Raheem Fathima Sulaiha கவிதை
வெற்றிக்கு முதற்படி என் தாய்
தந்தயைின் அன்பினாளலும் தாயின் தியாகத்தினாலும் அன்று உருவானேன் தாயின் வயிற்றில் கருவாக ...
தாய் வயிற்றில் புரண்டெலுந்து அவள் அடி வயிற்றில் உதை உதைத்து ... அவளை தாயாக்கும் தருணமே என் பிறப்பின் அடித்தளம்..
முடி கணக்கு வேதனையை சுமந்து ...கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரை பிளந்து ' அம்மா' என்று ஒலி எழுப்பி வெளியில் வந்தேன் ஒரு பெண்ணாக...
அழுகையில் சினுங்கி மழழை மொழியில் தாயை சிரிக்க வைத்து... தாயூட்டிய அமுதத்தை உண்டு கழித்த நாட்களே என் குழந்தை பருவம்...
கைத்தட்டி பாராட்டு பெற்று தன்னை பற்றி அறிமுகப்படுத்திய நாட்களே... நான் சென்ற பாலர் பாடசாலை தருணம்...
'அ' என்று சொல் கற்று... 'அம்மா' என்று எழுதகற்று வளர்ந்து சென்றேன் பாடசாலையில்...
உலகத்தில் ஒவ்வொறு பிறப்பும் சாவுக்கு முற்றுப்புள்ளி அல்ல... சாதனைக்கு வெற்றிப்புள்ளி... என என் தாய் எனக்கு சொல்லி வளர்த்தால்...
நான் வைக்கும் ஒவ்வொறு அடியும் வாழ்கையின் முதற்படி அல்ல.. வெற்றியின் வளர் படி.. என தோல்விக்கி தைரியம்மூட்டி எச்சரிக்கை செய்தால் என் தாய்...
இருளிள் சூழ்ந்த என் வாழ்கைக்கு துணை விளக்காய் ஔி எழுப்பியவளே என் தாய்... வெற்றியை நோக்கி பயணிக்கும் என் வெற்று
கண்களுக்கு தாயே குத்து விளக்கு...
மனைக்கு நான்கு தூண்கள் என்பது போல்.. எனக்கு தூணாய் ,துணையாய் நின்றவள் என் தாய்.. விடியும் வரை தெரியாது காண்பது
கனவா ? என்பது போல் சாதிக்கும் வரை தெரியாது சாதித்தது தாயா இல்லை.. நானா என்பது...
சொல்ல முடியாத சில தருணம் சொல்லி முடிப்பதே கடினம்.. சாதிக்க தூண்டிய தாயை சாதித்த பின் ஓரம் கட்டினேன்...
அன்று வெற்றியாள் வந்த ஆனந்த கண்ணீரை...தன்னறியாமல் தொடர வைத்தேன் கொடூரகண்ணீராய்...
நான் கண் மறைந்தால் கண் கலங்கும் என் தாயை மறைய முன்னறே மறைந்து நின்று நோகடித்தேன் மனகவலையால்... உணர்வுக்கு உயிரூட்டும் என் தாயை இரவு பகலாக மெழுகாய் உருக வைத்தேன்...
அடித்தாலும் தாயே..பிடித்தாலும் தாயே..என அவள் மேல் கொதித்தெழுந்தேன்...அன்புக்கு அடிமை என்பது போல் தாயும் என் சேட்டைக்கு சோதனையானால்...
தன்னரியாமலே என்தாயை இரவில் படுத்துரங்கும் தலையனையை தலை நனைக்க வைத்தேன்...என்னை விட சாதிக்க துவண்டவல் வேறு எவறும்மில்லை என மிருதம் பிடித்தேன்...
பசித்தாலும் தாகித்தாலும் தன்னை பட்டினியிட்டாலும் தனக்காக வறுந்தும் தாயை ஏர் எடுத்து பார்க்கவில்லை... இ ந்த பாவி ..வீட்டுக்குள்ளே பூட்டு போட்டு சிறை வைத்தேன் அந்த அப்பாவியை...
ஏறி சென்ற படியில் வழிக்கியவள் போல் வழி தெரியாமல் தடுமாறி தடம்மாறி நின்றேன் அன்று ஒருநாள்...
அன்று உணர்ந்தேன் என் தாயின் மகிமையை... பறந்து திரிந்து பறவையாய் நின்ற என் தாயை சிறகுகள் இல்லாமலே சிதைத்து விட்டேனே...என உணர்த்தேன், ஊறுகினேன்,மிளர்தேன்,கன்னத்தில் கறைந்த இறந்த கறையாய் வலிந்தோடியது...வேதனைகள் கண்ணீராய்...
தன் உயிரை விட தன்னை மதித்த தாயை உயிறுடனே புதைத்து விட்டேனே...மண்ணுள் புதைத்த செடியாய் வளரவிடாமல் மறைந்து
விட்டேனே...அது தெரியாமல் நான் வளர்ந்து விட்டேனே....
உன்னை மறந்த என்னை பிள்ளை என்பாயா...இல்லை உன்னை கொன்ற உயிர்காவி என்பாயா...என் தாயே எனக்கு என்ன பெயர் சூட்ட பேகிறாய் சொல்....?
என்னை மன்னித்து விடு.. மறந்து விடாதே..! உன் காலடியில் விழுந்தாலும் நான் செய்த பாவம் என்னை கறைசேர்க்குமா..?
இனியும் உன்னை இழக்க நான் விரும்பவில்லை... உன் காலடியே என் சுவர்க்க பூஞ்சோலை.. என் உயிருக்கு மேலானவள் நீ..இனிமேல் உன்னையும் நேசிப்பேன் ..என்உயிரையும் நேசிப்பேன்...
என் தாய்பட்ட வேதனையை யார்? அறிவார் இவ்வுலகில் நான் அறிவேன் அன்று ஒருநாள் தாயான பின்... என் தாயே....
Name: Raheem Fathima Sulaiha
school name: amina girls national school
age:18
grade:13
district: matale
address:Ketawela, madawela, ulpotha, matale
ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇
