Abi short story

Abi short story

 Abi சிறுகதை



ஏணிப்படி


         ஆலங்கேணி பிரதேசமும் வழமைபோன்று இயங்கிக்கொண்டிருந்தது .காந்தனும் விவசாய நடவடிக்கை பார்ப்பதற்காக ஆயத்தமானான். அப் பிரதேசம் அதிகம் கஷ்டப்பட்ட தென்றாலும் தன்னுடைய குடும்பத்தை நடத்திச் செல்வதில் வல்லவன் நம்முடைய காந்தன். அவனுடைய மகன் சின்னா. பதினோராம் வகுப்பில் படிக்கிறான். துடிதுடிப்பானவன்.வாலு பையன். அவனும் அவனது தகப்பனாருடன் ஆயத்தமாகி கொண்டிருந்தான். காந்தன் மனைவி கமலினி .தன்னுடைய கணவரின் முயற்சிக்கு பக்கபலமாக இருப்பவள் என்று கூறலாம். ஏனென்றால் கமலினி சின்ன சின்ன தோட்டம் செய்வது ,வீட்டுப் பின்புறத்தில் கோழி வளர்ப்பது என ஒத்தாசையாக இருப்பவள்.    

          இருவரும் வீட்டை விட்டு செல்லும்போது "போயிற்று வாறம்" என்று கூறிவிட்டே செல்வார்கள். அன்றும் கூறிவிட்டு காந்தனும் அவன் மகன் சின்னாவும் அன்னநடை நடந்து சென்றார்கள். செல்லும் வழியில் காந்தன் சின்னாவிடம் "நீ படிச்சு பெரிய கவிஞனாக வரணும் விளையாட்டல்லாம் விட்டுட்டு படிக்க வேண்டும்" என்று கூறியபடியே நடந்தார் பதினோராம் வகுப்பு மாணவர்களை சொல்லவா வேண்டும்....?விளையாட்டுத்தனம் தான் அதிகமாக இருக்கும்.படிப்பதில் சற்று அசட்டுத்தனமாக இருப்பார்கள். ஆனாலும் சிலர் விதிவிலக்கு. நம்முடைய சின்னா விளையாட்டில் தான் அக்கறை. இதனை அறிந்து தான் காந்தன் அடிக்கடி அறிவுரை கூறுவது, இன்றும் அப்படித்தான் அறிவுரையுடன் இலட்சியத்தையும் புகட்டிக் கொண்டிருந்தான். இதனை கேட்ட சின்னான் “ என்னப்பா...! கவிஞனா...? அது எப்படி நான் ஆவது..? அதுக்கு எப்படி படிக்கணும் என்று கூட தெரியாது எனக்கு. "என்று சலிப்பாக பதிலளித்தான். இதனைக் கேட்ட காந்தன் பொறுமையாக ஹா... ஹா... என்று சிரித்துக் கொண்டே “அடே சின்னா அதுக்கு நீ நல்லா புத்தகங்கள் வாசி. வாசிக்கும் போது தான் உனக்கு மொழியாற்றல் வரும். அப்போ தான் உன்னால கவிதை எழுத முடியும். இந்த உலகமே உன்னை திரும்பிப் பார்க்கும். நல்லா படிக்கணும்" என்று உற்சாகம் வருவதற்கு சின்னா வை முதுகில் அடித்துக் கொண்டே கூறினார். சின்னா இடையில் நேரிட்ட குட்டையொன்றை பாய்ந்து கொண்டே "சரிப்பா" என்று சொன்னான்.தன் நண்பர் ஒருவரை சந்தித்த காந்தன் தன் மகனை கவனமாக செல்லுமாறு கூறிவிட்டு நண்பருடன் சென்றான். சின்னாவிற்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்று எண்ணி கொண்டு ஆலங்கேணி பிரதேசத்து மைதானத்திற்கு புறப்பட்டான். சகபாடிகளுடன் விளையாடி கெட்ட பழக்கத்திற்கும் அடிமையானான் சின்னா.பொழுது மறைந்து சாயங்காலமும் ஆகிவிட்டது. நல்ல பிள்ளையாக வீடு திரும்பினான் சின்னா.அன்றைய நாள் அவனுக்கு பள்ளிக்கூடத்தில் கணித பாட பரீட்சையில் இருந்தது அதற்கு கூட சமூகமளிக்கவில்லை நம்ம சின்னா. தந்தை காந்தன் ஒரு சில புத்தகங்கள் வாங்கிக் கொண்டு வந்திருந்தான். புத்தகங்களை கமலினி அவனிடம் கொடுக்கும்போது, அவன் ஏதோ தவறு செய்திருக்கிறோம் என்பதை முக பாவனை மூலம் அறிந்து ஊகிக்கின்றாள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் அது இதுதான். சின்னான் மாட்டிவிடுவானோ...? என்று நெஞ்சு பகீரென்றது. புத்தகங்களை வாங்கிக் கொண்டு தலையை குனிந்தபடி அறையினுள் சென்றான் .ஒன்றும் பேசாது கமலினி வெளியே இருந்த கணவரிடம் "சின்னா படிப்பு பற்றி விசாரித்து வருவோங்க. அவன் படிக்கிறானும் இல்லை போல. ஒருக்கா பள்ளிக்கூடம் வரை போயிட்டு வருவோம்" என்று சாதுவாக கூறவே, "ம்ம்ம்... சரி நீ சொல்றதும் சரிதான் அவனுக்கு மேல பெரிய நம்பிக்கை வெச்சிருக்கேன் இந்தப் பிரதேசத்தில் அவன் படிக்கணும் நாளைக்கு போவம்.... சாப்பாடு எடுத்து வை. "என்று காந்தனும் தாழ்ந்து சம்மதித்தான்.


          மறுநாள் புலர்ந்தது.சின்னா வழமைபோன்று தயாராகி பள்ளிக்கூடம் சென்றான்." தான் நல்ல வேளை நேற்று மாட்டல. இண்டைக்கு பள்ளிக்கூடம் போவம் நாளைக்கு கட் அடிப்போம்" என்று தனக்குள்ளே கூறிக் கொண்டு நடந்து சென்றான். காந்தனும் அவனது மனைவி கமலினி யும் பள்ளிக்கூடம் செல்ல தயாராகி, சின்னா மறைந்ததும் இருவரும் புறப்பட்டார்கள். பள்ளிக்கூட பாடசாலை கீதம் ஒலித்துக்கொண்டிருந்தது .அதனை தொடர்ந்து "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி" என்ற தமிழ் மொழி வாழ்த்தும் இசைத்துக் கொண்டிருக்கையில் காந்தனும் கமலினியும் பள்ளிக்கூடத்தை எட்டினார்கள்.

காலை கூட்டம் முடிந்து மாணவர்கள் வகுப்பினுள் சென்றுகொண்டிருந்தனர். தலைமையாசிரியர் மட்டும் செல்லவில்லை. அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு மாணவர்கள் சிலரை விசாரித்துக் கொண்டிருந்தார். திடீரென நுழைந்தனர் இருவரும். காந்தனுக்கு பூகம்பமே வந்தது போலாயிற்று. அவனது நம்பிக்கை சிதறியது. விசாரிக்கப்பட்ட மாணவர்களுள் ஒருவன் வேற யாரும் இல்லை.சின்னா...! தான் சின்னாவிடம் தலைமை வாத்தியார் “ஏன் நேற்று பரீட்சைக்கு வரல்ல. உண்மையை சொல்லு உன்னைத் தெரியும். சொல்லு மற்ற பிள்ளைகளையும் நீதான் கெடுக்கிறது. சொல்லு சின்னா"என்று அதட்டிக் கொண்டிருந்தார்.


காந்தன் செய்வதறியாது நின்றான். கூடவே கமலினியும். தலைமையாசிரியரிடம் காந்தன் “மன்னிச்சிடுங்க சேர். இனி இப்படி நடக்காது. என்ற மகன் மீது நான் நம்பிக்கை வைச்சிருக்கன் சேர்" என்று தொய்ந்து போன குரலில் சொல்லியபடியே சின்னாவையும் சற்றுப் பார்த்தான். ஆனாலும் அப்பொழுது கூட தான் பட்ட வலியை நினைத்து பார்த்தானே தவிர காந்தன் கோபப்படவில்லை தலைமை ஆசிரியரும் ஒன்றும் பேசாமல் “கூட்டிப் போங்க" என்றார். சின்னாவைக் கூட்டிக் கொண்டு வீடு திரும்பினார்கள்.


         சின்னாவை

 அழைத்து காந்தன் “நீ ஏன் இப்படி இருக்கா... நான் அன்றும் சொன்னன். அதைக்கூட கேக்கல்ல.. எனக்கு ஆசிரியர்கள் பலர் *ஏணிப்படியாக* இருந்தார்கள். ஒவ்வொரு படியும் அவங்க கைகள். ஆனால் கடைசில ஏற்பட்ட விபத்தில் என்னால பரீட்சை எழுத முடியல்ல... ரொம்பவும் கஷ்டப்பட்டேன். அப்போ தான் ஆசிரியர்கள் சொன்னார்கள் உன்னுடைய மகனையோ மகளையோ. .. உன்ர கனவை கூறி படிக்கச் வை. என்றார்கள்" என்று கூறி அழுது கொண்டு ”அதுக்குத்தான் உன்னை படி புத்தகத்தை வாசிக்க சொன்னேன். கவிஞனாக சொன்னேன். அப்போ தான் நீ படிப்பாய் என்று பார்த்தேன். கடைசியில நான் தோற்றுப் போய் விட்டேன்" என்று கூறி கண்ணீரை துடைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றார். தனக்கு மேல அவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காங்க நம்மட அப்பா அம்மா என்று புரிந்துகொண்டு திடகாத்திரமாக எழுந்து சென்றான். உள்ளே சென்று ஒரு சில புத்தகங்களை எடுத்துக்கொண்டு படிக்கத் தொடங்கினான். இதனைப் பார்த்த காந்தனும் கமலினியும் புன்முறுவலுடன் உறங்கச் சென்றனர்.


      மறுநாள் சின்னாக்காகவே, பொழுது புலர்ந்தது எனலாம். வீறுநடை போட்டு ,நேர்கொண்ட பார்வையாக பாடசாலை நோக்கி புறப்பட்டான். பாடசாலையில் ஒழுங்குற பாடங்களை கற்றான்.தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பலரும் சின்னாவிற்கு *படியாக* விளங்கினார்கள். மேலும் உயர்ந்துக் கொண்டே சென்றான். காலங்கள் உருண்டோடின. பரீட்சையும் நெருங்கியது. பரீட்சையில் தோற்றி அதிசிறப்புத் தேர்ச்சி பெற்றான். ஆலங்கேணி பிரதேச சமூகத்திற்கே விடியல் பிறந்தது ஆயிற்று. எதிர்பாராத சின்னாவிற்கு வெளியூர் புலமைப் பரிசிலும் கிடைத்தது. அது எதற்கு என்றால், சின்னா பொழுதுபோக்காக கவிதை , கட்டுரை எழுதி பத்திரிகைகளுக்கு கொடுப்பது வழக்கம். அவனுடைய மொழியாற்றல் மிக்க கவிதையொன்றிற்கு வாசிப்பிற்கான ,ஒரு புலமைப்பரிசில் கிடைத்தது. காந்தனுக்கு சொல்லமுடியாத சந்தோஷம் மனதில்.... ஒரு நாள் சின்னா வீட்டிற்கு பத்திரிகையாளர் ஒரு சிலர் சின்னாவை நேர்காணலுக்காக வந்திருந்தனர். வந்தவர்களில் ஒருவர் "உங்கட அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்க சின்னா கஷ்டமான பிரதேசத்திலிருந்து எப்படி படிச்சிங்க. எதிர்கால பிள்ளைகளுக்கும் உதவும் என்றார்". அதனைக் கட்ட சின்னா "அன்று ஒரு நாள் நடந்த கசப்பான சம்பவம் இன்று இனிப்பாக மாத்திவிட்டது. தலைமையாசிரியரிடம் கைகளை கட்டிக்கொண்டு திட்டு வாங்கினேன். என் மேல் நம்பிக்கை வைச்சு அப்பா தட்டிக்கொடுத்த வார்த்தைகள், அறிவுரை கூறிய விதம் இதெல்லாம் தான் சாதிக்க வைத்தது .என்று பொறுமையாக பதிலளித்தான். இதனை குறிப்பு எடுத்துக் கொண்ட மற்றுமொரு பத்திரிகையாளர் யாரெல்லாம் உங்களுக்கு *ஏணிப்படியாக* இருந்தாங்க. ?? " அறிந்து கொள்ள முடியுமா என்று அடுத்தடுத்து வினா தொடுத்தார்கள். அவனும் தொடர்ந்து பதிலளித்தான்.

"முதல்ல என்னைத் தட்டித் தந்த தகப்பனாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். முதல்ல புத்தகம் வாசிக்கணும் அப்போதான் மொழியாற்றல் வளரும். கவிதை எழுதலாம் கவிஞனாக ஆகுவா. என்றெல்லாம் சொன்னார். என்னுடைய முயற்சியில் முதல் ஏணிப்படி அவர் " என்றான். தொடர்ந்தும், "தலைமையாசிரியர் அன்று நடந்த சம்பவத்தின் பிறகு எனக்கு அதிக ஆதரவு, உதவி செய்தார் அவர் என்னுடைய அடுத்த படி . பிரதேசத்து ஆசிரியர் மற்றும் வெளியூர் ஆசிரியர் பலரும் உதவி இருக்கிறார்கள் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என்றான்.அவர்கள் அடுத்தடுத்த படிகள். ஏன் என் குடும்பம் சமூகம் கூட... என்றான்..

தொடர்ந்தும் பத்திரிகையாளர் வளையூர் செல்வதா...? சின்னான். " என்று கேட்டகவே சின்னாவும் சலிப்படையாது, இல்லை இல்லை..... நான் படித்தது என்ர சமூகத்தை முன்னேற்ற தான். ஊரில் இருப்பவர்களுக்கு நான் வாசிப்பின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுக்கணும். எந்த வாசிப்பும் புத்தகமும் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்ததோ அந்த நிலையை இந்த ஆலங்கேணி பிரதேசத்தையும் முன்னேற்றனும்." என்று ஆணித்தனமாக கூறி முடித்தான்.

   பத்திரிகையாளர்கள் சின்னா கூறியதைக் கேட்டு மகிழ்ந்து, வாழ்த்துக் கூறி விடை பெற்று சென்றனர். சின்னாவும் ஆயிரக்கணக்கான சிந்தனைகளுடன் தான் ஏணிப்படியாய் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இருக்க ஆவலுடன் பிரதேசத்தை நோக்கி நடந்தான்.......


வாழையூர் அபி

மட்/பேத்தாழை விபுலானந்தா தேசிய பாடசாலை.

மட்டக்களப்பு வாழைச்சேனை.

தரம் - 13

கலைப்பிரிவு.





ஏனைய அனைத்து  சிறுகதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin