23) மாணவர்களது கவிதைகள் (2021/10/27)

23) மாணவர்களது கவிதைகள் (2021/10/27)

கவிதைகள்-06

ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇
                 Click


கவிதை-01



மலர்ச் செடி
  
மண்ணில் வேரூன்றிய
     மலர்ச் செடியே
 நீ உன்னில் அழகான 
       பூவை தாங்கினாய் 
        என் அன்னை என்னை அவள் கருவறையில்  
      தாங்கியதை போல்.
🌷🌷🌷🌷🌷🌷


Name-sinnakkaruppan sumithira (chutty ponnu sumy)
School-mu/suthanthirapuram t.m.v
Grade-12(2022 exam batch)
Address- suthanthirapuram center
District-mullitivu



கவிதை-02




சீரழியும் சமுதாயம்


 வானம் பூமியை ஆறு தினங்களில் படைத்ததிட்ட இறைவன்- தன் அற்புதப்படைப்பாய் மனிதனை படைத்திட்டான்....

அற்புத உலகின் அற்பங்களுக்காய்- தன் வாழ்வை சீரழித்து திரிகிறது ஆயிரம் மனித மனங்கள்.......

 மதுவும் மாதுவும் மனதை மயக்கி விட மறுமைதனை மறந்து மதி-மயங்கி போகிறது மனித மனங்கள்.........

 சீதனமும் சீரியலும் சீரழிவு என்று தெரிந்தும் கூட சிந்திக்காமல் சிரித்து சின்னாபின்னமாகிறது மனித உள்ளங்கள்........

 கல்வியே கண் என்பர் 
கல்வியை ஊட்டும் கல்லூரி தனில் தம்- கர்ப்பை இழக்கும் அவலம் -இன்று 

  பச்சிளம் குழந்தையும் பாலியல் பலாத்காரத்தில் சிக்கி பரிதவிக்கும் படு பாதாள உலகமடா இது....

 அப்பப்பா இத்தனை சீரழிவும் எங்கு? எப்படி? நெறி பிறழ்ந்து தறிகெட்டுத் திரியும் மனித மனங்களில் தானே!

 அல்குர்ஆனும் சுன்னாவும் மனங்களை விட்டு நீங்கினாள் குற்றங்கள் கூட குறையாது குருட்டு உலகிலே!

 கற்றதை சொல்கிறேன்- கேள்! கற்பனை உலகின் கதவுகளை மூடி கல்புகளின் கதவுகளை திற கணங்கள் நீங்கி அமைதி பெறுவாய்.......

 சோதரனே!
 சீரழிந்து போகும் உலகிற்காய் கண்ணீரோடு
 இருகரம் ஏந்திடு
 உன் கண்ணீரின் காணிக்கையாய் சுவனமதை சுவைக்கச் செய்வான் இறைவன்......



Hajara abdhullatheef
P/Ulukkppallam muslim maha vidyalaya
Grade :13
Hussainiya puram,
Puttalam...




கவிதை-03

🤰🏻எனது பிறந்த நாள்🤱🏻



 இன்ப துன்பம் பல காண
உறவுகள் சூழ வாழ
சாதனைகள் பல படைக்க 
இறைவன் அருள் கொண்டு 
தாயின் வலியினூடு
நான் ஜனித்த நாள்
         இன்று
எனது பிறந்தநாள்


NAME : ILMA YAKOOB (IMMAYA)
SCHOOL: KULI /MADIGE MIDIYALA CENTRAL COLLEGE
AGE : 17
VILLAGE : MADIGE MIDIYALA
DISTRICT : KURUNEGALA


உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇


Contact : Click here 



கீழுள்ள Like இனை அழுத்தி ஆக்கங்கள் அனுப்பியவர்களை  ஊக்கப்படுத்துங்கள்.