Short story competition-03

Short story competition-03


 🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝

               -----------------------------------

🔹𝗡𝗼: 03
🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: M.H.M.Hakeem
🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Eluwila

#Edukinniya  #StoryCompetition

     ➖➖➖➖➖➖➖


வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில்   வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை  கண்டு

சில வினாடிகள் நின்றார். 
*"இது என்ன பொதியாக இருக்கலாம்?"* என்ற சந்தேகம் கணேஷனை ஆட்கொண்டது. அவர் அதை மெதுவாக திறந்தார். உள்ளே இருந்ததைப் பார்த்த கணேஷ் வியப்பில் உறைந்தார்—அதில் ஒரு பொம்மை மற்றும் பயங்கரமாக இருக்கக் கூடிய ஒரு முகமூடி இருந்தது.

முகமூடியை எடுத்து சற்றே ஆராய்ந்தார். பிறகு அவ்வளவாகக் கவலைப்படாமல், தனது தினசரி துப்பரவு பணிகளில் முன்னேறினார்.

அடுத்த நாள், வழக்கம் போல தனது பணியை தொடரும் போது, மறுபடியும் ஒரு பயங்கர முகமூடியைக் கண்டார். இதுவரை இரண்டு முகமூடிகள்! சந்தேகம் மனதில் வேரூன்றத் தொடங்கியது.

வீட்டிற்கு வந்து பத்திரிகையைப் படித்தபோது, 
*"குழந்தைகளை கடத்தும் முகமூடி அணிந்த நபர் களத்தில் உலாவி வருகிறார்!"* என்ற செய்தி அவர் கண்களில் பட்டது.

*"நான் கண்ட அந்த முகமூடியும் இதுவாக இருக்குமோ?"* என்ற சந்தேகம் வலுப்பெற்றது. அடுத்த நாள் அதிகாலையிலேயே கணேஷ் அந்த இடத்தில் ஒளிந்து இருந்து யார் அந்த முகமூடியை போடுகிறார் என்பதைப் பார்க்கத் தீர்மானித்தார். முடிவாக அந்த நபரையும் பார்த்தார். அவர் ஒரு குழந்தையைக் கடத்த முயற்சிக்கும் போது, உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்தனர். பல குழந்தைகள் அந்த வன்முறை வலையிலிருந்து மீட்கப்பட்டனர்.

கணேஷனின் செயல்திறனுக்கும் தைரியத்திற்கும் அரசு பாராட்டு தெரிவித்தது. அவருக்கு ஒரு பெரிய பொதுச் சேவைக்கான விருது வழங்கப்பட்டது.