F.Ilma Poem

F.Ilma Poem

F.Ilma கவிதை


என்னவனுக்காய் ஒரு கடிதம்......❤️




உன்னை விளித்த மீன்களுக்கு நீ 

வெற்றி பெற்றவள் ஆனாய் .....


உன் கதை அறிந்த பின்னே 

நீ உடைந்த தடங்கள் 

அறிந்தவளானேன்......

புரிந்தவளானேன்......


விழியை நீரால் நிரப்பினேன்.......


உன்னோடு ஐவர்

பேகனின் சிதம்பாய் 

ஒற்றையாய் 

ஒருத்தியாய் 

தூக்கினாள் .......


கணவனின் அஞ்சலி

தனிமையில்

என்றாலும் நம்பிய உயிரின்

நம்பிக்கையாய் திகழ்ந்தாள் 


வயிற்றுப் பசிக்கு

வெறுமனே சாயமாய் 

குடிநீர் செலுத்தினாய்.....


உனதில் தோன்றிய கனவைக் கூட கரைய விட்டாய்....... 

கருவாக்கினவளுக்காய்...


மெய்யில் ஒழிந்த குறைகள் ஏராளம்

அவை

நாளை ஔியின் 

படிகள் என்றே 

வலியை விழியின் சிரிப்பால் மறைத்தாய்....


இருந்தும் உன் ஈமான் ஈரமாக்குதே.....


 எதிலும் வீழாதவள்

 பெண்மையை புரிந்த

 உன் அன்பில்

 வீழ்ந்தாள்....


அதே பொழுதில்

 அது 

அதுவாகவே இருக்கட்டும் 

என்றாள்..... 


காலம்

சொல்லும் பதில்

என்றே நிற்காது

 

ஓடிக் கொண்டே நகர்கையில்....... 


உள்நுழைந்த முற்கள் வாழ்வின் படிளாய் மாறின......


மூத்தவளை மகிழ்விக்க

இயலாமை கடந்து 

கடனாய் நடக்கின்றாய்.....


உன் அன்புக்கு எல்லை தான் கண்டாயோ ! 

நான் அறிந்தேனில்லை...........


ஏன் மறைத்தாய் இத்தனை நாளாய்!


 வரலாறு மறந்து

 வளர்ச்சி கண்டவன் அருகாய் 

நீ ஒர் புரியாத புதிரடா !


உன் முயற்சியால் வீழ்த்திட்ட பூவாயினும் 

வாசமாய் ஏந்தி ஏற்றிவிட்டாயே .......


எங்கேனடா தேடினாய் 

இவ் ஆயுதத்தை 

வீழாதவளை வீழ்த்த ......


இருக்கவே இடமின்றி 

கிடைத்ததை 

பாயால் மறைத்து 

பாயை நீ மறைத்தாயே 

பாயின் ஓரமாய் எனக்கோர் இடம் தான் கொடுப்பாயா ........?


என்னிடம் ஏன் திறந்தாய் 

உன் கனவை.....


கிடைத்ததை இரசித்து வாழவைப்பாய் ராணியாய் என்றாயே !


வீழ்ந்தவள்

ஏங்குகிறேன் 

ஏக்கமாய் ஏற்பாயா ?


உன் கனவோடு நனவாய்

 உனது நிழலாய்

 ஜொலிக்க கிடக்கிறாள்..... 


கோர்ப்பாய்

உன் கையை அவளோடு .....


உன் ஆசை

அவளாள் நிறையும் என்றாய்! 


அவள் முகத்தை உன் அன்பால் புதைப்பாயா ........


இறுதியில் இல்லை என்றால் 

வழிவிட தயங்காதவள்.....

உன் வழியில் தடையாய் நிற்க விரும்பாதவள்.....


உன் கதையின் அங்கமாய் வரியாலே வர்ணம் பூசினேன்......


இப்படிக்கு அவள்🥰


*~காகிதங்களின் காதலி~*

*𝑭 இல்மா*


Name- F.Ilma

From - Raithalawela

District - Matale 

Batch - 2021




ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin