M.H.FNadha Short Story

M.H.FNadha Short Story

M.H.FNadha சிறுகதை 



இதயமொன்று கல்லாகியது.

இருட்டறைக்குள் அறையின் ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு வெறுமனே நிலா வெளிச்சத்தில் கைகளைப் பிசைந்தவாறு அறையின் ஓர் ஓரத்தில் சாய்ந்து கொண்டு வேலை வாய்ப்புக்காக வெளிநாடு சென்ற மகன் பாஹிமைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள் ஆசியாக் கிழவி. மணியோ அதிகாலை நான்கு மணியைத் தொட்டு விட்டது.ஆனால் அவள் இன்னும் உறங்கவில்லை. உறங்குவதற்காக கண்ணை மூடினாலே மகன் பாஹிமைப் பற்றிய நினைவு மனதில் அலை பாய்ந்தது. வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்று இன்றுடன் இரண்டு மாதங்கள் ஆகுகின்றன. ஆனால் இன்னும் மகன் பாஹிமிடம் இருந்து ஒரு தகவலும் வரவில்லை. அவனுக்கு வேலை கிடைத்ததா? இல்லையா? இப்பொழுது அவன் எங்கு இருக்கிறான்? என்ன செய்கிறான்? இப்படி எந்த தகவலும் கிடைக்கவில்லை மகன் பாஹிமிடம் இருந்து. 

கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தால் ஆசியாக் கிழவி. பொழுது புலர்ந்ததும் ஹனிபா மாமா வீட்டுக்குப் போய்(அவ்வூரிலேயே மிகப்பெரிய குடும்பம் ஹனிபா மாமாவின் குடும்பம் தான்.அவர்கள் வீட்டில் தான் தொலைபேசியும் இருந்தது.அனைவரும் அங்கு சென்று தான் தொலைபேசி அழைப்பை மேற்கொள்வர்.) தன் மகனுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள வேண்டும் என நினைத்தாள். பாஹிம் வெளிநாடு செல்லும் போது தான் வேலை தேடிச் செல்லவிருக்கும் வெளிநாட்டு கம்பெனியின் தொலைபேசி இலக்கத்தை ஒரு காகிதத்தில் எழுதிக்கொடுத்தான். அந்த இலக்கத்துக்கு ஒரு அழைப்பை ஏற்படுத்தி மகனிடம் பேசி விடலாம் என முடிவு செய்தாள். அதன் பிறகு தான் அவள் கொஞ்சம் உறங்கினாள். 

மெது மெதுவாக சூரியன் தலையை வெளிக்காட்டியது. அவசர அவசரமாக எழுந்தாள் ஆசியாக் கிழவி. எழுந்தவுடன் காலைக் கடனை முடித்து விட்டு அடுப்பில் தண்ணீர் வைத்து சூடு பண்ணி கசட்டையுடன் கூடிய தேனீர் சாயத்தைப் பருகினாள்.தனது அலுமாரியில் பாதுகாப்பாக வைத்திருந்த மகன் பாஹிம் காகிதத்தில் எழுதித்தந்த தொலைபேசி இலக்கத்தினை எடுத்துக் கொண்டு வெளியாகினாள் ஆசியாக் கிழவி. சுடும் வெயிலைக்கூடப் பொருட்படுத்தாமல் விறு விறுவென நடந்தாள் ஹனிபா
மாமா வீட்டுக்கு. என்றுமில்லா வேகம் இன்று அவள் நடையில். மகனிடம் பேச வேண்டும் என்ற ஆர்வம் அவளுக்கு ஓர் புது சக்தியை வழங்கியது.

எப்படியோ ஹனிபா மாமா வீட்டை அடைந்து விட்டாள் ஆசியாக் கிழவி.
 "அடடடடே!வாங்க மாமி."என்றாள் ஹனிபா மாமாவின் மனைவி சுலைஹா உம்மா.
 "உட்காருங்கோ மாமி" என்ற சுலைஹா உம்மா "நான் அவரை (ஹனிபா மாமாவை) கூட்டிட்டு வாரேன்."என்று உள்ளே சென்றாள். வீட்டிற்கு உள்ளே இருந்து வந்த ஹனிபா மாமா "மாமிக்கு எங்க வீட்டு வர இப்போது தான் வழி தெரிந்தது போல"என்றார்.
"அப்படி ஒன்றும் இல்ல மகன். கால் வழியும் இருக்குது. அதுதான் நான் அதிகம் வெளியில் போறதில்ல மகன்"என்றாள் ஆசியாக் கிழவி. "எனக்குத் தெரியாதா மாமி? நான் சும்மா சொன்னேன்" என்றார் ஹனிபா மாமா. 
"சரி இப்போ என்ன சங்கதியா வந்தீங்க மாமி?" என்று கேட்டார் ஹனிபா மாமா.
"அதுவா மகன், என்னுடைய மகன் பாஹிமுக்கு ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளத் தான் வந்தேன்" என்றாள் ஆசியாக் கிழவி. "அதற்கென்ன மாமி தாராளமாக பண்ணிக் கொள்ளுங்கள்."என்று கூறிவிட்டு "சுலைஹா அந்த தொலை பேசியைக் கொஞ்சம் இங்கு எடுத்து வா"என்றார் ஹனிபா மாமா. தொலைபேசியுடன் வத்தாள் சுலைஹா உம்மா. "இந்தாங்க மாமி" என்று அவர்கள்(ஹனிபா மாமா மற்றும் ஆசியாக் கிழவி) உட்கார்ந்திருக்கும் இடத்தில் ஓர் மேசையின் மீது வைத்தாள்.
"மாமி நீங்க இலக்கத்தை சொல்லுங்க" என்றார் ஹனிபா மாமா. ஆசியாக் கிழவியும் இலக்கத்தை சொன்னாள். அழைப்பை ஏற்படுத்தி ஆசியாக் கிழவியிடம் கொடுத்தார் ஹனிபா மாமா. 
வெளிநாட்டுக் கம்பனியில் இருந்து:- "ஹலோ யாரு பேசுறீங்க?"
ஆசியாக் கிழவி:- "ஹலோ நான் ஆசியா உம்மா பேசுகிறேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு எனது மகன் பாஹிம் உங்களுடைய கம்பெனிக்கு வேலைக்காக வந்தார். அவருடன் பேசத்தான் எடுத்தேன்."
வெ.நா. க.பெ.இருந்து:- "அவருடைய தாயா நீர்? "
ஆ.கிழவி:- "ஆமாம்". 
வெ.நா.க.பெ.இருந்து:- "மன்னிக்கவும் நான் நினைக்கிறேன் 
உங்களுக்கு இந்த விடயம் தெரியாது என்று "
ஆ.கிழவி:-
"என்ன விடயம்? என் மகனுக்கு என்ன?"
வெ.நா.க.பெ.இருந்து:- "உங்களுடைய மகன் இங்கு வேலைக்கு சேர்ந்த நாளே ஓர் விபத்தில் இறந்து விட்டார்."

இதைக்கேட்டவுடன் ஆசியாக் கிழவியின் கண்களில் இருந்து கண்ணீர் மல மலவெனக் கொட்டியது.

"மாமி என்ன சொன்னார்கள் தொலைபேசியில்?" என்றார் ஹனிபா மாமா. ஆசியாக் கிழவி ஏதும் பேசாமல் எழுந்து மௌனமாக சென்று விட்டாள்.
 *_பாவம் ஆசியாக்_* *_கிழவியின்_* *_வார்த்தைகளும்* *_இதயமும்_ கல்லாகி_* *_விட்டது_* .

முற்றும்.

பெயர்:-M.H.F. நதா

பாடசாலை:-குளி/ மடிகே மிதியால மத்திய கல்லூரி

தரம்:- 11

ஊர்:- மடிகே மிதியால

மாவட்டம்:- குருணாகல்





ஏனைய அனைத்து  சிறுகதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin