Short story competition-48

Short story competition-48


 🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝

               -----------------------------------


🔹𝗡𝗼: 48

🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: B.L.Maryam

🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Kadugannawa 


 #Edukinniya #StoryCompetition


     ➖➖➖➖➖➖➖



வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு

அதை அவர் எடுத்துப் பார்த்த போது அதில் தங்க நாணயங்களும் மூன்று இலட்சம் பணமும் இருந்தன.அதை கண்டு வியப்படைந்த கணேஷன் ,"இந்த பணப்பொதி எப்படி வந்தது?" என்று எண்ணியவாறு இருக்கும் போது கணேஷனோடு வேலை செய்யும் வேலையாட்கள் இருவர் வந்தனர்.கணேஷனின் கையிலிருந்த பொதியை உற்று நோக்கி " உனக்கு எப்படி இந்தப் பொதி கிடைத்தது"? என வினவினார்கள்.கணேஷன் "நான் கொழும்பு மாநகர சபையின் கையொப்பத்தையிட்டு வீதிக்கு வரும் போது இப்பொதியைக் கண்டெடுத்தேன்' என கூறினார்.அப்போது அவர்கள் இருவரும் ஏதோ முணுமுணுத்துக் கொண்டனர்.கணேஷன் என்ன செய்வது என்று யோசிக்கும் போது அந்தப் பக்கமாக வந்த ஒரு திருடன் அப்பொதியை கண்டவுடன் ஒரு நொடியில் அதை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடினான்.பின்னால் கணேஷனும் இரு வேலையாட்களும் வேகமாக திருடனை பிடிக்க ஓடினர்.மிகவும் சிரமப்பட்டு வேகமாக ஓடி திருடனை கையும் களவுமாகப் பிடித்தனர்.அதன்பின்னர் அத்திருடனிடமிருந்து பணப்பெதியை எடுத்து விட்டு திருடனையும் பணப்பெதியையும் ஒப்படைக்க பெலிஸ் நிலையத்துக்குச் சென்றனர். 

                     பின்னர் அங்கிருந்த பொலிசார் திருடனையும், அவர்களையும் விசாரித்தனர்.பிறகு திருடனைக் கைது செய்தார்.அப்பணப்பையை உரியவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டு விடை பெறச் சென்ற போது, அவ்விடத்தை நோக்கி அப்பொதிக்கு உரிமையாளர் வந்து நேர்மையைப் பாராட்டி அப்பொதியிலுள்ள பணத்தை அவனுக்கே பரிசாகக் கொடுத்தார்.

                               கணேஷனோ செய்வது அறியாது இது கனவா இல்ல நனவா என்று ஓர் நிமிடம் அவ்விடத்தில் அவ்வாறே நின்றான்.பின்பு தன்னுடைய நேர்மைக்கே இந்தப் பரிசு என்று மனதால் எண்ணியவனாக அவ்விடத்தில் இருந்து நன்றியுடன் விடை பெற்றான் கணேஷன்.பின் அவனின் நண்பர்கள் இருவருக்கும் அப்பணத்தில் இருந்து பகிர்ந்து கொடுத்தான்.அதன் பின்னர் மனதில் பல வித எண்ணங்களுடனும், ஆசைகளுடனும் அப்பொதியை எடுத்து விட்டு வீட்டை நோக்கிச் சென்றான் கணேஷின்.அவ்வேளையில் மனதில் தனது குடும்ப நிலையையும், பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சரி செய்து விடலாம் என்று மனதால் எண்ணியவனாக வீட்டுக் கதவைத் தட்டினான் கணேஷன்.