவாகும் போது பிழைகள் ஏற்பட்டு விடும். அப்போது உடலில் நடைபெற வேண்டிய இயல்பான பணிகள் நடை பெறாது. உதாரணமாக, இன்சுலினை சுரக்க செய்கிற பரபணுவில் பிழை உண்டானால், இன்சுலின் சுரப்பதில் சிக்கல் ஏற்படும்.
நீங்கள் செய்ய வேண்டிய வேலையை உற்சாகமாக வாழ செய்ய தேவை மன ஆரோக்கியம் நல்ல உடல் வாகு தேவை என்பது அழகாக இருப்பது மட்டும் அல்ல... நல்ல உடல் எடையும் அதற்கேற்ற உடல் உயரமும் தான். நீங்கள் சாப்பிடும் உணவுகளில் மட்டுமல்ல ஆரோக்கியம்.. தினசரி செய்யும் உடற்பயிற்சிகள் மற்றும் சூரியன் வெளிச்சமும் தான் மீது கிடைக்கும் போது வைட்டமின் டீ யும் தான்.. உடற்பயிற்சி செய்ய நீங்கள் எங்கேயும் போக தேவையில்லை இதோ உங்கள் வீட்டில் மோட்டை மாடி போதும் .. ஆம் காலை மாலை மாடி படி ஏறி இறங்குங்கள், மாடியில் சிறிது நேரம் நடை பயிற்சி செய்யுங்கள் இதை விட சிறந்த பயிற்சி செய்யுங்கள் இதை விட சிறந்த பயிற்சி எதுவும் இல்லை ..
சரி உணவில் எவ்வாறு கவனம் செலுத்துவது நீங்கள் சாப்பிடும் உணவில் ருசியுடன் பசியும் இருக்க வேண்டும். நன்கு பசிக்கும் நேரத்தில் உண்ணுங்கள். காலை, மதியம் உணவுகளுக்கிடையே இடைவெளியாக சிறுது நேரம் அதாவது மணி நேரங்கள் இருக்க வேண்டும். கீரை வகைகள், பழங்கள் உங்கள் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். மன ஆரோக்கியத்திற்க்கு என்ன செய்ய வேண்டுமென்று தெரியுமா? நல்ல புத்தகங்களை வாசித்தல், நல்ல இனிமையான இசைகளை கேட்டல், மனம் விட்டு பேசுதல், தெய்வ நம்பிக்கை உடையோர் சிறிது நேரம் தெய்வீக பாடல்களை கேட்டல், குழந்தைகளுடன் நீங்களும் விளையாடி மகிழல். இதுவே உங்கள் மன ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும்.
நுண்ணங்கிகளை கூறப்போனால் கூறிக்கொண்டே செல்லலாம். வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத மிகச் சிறிய அங்கிகள் நுண்ணங்கிகளாகும். நுண்ணங்கிகள் மனிதனுக்கு பல்வேறு நன்மைகளையும், தீமைகளையும் விளைவிக்கின்றன. பல்வேறு கைத்தொழில்கள், குப்பை மற்றும் இறந்த உடல்களை பிரிகையடைய செய்தல் போன்ற நன்மையையும் மனிதன், ஏனைய விலங்குகள், தாவரங்களிற்கு நோய்களை ஏற்படுகிறன. அண்மையில் சீனாவில் பூகான் நகரில் கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் எனும் புதிய வைரஸினால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டும் உயிரிலிழந்தும் காணப்படுகின்றனர். கொரோனா வைரஸானது தனது பிரபுரிமையை அடிக்கடி மாற்றுவதன் காரணமாக அவற்றுக்கான தடுப்பு மருத்தை கண்டு பிடிப்பது பெரும் சவாலாக காணப்படுகின்றது. இவ்வையஸானது காற்றின் மூலமும் மனிதனிடமிருந்து மனிதனுக்கும் பரவும் தன்மை கொண்டவை.
கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு நாம் செய்ய வேண்டியவை அனைவரும் ஒன்றினைந்து பங்களிப்பு செய்வதே... இன்று உலகெங்கும் கொரோனா வைரஸ் நோயினால் பீடிக்கப்பட்டோர் பலர் தினமும் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அண்மைக் காலமாக இந்நோய் தீவிரமாக பரவி வருகிறது. இதனை பூண்டோடு ஒழித்து கட்ட பொது மக்களாகிய நம் ஒத்துழைப்பு மிக மிக அவசியமாகும்.
சுத்தமான காற்றையே நாம் சுவாசித்தல் வேண்டும். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் அதிகரித்து வரும் வாகனப்பெருக்கமும் வானலவாக எழுப்பப்படும் மாடிகளும் சுத்தமான நாம் சுவாசிக்க முடியாதவாறு செய்து விடுகின்றன. வாகனங்களும் தொழிற்சாலைகளும் அபமிதமாக பெருகி வருவதால் அவற்றிலிருந்து வெளியாகும் நச்சுப் புகைகள் வாயு மண்டலத்தில் கலந்து நம்மை வந்தடைகிறன. அவற்றை சுவாசிக்கும் மக்கள் சுவாசம் சம்பந்தமான நோய்களுக்கு இலக்காகின்றார்கள். உதாரணமாக கொரோனா வைரஸையே எடுத்துக் கொள்ளலாம். கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற நாம் செய்ய வேண்டியவை முகக்கவசம் அணிதல்,கண்ட கண்ட இடங்களில் தொடுகையை மேற்கொள்ளாதிருத்தல், கிருமிநாசினியை பயன் படுத்தல், இடை வெளி பேணல் போன்ற அனைத்து செயற்பாடுகளிலும் ஈடுபடுவோம்.
பொதுவாக காற்று வீசும் போது அது மக்களுக்கு நன்மை அளிப்பதாகவே இருக்கும். ஆனால் அது புயலாக மாறும் போது பெரும் தீமைகளையையே உண்டு பண்ணுகிறது. அதே போன்று தான் இக்கோவிட் பத்தொன்பது பெரும் உயிர் ஆபத்து மனிதனை ஆட்டி படைக்கிறது.நாட்டுக்குள் முடங்கி மாகாணங்களுக்குள் அடைப்பட்டு மாவட்டத்திலும் அடங்கி இப்போது வீடுகளுக்குள் இருந்து கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் பசியாலும் வறுமையினாலும் அத்தியவசிய மருத்துவ தேவைக்காக வைத்தியசாலைகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுவோர் பெரும் நஷ்டத்துடன் பெரும் பாலானோர் தவிர்த்துக் கொண்டு இருக்கிறனர்.
காற்றை நம் பார்க்க முடியாது. அதே போன்று தான் இக்கொரோனா வைரஸும் காற்று வீசுவதை நாம் உடனுக்குடனே உணர்ந்த கொள்ள முடியும் ஆனால் கொரோனாவை அறிந்து கொள்ள முடியாது. அவ்வாறு தெரிதாலும் பதின் நான்கு நாளைக்கு பிறகு தான் தெரிந்தாலும் தெரியும். சாதி மதம் பார்க்காமல் வருவது கொரோனா பணக்காரர் எளியவர் பார்க்காது கொரோனா ஆதலால் பாதுகாப்பாக வாழ்வோம்.
ஒரு மணி நேரமாவது உள்ளம் தூய்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவனது வாழ்வு முழுமையான வாழ்வாக அமையும். " நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " என்பது முதுமொழி நோயற்ற வாழ்வுக்கு அடிப்படையாக அமைவது உடற் தூய்மையாகும். உடல் தூய்மை உளத்தூய்மைக்கும் வழி கோலும்.
நாம் சுவாசிப்பதற்கு காற்று உதவுகிறது.காற்றைச் சுவாசிக்காமல் நாம் உயிர் வாழ முடியாது. ஆனால் இக்காலகட்டத்தில் முகக்கவசம் இன்றி சுவாசிப்பதே அச்சத்துக்குள்ளாகி உள்ளது. இதனால் மக்களுக்கு பெரும் கஷ்டமும் நஷ்டமும் ஏற்படுகிறது. சுருக்கக்கூறின் " நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " என்னும் முதுமொழிக்கொப்ப நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நம் உடலை பேணிக் காக்க வேண்டும். அதனை பேணிக் காக்கும் பொறுப்பு மக்கள் அனைவரையுமே சார்ந்துள்ளது.கொரோனாவை ஒழித்துக்கட்ட சுகாதார அமைச்சர்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப செயற்படல் வேண்டும். இதுவே காலத்தில் தேவையுமாகும்.
சர்க்கரை நோயை வரவேற்கும் அடுத்த காரணி, உடல் பருமன் இனிப்புப் பண்டங்களையும் கொழுப்பு உணவு வகைகளையும் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் ஆவதற்கு அதிக வாய்ப்புக்கள் உண்டு. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும். அதற்கு ஏற்ப கணையம் அதிகமாக இன்சுலினை சுரந்து சுரந்து சீக்கிரத்தில் களைத்து போகிறது. இதனால் , இவர்களுக்கு நீரிழிவு நோய் சீக்கிரத்தில் வந்துவிடுகிறது. உடல் பருமன் உள்ளவர்களில் நூறு இல் என்பது பேருக்கு இப்படிதான் நீரிழிவு நோய் வருகிறது.
இன்னொரு வழி இது: உடல் திசுக்களில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேரும் போது செல்களின் இயல்புத் தன்மை மாறுகிறது. இதனால், செல்களுக்குள் நுழைவதற்கு இன்சுலின் சிரமப்படுகிறது. அப்படியே சென்றாலும், செல்களில் கொழுப்பு அடைத்துக் கொள்வதால், இன்சுலின் தனது இயல்பான பணியை செய்ய முடிவதில்லை. இதன் விளைவாகவும் நீரிழிவு நோய் ஏற்படும்.
அதிக உடல் எடை உள்ளவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடல் உழைப்பு குறைந்தவர்கள், இரத்தத்தில் கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படுகிறவர்கள் ஆகியோருக்கு இன்சுலின் எதிர்ப்பு உணர்வு அதிகமாக இருக்கும். சிலருக்கு, பரம்பரை காரணமாகவும் இது வரக்கூடும்...
மேற்சொன்ன வழிகளில் நீரிழிவு நோய் வருவதற்கு வாய்ப்புள்ளவர்கள் கீழ் காணும் வழிமுறைகளை பின்பற்றினால் நீரிழிவு நோய் வருவதை தள்ளிப்போடலாம். மாவுச்சத்துள்ள உணவுவகைகளையும் கொழுப்பு சத்துள்ள உணவுவகைகளையும் இனிப்புப் பாண்டங்களையும் குறைந்து சாப்பிட வேண்டும், எண்ணெயில் பொரித்த, வறுத்த பாண்டங்களையும், பதப்படுத்தப்பட்ட பொதி செய்யப்பட்ட உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும், குளிர் பானங்கள் குடிப்பதை குறைந்து கொள்ள வேண்டும், தினமும் நாற்பத்து ஐந்து நிமிடங்களுக்கு நடைப்பயிற்ச்சி / உடற்பயிற்சி செய்ய வேண்டும், உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். எனவே அனைவரும் நலமாக வாழ்வோம்...
By- Rifka jawfer.
Gr. 09
ஏனைய அனைத்து கட்டுரைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

