M.S.F.Sameeha கவிதை
சிறுகதை
(விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பு )
அந்த காகித துண்டை பார்த்ததும் ஸாதிக்கிட்கு தலைமேல் இடி விழுந்தது போல இருந்தது. காகிதத்தை எவ்வாறு படித்தாலும் மகள் ஸமீ எழுதியதுதான் அந்த கடிதம் என்று தெரிந்தது. அந்த கடிதத்தில் இருந்தது " அப்பா நான் விரும்பிய வழியில் செல்கிறேன் " என்பதுதான்.
இதட்கான காரணம் யாருக்கும் தெரியாது. ஆனால் ஸமீவின் தந்தை ஸாதிக்கிட்கு மாத்திரம் தெரியும். வெளியில் சொல்லவும் முடியாமல் இருந்தது. பழைய நினைவுகள் ஸாதிக்கின் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தது. அந்நினைவு அவருடைய மனதில் எரிமலைபோல குமுறிக் கொண்டிருந்தது. அருகில் இருந்த நாற்காலியில் பிரம்மை தட்டிப்போய் அமர்ந்த படி பழைய
நினைவுகளை மீட்டுகிறார் ஸாதிக்.
அதிக இலாபம் ஈட்டும் வணிகக்கம்பனியின் உரிமையாளர் ஸாதிக். அவருடைய கடைசி மகள்தான் ஸமீ. அவளின் அப்பா செல்லங் காட்டி வளர்த்ததால் ஸமீ மிகவும் பிடிவாதக்காரியாக வளர்ந்தாள். ஆனால் நற்குணத்தில் சிறந்தவள். அவளின் அப்பாவிடம் மட்டும்தான் பிடிவாதம் காட்டுவாள். படிப்பிலும் கெட்டிக்காரி. மகளுடன் எவ்வளவு அன்பாக இருந்தாலும் ஸாதிக்கிடம் முரட்டுத்தனம் அதிகம்.
ஸமீவின் எதிர்கால இலட்சியம் ஒரு திறமையான வைத்தியராக வருவதாகும். ஆனால் ஸாதிக்கோ ஸமீயை அவருடைய வியாபாரத்துறையில் ஈடுபடுத்த விரும்புகிறார். நாட்கள் நகரவே இரு கனவுகளும் தமது இலட்சியத்தை எட்டும் எல்லையை அடைந்தன.
அன்றிரவு " தந்தை தன்னிடம் ஏதோ கேட்க போகிறார் " என்பதை அறிந்த ஸமீ அட்டை போல ஊர்ந்து கொண்டே சென்றாள்.
ஸாதிக் "மகள் ஸமீ எனக்கும் வயசாயிரிச்சி, நம்ம கம்பனியோ நல்ல லெவல்ல முன்னுக்கு வந்துட்டு, இப்ப உங்கட படிப்பும் முடிஞ்சு தானேம்மா. உங்களுக்கு கொலேஜ் கிடைக்கும் என்கிறது சந்தோஷமான விஷயம்தான் அதெல்லாம் நமக்கு வேணாம். நம்மட ஏழு தலைமுறைக்கும் போதுமான அளவு வசதி நம்மகிட்ட இருக்கு தானே. உங்கட படிப்ப விட்டுட்டு அப்பாட அதிகாரத்த ஏற்று கம்பனிய வழிநடத்துங்க " என்கிறார்.
அப்பாவை இனியும் பேச விடாது நண்டுபோல் நடுவில் புகுந்த ஸமீ " அப்பா எனக்கு இந்த கம்பனிக்கு போறதெல்லாம் பிடிக்காது. நான் ஒரு வைத்தியர் ஆகணும் அதுதான் என் இலட்சியம் " என்று முடித்தாள்.
மகளின் வாதத்தை கேட்டு கொண்டிருந்த முரட்டுக்கோப்முடைய ஸாதிக், அதெல்லாம் முடியாது நான் சொல்வதைத்தான் நீ கேட்க வேண்டும் என மகளை அதட்டினார். பிடிவாதக்காரி ஸமீயோ தான் நினைத்தது தான் நடக்க வேண்டும் என்ற ஆவேசத்தில் இக்கடிதத்தை எழுதி வைத்து விட்டு சென்றிருக்கிறாள்.
நாற்காலியை விட்டு எழுந்த ஸாதிக் தனது மகளின் பிடிவாதத்தின் உச்ச நிலையை உணர்ந்தார். இருப்பினும் விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்தத்தைத்தான் விரும்ப வேண்டும் என மனதை ஆறுதல் பண்ணிக்கொ ண்டிருக்கையில் " திடீரென தொலைபேசி மணி அடிக்கிறது". ( நிச்சயமாக அது ஸமீ ஆகத்தான் இருக்க வேண்டும் ).
M.S.F.Sameeha
Grade ten
Udanidigama madaatugama, near the jumma masjith
ஏனைய அனைத்து சிறுகதைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

