🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝
-----------------------------------
🔹𝗡𝗼: 05
🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: Sheyara
🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Ragala
#Edukinniya #StoryCompetition
➖➖➖➖➖➖➖
வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு
சில வினாடிகள் சிந்தித்தார்.
இவ் பொதியை *எடுப்போமா வேண்டாமா...?* என்று. ஒரு பத்து நிமிடம் சிந்தனையின் பின் அதன் அருகில் சென்று கையில் எடுத்து கொண்டு ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்தார். கணேஷன் தனது மடியில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அவ் பொதியின் மேற்பரப்பை கிழித்து பார்த்த போது அவர் முகத்தில் ஏதோ ஒரு அதிர்ச்சி, பதற்றம் நிலவியது .. கட்டுக்கடங்காத பணம் மற்றும் புதிய தங்க நகைகள் செய்வதறியாது தவித்த கனேஷன் அவ் பொதியை தனது வீட்டிற்கு கொண்டு சென்று மனைவியிடம் நடந்ததை கூறினார். கனேஷனின் குடும்பம் வறுமை நிலையில் வாடும் குடும்பமாக காணப்படுகிறது . இதை கேட்ட மனைவி கூறினால் நமது குடும்பம் பெரும் கஷ்டத்தில் உள்ளது அது மட்டுமின்றி நம் பிள்ளைகளின் கல்விக்கும் எதிர்கால தேவைக்கும் அதிக பணம் தேவைப்படும் . ஆதலால் இவ் பொதியை நாமே வைத்து கொள்வோம் என்று கூறினால்.. ஆனால் கனேஷனுக்கு மனதில் ஏதோ உருத்தி கொண்டே இருந்தது நகைகளையும் பணத்தையும் எடுத்து வைத்து கொள்ள அவருக்கு விருப்பம் இல்லை . மனைவியோ இங்கு அதை என்ன செய்யலாம் என்று பேராசை கொண்டு யோசித்து கொண்டு இருக்கின்றாள். இரவு தூங்கும் போது நான் எவ்வாறு. வெளியில் வேலைக்கு சென்று துப்பரவு பணிகளை மேற்கொண்டு வாழ்கையை நடாத்துகிரேனோ அவ்வாறு தானே நாம் வாழும் சமூகத்தின் மனிதர்கள் வாழ்கிறார்கள் இவ் பொதி என்னை மாறி கஷ்டத்தில் வாழும் ஒரு ஏழையின் சொத்தாக இருந்தால் என்னவாகும் அவர் படும் கஷ்டம் எனக்கு மேலும் துன்பத்தை தரும் என்று எண்ணினார் .. காலையில் விடிவதற்கு முன்பே கொழும்பு நகர் போலீஸ் நிலையம் நோக்கி நடந்தார். அங்கு சென்று போலீஸ் அதிகாரியிடம் நடந்த அனைத்தையும் கூறினார் . போலீஸ் அதிகாரி கனேஷானின் விபரங்கள் அனைத்தையும் வாங்கி கொண்டு அனுப்பி விட்டனர் . வீட்டிக்கு வந்த கணேஷனிடம் அவரின் மனைவி போலீஸ் அதிகாரியிடம் பொதியை கொடுத்ததை அறிந்து கடும் கோபத்துடன் சண்டை இட்டால் கணேசன் எதுவும் பேசாமல் வேலை செய்வதற்கு புறப்பட்டான். ஓரிரு நாட்களில் ஒரு வயதான பெண் ஒருவர் கணேசனின் வீட்டிற்கு வந்து , ஐயா! ஐயா! என்று கூபிட்ட உடன் கணேசனின் பிள்ளைகளில் ஒருவரான கலா கதவை திறந்து பார்த்தால் அப்பொழுது கணேசன் போலீஸ் அதிகாரியிடம் கொடுத்த விபரங்களை கூறி கலாவிடம் கேட்ட போது அவளும் என்னுடைய தந்தை தான் வாருங்கள் உள்ளே என்று கூறி உள்ளே அழைத்து சென்றாள். கலா அறையில் இருந்த தந்தையிடம் கூறி அழைத்து வந்தால் அப்பொழுது அவ் வயதான பெண் அழுது கொண்டு கணேசனிடம் தன் தோட்ட தொழிலில் படும் கஷ்டத்தை கூறி பணத்தை எடுத்து கொடுத்ததற்கு நன்றி கூறினார் கணேசனின் மனைவி கூனி குறிகி நின்றாள் ஏதோ ஒரு மகிழ்ச்சியில் கணேசன் காணப்பட்டான்