M.R.F.Shafa கவிதை
தனிமையின் துணையுடன் நானெழுதிய
கவிதை துளிகள்....
1. தவித்த என்னிதயத்தை
தடவிக்கொடுத்ததே
" தனிமை "
2. மொழிகளில் இனியது
" மௌனம் "
இனியதுவேயென்
" தாய்மொழி "
3. இலக்கணமின்றி துடித்ததே
" இவளிதயம் "
4. என் கவலைகளில்
கணப்பொழுதினில் கன்னந்தொடும்
கண்ணீருக்கு பெயர்ச்சூட்டினேன்
" கவிமழை "
5. முடியாதவற்றை முடிந்தவரை
முயற்சிப்பேன்
முடிவு முறையாய்
முடியும்வரை...
6. பத்து திங்களாய் பித்து மனத்தாள்
செத்து பிழைத்து பெற்றடுத்தாள்
" என்னை "
7. கடைசிவரை கல்விக்காய் கஷ்டப்பட்ட
காரிகையவள்,
கடைசிநேரம் காணாததால்
கஷ்டப்பட்டேன் நான்
8. என் பயத்தை எண்ணி கடிகாரமும்
வேகமாய் துடிக்கிறது
அதற்கெங்கே தெரியும் என் பயமே
அதன் வேகம் தான்..
ஓ வேடிக்கையாக உள்ளதே.......
9. உன் பிரிவை நினைத்த இதயம்
பிளந்து விட்டது...
பிளந்த இதயத்தை பிணைத்தது
தாயே உன் நினைவுகள்...
10. கண்களை கடக்கும் கண்ணீரை
துடைக்க கைகளை தேடவில்லை,
கண்ணீர் கன்னங்களை கடக்காதிருக்க
செய்யும் உறவுகளையே தேடுகிறேன்..
கிடைத்தால் கொடுங்கள்...
M.R.F.Shafa
C/Al- Nasser College
13
Colombo
ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

