M.N.Nafasa Short story

M.N.Nafasa Short story

 M.N.Nafasa சிறுகதை


 விடியல்


      தேவஹி அடுப்பிலே நீரை கொதிக்க வைத்து விட்டு தன் மகனின் வாழ்க்கையை பற்றி யோசித்து கொண்டிருந்தாள். அதே நேரம் அர்ஜுன் `` அம்மா மத்த பிள்ளைகள் எல்லாம் ஸ்கூல் போகக்கல எனக்கும் ஸ்கூல் போக ஆசையா இருக்குமா´´ எனும் போது தேவஹியின் மனம் தீ யாய் கருகி பற்றியது.

                  அது ஒரு அழகிய கிராமம். அங்கு தேவஹி, சின்ன ராசா தம்பாதியினரின் ஒரே வாரிசாகா வந்து பிறந்தான் அர்ஜுன். இவர்களது வறுமை காரணமாக பெற்றோர் இருவரும் அர்ஜுனை பக்கத்து வீட்டு பார்வதி பாட்டியின் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றனர். இவ்வாறு சில வருடங்கள் உருண்டோடின. ஒரு நாள் இருவரும் வேலை க்கு சென்று வரும் போது பழனி மலையில் வைத்து சின்னராசாவை பாம்பு தீண்டியதாக தகவல் வரவே அனைவரும் மலையை நோக்கி ஓடினர். என்றாலும் பயன் கிட்ட வில்லை. சின்னராசாவையும் காப்பாற்ற முடியவில்லை. அன்றிலிருந்து தேவஹியும், அர்ஜுனும் தனிமையில் வாழ்ந்தனர். தேவஹி மாத்திரம் உழைத்து அர்ஜுனை காப்பாற்றினாள். எனினும் அர்ஜுனை படிக்க வைக்கும் அளவிற்கு அவளிடம் பணம் இருக்கவில்லை. இதனால் அவன் கல்வி கற்றவில்லை. இருப்பினும் அவன் மற்ற மாணவர்கள் கற்கும் போது அவர்களை பார்த்துக் கொண்டிருப்பான்.

                                 இவ்வாறு ஒரு நாள் அவன் மாணவர்கள் கற்பதை பார்த்து கொண்டிருக்கும் போது பாடசாலைக்கு புதிதாக வந்த ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் அவனை பற்றி விசாரித்தார். பின்னர் ஒரு மாணவனுடன் ஆசிரியர் அன்று மாலை அர்ஜுனின் வீட்டை நோக்கி சென்றார். அங்கு அர்ஜுனின் தாய் அவர்களை வரவேற்று வந்த விடயத்தை அறிந்துக்கொண்டாள். பின்னர் ``என்னிடம் அர்ஜுனை கற்பிப்பதற்கான பணம் இல்லையே ´´என்றாள். அதற்கு அந்த ஆசான் ``நீங்கள் கவலை படதேவையில்லை அர்ஜுனை நாளை எனது வீட்டிற்கு அனுப்புங்கள் ´´என்று கூறி விட்டு சென்றார். 


    அன்று மாலை அர்ஜுன் அந்த ஆசிரியரின் வீட்டை நோக்கி சென்றான். அவரது வீட்டு வாசலில் எழுதியிருந்த ``விரிந்தது 

உலகம், பரந்தது செல்வம்,செல்வத்தில் எல்லாம் மிகச்சிறந்த செல்வம் கல்விச்செல்வம் ´´என்ற வாசகம் அவனை பெரிதும் கவர்ந்தது. வீட்டினுள் சென்றதும் அவன் ஆசிரியரை அழைத்தான். ஆசிரியரும் வா அர்ஜுன் என்று அர்ஜுனை அன்புடன் அழைத்தார். பின்னர் அர்ஜுன் பாடசாலை செல்ல தேவையான பொருட்கள், சீருடை, புத்தகங்கள் என்பவற்றை கொடுத்து ``இனி நீ மற்ற மாணவர் கள் போல் பாடசாலைக்கு வரலாம்´ என்றதுமே அவன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான்.

              அடுத்த நாள் அவன் பாடசாலை செல்ல ஆயத்தமாகி தாயிடம் சென்றான். தாயும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள். அன்றிலிருந்து அவன் தினமும் பாடசாலை சென்று வந்தான். காலம் உருண்டோட புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரணதர பரீட்சை, உயர்தர பரீட்சை போன்றவற்றில் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமையை சேர்த்தான். பின்னர் பல்கலைக்கழகம் சென்று நான்கு வருடத்தின் பின் ஆசிரியராக பதவி பெற்று தனது சொந்த ஊர் பாடசாலைக்கே நியமனம் பெற்று வந்தான். புதிய ஆசானை வரவேற்க ஊர் மக்கள் அனைவரும் காத்துநின்றனர். அப்போது அர்ஜுன் கார் ஒன்றிலே பாடசாலை முன் வந்து இறங்கி பாடசாலைக்குள் நுழையும் போது நுழைவாசல் அருகில் தன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்திய ஆசனை கண்டதும் முதலில் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான். பின்னர் அவன் தன் தாயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க தாய் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள். பின்னர் அவன் தான் கற்ற பாடசாலையிலே

பதவியேற்று தன் கடமையை செய்தான். அவனும் தன் ஆசனை போல் ஏழை குழந்தைகளை கல்வி கற்க வைத்து சமூகத்தில் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து தன் ஊரிற்கு பெருமை சேர்த்தான்.


Name - M. N. Nafasa

Grade - 2023 A/L

School - A/ Kekirawa muslim maha vidyalaya

Village - Kekirawa

District - Anuradhapura





ஏனைய அனைத்து  சிறுகதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin