Umar Fathima Mujeeba Poem

Umar Fathima Mujeeba Poem

Umar Fathima Mujeeba கவிதை


முடிவு என்ன? 😰


அன்றைய விடியல்களில்

முழித்த புத்தகங்களுக்கு

என்ன பதில் சொல்வேன்?


என் கல்வியை கற்பழிக்க

முயன்ற கயவர்களுக்கு

என்ன பதில் சொல்வேன்?


தலைக்கணம் பட்டம்

வழங்கிய பட்டதாரிகளுக்கூ

என்ன பதில் சொல்வேன்?


பின்னேர வகுப்பிற்கு 

பிந்திச் சென்று

பின் வரிசையில் இடம் பிடித்து

முன்னேற முடியாது என்ற

முட்டாள் கூற்றுக்கு என்ன

பதில் சொல்வேன்?


கண்ணத்தில் முத்தமிட்டு

கட்டியணைத்து கண்ணீரால்

வழியணுப்பி வைத்த வீட்டாருக்கு

என்ன பதில் சொல்வேன்?


ஏளனச்சிரிப்பால் ஏரிட்டுப்பார்த்த

என் எதிரிகளுக்கு என்ன பதில் சொல்வேன்?


அசையா நம்பிக்கையை 

ஆணியாய் பச்சை குத்திய

என் அன்பு ஆசானுக்கு

என்ன பதில் சொல்வேன்?


கல்வியே உன் வெற்றி

மரண சாசனம் சொல்விட்டு

மண்ணரை புறப்பட்ட என் தந்தையின் ஆத்மாவிற்கு 

என்ன பதில் சொல்வேன்?


முக மூடி அணிந்து கல்விக்கு

முட்டுக்கல்லாய் இருந்த போலி

அன்பர்களுக்கு என்ன பதில்

சொல்வேன்?


பதட்டத்தை மறைத்துக்கொண்டு

பசுந்தாய் ஆறுதல் சொல்லும்

என் சகோதரிக்கு என்ன 

பதில் சொல்வேன்?


அனுதினமும் ஆயிரம்

வினாக்கள் ..

பதிலுக்காய் காத்திக்கிடக்கிறது.


சுஜுதுகளிலில் நான் சிந்திய

கண்ணீருக்கும் 

யாருக்கும் தெரியாமல் 

இருளை உடுத்திக்கொண்டு

நான் சிந்திய கண்ணீருக்கும்


பிரார்த்தனை ஆயுதத்தை

கையிலேந்தி போரிட்டு

சிந்திய கண்ணீருக்கும்


இறைவா 


நீ வைத்திரும் பதில் 

என்ன??



கவியின் பேதை


Umar Fathima Mujeeba

Km km al mazhar girls high national school

2021batch

Amprara(nintavur)




ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin