F.Ilma கவிதை
குழந்தைப் பருவம் முடிந்து
பள்ளிப் பருவம் தான் தொடங்கி
பாவாடைப் போல் பெட்டிப் பையில்
கிறுக்கல் எழுத்தாய் புத்தகம் சுமந்து
அசை போட்டு ஆடி ஆடி
தோளன் தோள் மேல் தோளினை போட்டு
காலடி வைத்த பொன்னான காலம்.....
வயதுடன் உணர்வும் உயர உயர பறக்க
படி என்ற வார்த்தை "பளிச் பளிச்" என சாய்த்து
செவி இரண்டும் செவிடாகிய நேரம்.....
ஆளுக்கு ஒரு கதிரை; பேனைக்கு ஒரு மேசை என சொகுசாய் அமர்ந்த உலகம்.....
பை வைத்த கதிரை பாதி நேரம்
நடன மேடையாய் ;
ஜாமன் வைத்த கதிரை மணிக்கனக்காய்
குத்தும் இசைக்கருவியாய்;
டஸ்டர் என்ற பிடவைக்குண்டு
பொழுதைக் கழிக்க கிரிக்கட்டு பந்தாய்
நம் பள்ளிக்கூடச் சிந்தனையின் வலைகள்....
சேற்றில் மிதந்து ,
சண்டை மறந்து
சிரிப்போடு சேர
மைதானம் ஒரு குதூகலம்.....
அளவே இல்லா கல்லின் துணையால்
எழுந்து நிற்கும் சுவர்களின் நடுவே
ஓரக்கண்ணில்
காதல் பார்வை....
வண்ணச் சிறகுகளாய்
வார்த்தை சொல்ல
ஆசான் கூட்டம்.....
அடிக்கடி அலைந்து ;
ஆவல் தேடும் பிறம்பேந்திய பிரம்மன்.....
அடியும் மிதியும் உடனே பட்டு
அள்ளிக் கொள்ளும்
அன்பையும் பெற்று
விடைபெற்ற நாளில்
விழிரெண்டும் விலகாமல்.....
கண்ணீர் வடித்த அதே கண்களோடு
சொல்லோ
செயலோ
நிரப்பாத
நினைவை
வரிகளால் தொடர்கிறேன்
இறுதி காண விருப்பம் இன்றி.....
𝑭 _இல்மா_
Name- F.Ilma
From - Raithalawela
District - Matale
Batch - 2021
ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇