S.M.F.Rifatha Poem

S.M.F.Rifatha Poem

S.M.F.Rifatha கவிதை


உன் பெரும் செல்வம்

----------------------------


திட உறுதியாய் இரு 

திசை மாறி விடாதே

எப்போதும் உன்னோடு வரப்போவது உன் பெற்றோர்களே

நண்பர்கள் கூட ஒரு காலத்திற்குதான் என்பதை புரிந்து கொள்வாய் 


காலத்திற்கு ஏற்ப மாறுபவர்கள் மற்றவர்கள் ஆனால் 

காலம் சென்றாலும் மாறாதவர்கள் பெற்றவர்கள் 


உன் வாழ்க்கைக்காய் தன் வாழ்வை தியாகம் செய்தவர்களே பெற்றோராக உருமாறிய உத்தமர்கள் 

அவர்களது ஆசை உன் இலட்சியமாய் இருக்கட்டும் 

அவர்களது வார்த்தை உன் வாழ்க்கையாக இருக்கட்டும் 


உன்னை வார்த்தவர்களுக்கு வாழவைக்கத் தெரியாதா

உன் வாழ்வே அவர்களால்தான் உறுதியானது என்பதை மறந்து விடாதே 


அவர்களது கட்டளைகள் உன் சுதந்திர்க்காய் மொழிந்த பொன் மொழிகள் 

அவர்களது தியாகம் உன் உத்தரவாதத்திற்கானது என்பதை நியாபகம் கூர்ந்து விடு 


உன் வாழ்க்கைக்காய் அவர்களை பகைத்து விடாதே

பகைத்தாயானால் உன்னால் வாழவே முடியாது 


பெற்றோர்களே பெருஞ்செல்வம் பெற்றெடுத்த பொக்கிஷங்களே நாம்  

கடைசி வரை பொக்கிஷமாய் இருந்தே பொலிந்திடுவோம் எம் அன்பை


Name - SMF. RIFATHA

AGE - 20

PLACE- BATTICALO, ERAVUR





ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin