கோபம் என்பது எல்லா நேரங்களிலும் கோபமாகவே இருந்து விடுவதில்லை...
மாறாக;
அதிகாரத்தின் உச்சமாக
இருக்கலாம்...
அக்கறையின் அடைக்கலமாக
இருக்கலாம்...
அன்பின் அதீதமாக
இருக்கலாம்...
அடக்க முடியா வலியின் ஆக்ரோஷமாக இருக்கலாம்...
ஆணவத்தின் ஆட்டமாக
இருக்கலாம்...
துன்பம் மறைக்கும் துணையாக
இருக்கலாம்...
தூங்கிக் கிடக்கும் விரக்தியாக
இருக்கலாம்...
பிடித்ததை வெல்லும் பேராயுதமாக
இருக்கலாம்...
வெறுத்ததை வருத்தும் கூர் முனையாக இருக்கலாம்...
காதல் மனதின் ஊடலாக
இருக்கலாம்...
மோதல் கொள்ளும் முதலீடாக
இருக்கலாம்...
எல்லாவற்றிற்கும் மேலாக;
பிடித்தவரின் சமாதானத்தை
நாடிய போலிப் பாசாங்காக இருக்கலாம்...☺️
*# பாத்திமா ஹகீமா அமீனுதீன் ✍️*