Short story competition-50

Short story competition-50


 🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝

               -----------------------------------

🔹𝗡𝗼: 50
🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: M.I.F.Zahra
🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Madawala 

#Edukinniya  #StoryCompetition

     ➖➖➖➖➖➖➖


வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில்   வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை  கண்டு
கையில் எடுக்க சிந்தித்தார். அப்பொதி கொஞ்சம் பெரிதாக இருந்தபையால் உள்ளத்தில் ஏற்பட்ட அச்சத்தை நீக்கி அப்பொதியை தூக்கினார் அதை திறந்து பார்த்தபோது அது சிறுமி ஒருத்தியின் துணிகள் என்பதை உணர்ந்தார் அவர் அருகில் வந்த நண்பர் "என்னடா கணேஷா புதையலை கண்டப்ல பிரமித்துப் போய் இருக்க "அதற்கு கணேசன் "இல்லடா குரு ,இதுல சின்ன பாப்பாவோட சட்டைகள் கணக கெடக்கு அதுதான் யோசித்தேன்". என்று கூற அவர் நண்பரோ "அத தூர போட்டு வேலைய பாரு" என்றார்.கணேசன் மனதோ அதற்கு இடம் கொடுக்கவில்லை எடுத்துக்கொண்டு அவர்களின். குழுத் தலைவர் அருகில் சென்று விவரத்தை சொல்ல அவர் அதை கண்டுகொள்ளவில்லை பின்பு கணேசன், மாணவர் சபை தலைவரிடமே அதை விளக்கமாக எடுத்துச் சொன்னார். தலைவரோ "அதை உன் குழந்தைகளுக்கு வேண்டு மானால் எடுத்துக் கொள்" என்று கூறிவிட்டு சென்றார். கணேசன் அப்படியான ஊழியர் அல்ல அவரோ நேர்மையாக உழைத்து வாழ கடிமையானவராக இருந்தார். அவர் அதை அப்படியே எடுத்துச் சென்று அவர்களது உபகரணங்கள் வைக்கும் அறையில் பத்திரமாக ஒதுக்கி வைத்து விட்டு வந்தார். தொழிலை தவ் தேடி வந்தால் கொடுப்போம் என்று நினைத்த கணேசன் அவரது வேலையில் மும்முரமானார்.அடுத்த நாள் காலை கணேஷன் மாநகர சபைக்கு போனபோது அங்கு வித்தியாசமான பரபரப்பு நிலைமையை உணர்ந்தார் என்னவோ என்று கையொப்பமிட சென்றவரை தலைவரே தோலை தட்டி அழைத்துச் சென்றார் தலைவர் கணக்காளர் குழுத்ததலைவர்  இன்னும் ஊழியர்கள் என பலரும் கூடியிருந்த அவ்விடத்தில் கணேசன் அறியாத இரண்டு முகங்களும் இருப்பதை கண்டு சிந்திக்கலானார்
அவர்களது தலைவரோ ஆரம்பித்தார் "கணேசா இவர் மத்திய வங்கியின் கணக்காளர் இவருடைய  மகள் சுகையீனமுற்றிருக்காராம். வைத்திய சாலையில் இருந்து திரும்பும் போது அவர் வாகனம் ரெப்பெயார் ஆகவும் அவசரத்தில் வந்த பஸ்ஸில் ஏறி இருக்கார் ஏதோ குழந்தைட யோசனையால அவர் பையை தவறிவிட்டார். பஸ் நடத்தினரோ இரவு மட்டும் பார்த்துவிட்டு அதை இங்கு தூர போட்டு இருக்கானுங்க அதுல தான் தண்ட மகளுக்கு ஆபரேஷனுக்கு எடுத்த ரிப்போர்ட் எல்லாம் இருக்காம்".
நீர்  நேற்று கண்டபடி பொதி அதுவாத்தான் இருக்கும் ஆம் ஐயா நல்லவேளை நான் அதை தூர போடாம இங்கதான் வெச்சிருக்கன். அந்த உரிமையாளருக்கு இப்போது தான் முகம் மலர்ந்தது
கணேசன் போய் அந்த பொதியை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தார் அவரோ அதை வாங்கி துணிகளுக்கு உள்ளிருந்த டொக்கிய்வ்மெண்ட் செய் வெளியில் எடுத்துப் பார்த்தது அனைவருக்கும் நன்றி கூறினார் அங்கிருந்த தலைவர். கணக்காளர், ஊழியர்கள் அனைவரும் கணேசனை பாராட்டினார்.
அந்தப் பொதியின் சொந்தக்காரர் தனது சட்டை பையில் இருந்து ஏதோ எடுத்து கணேசன் இடம் நீட்டினார் கணேசன் "இல்லை ஐயா எனக்கு இந்த காசு தேவையில்லை நான் எனது தொழிலை தான் நேர்த்தியாக செய்தேன். உங்களின்  ஆவணங்கள் கிடைத்ததில் எனக்கு மனமகிழ்ச்சி வைத்தியரை போய் பாருங்கள் என்றார்."
அந்த தௌழிளாலர் தினத்திலே கணேசனின் நேர்மையையும் கடமையுணர்வையும் மதித்து அவருக்கு சம்பள உயர்வு நிச்சயிக்கப்பட்டிருந்தது. அந்த பொதியின் உரிமையாளரின் ஏற்பாட்டிலே ...