🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝
-----------------------------------
🔹𝗡𝗼: 17
🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: Asma Anees
🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Kandy
#Edukinniya #StoryCompetition
➖➖➖➖➖➖➖
வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு
ஆச்சரியத்துடன் அதை எடுத்துப் பார்த்தார். தன் கையில் அப்பொதியை எடுத்து அதனுள் என்ன இருக்கிறது என ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த பொதியை திறக்க திறக்க புடவைகளாகவே இருந்தது அதை அப்படியே கீழே போடுவதற்கு முற்படும் போது அதில் எதோ பாரமாக இருப்பதை உணர்ந்தார்.
முயற்சியை கைவிடாது அந்தப்பொதியை திறந்தார்.
அதற்குள் இருப்பது பணமும் மாணிக்கமும்
இதை பார்த்த அவரின் கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது. இந்த பொதியை வீட்டிற்கு கொண்டு செல்வதா இல்லையெனில் பொலிஸ் நிலையத்தில் கொடுப்பதா என்ற கேள்விக்கு ஆளானார்.
அவரிடம் காணப்பட்ட நேர்மை,மனிதநேயம் போன்ற நற்பண்புகள் காரணமாக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதே சிறந்தது என முடிவு செய்து பொலிஸாரிடமே ஒப்படைத்து நடந்தவற்றை கூறினார். பொலிஸாரும் அதை வாங்கிக்கொண்டார்கள்.
நாட்கள் கடந்தது.
தினமும் போல கணேஷன் பிள்ளைகளின் படிப்பை எண்ணியவராகவும் அவரது வாழ்க்கையை எண்ணியவராகவும் பிள்ளைகளை பாடசாலை அனுப்புவதற்கு சமைத்துக்கொண்டிருந்தார். திடீரென வீட்டுக்கதவை தட்டும் சத்தம் உடனடியாக அவருடைய மூத்த மகன் கதவை திறந்தார் . அவர்களை உள்ளே அழைத்து விட்டு தன் தந்தையிடம் சென்று பொலிஸார் மற்றும் சில நபர்களும் வந்ததாக கூறினான்.
கணேஷன் உடனே வந்து யாரென பார்த்தான் .அவர்களை பார்த்தவுடன் பதற்றமடைந்தான்.
அந்த அதிகாரி இவரின் தோல்புஜத்தில் கையை வைத்து நீங்கள் எதற்காக அந்த பொதியை பொலிஸாரிடம் ஒப்படைத்தீர்? நீங்கள் இவ்வளவு கஷ்டத்திலும் இருக்கின்ற போதிலும் பொதியை ஒப்படைத்த காரணத்தை கூறுவீரா?
நீங்கள் அதை கொண்டு வந்து உங்களுடைய தேவையையும் நிறைவு செய்திருக்கலாமே எதற்காக அவ்வாறு செய்யவில்லை?
அதிகாரியே நான் அவ்வாறு செய்திருந்தால் எது எனக்கு எப்போதும் குற்றவுணர்வாக தான் இருக்கும் மேலும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் குறைவாக இருந்தாலும் அது கூட மகிழ்ச்சியை தரும்.
தான் நேர்மையாக உழைக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு இவ்வாறு பிறரின் பொருளை எடுக்கும் சந்தோஷம் ஒரு நுண்ணிய அளவு கூட ஈடாகாது. என்றெல்லாம் கூறினார் .
வந்த அதிகாரிகள் கூறினார்கள் நாங்கள் தாம் இவ்வாறு சில இடங்களில் பணப்பொதிகளை வைத்தோம் இதில் நீங்கள் மாத்திரம் இதை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தீர் உங்கள் இந்த நற்செயலுக்காக இந்த பொதியையும் உங்களுக்கான புதிய வேலையையும் பிள்ளைகளினதும்
உங்கள் மனைவியின் செலவுகளையும் எமது இக்குழுவினால் பொறுப்பேற்கின்றோம்.
இது நாம் உங்களுக்கு தரும் தொழிலாளர் தின பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
நேர்மை எப்போதும் பயனளிக்கும்.