🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝
-----------------------------------
🔹𝗡𝗼: 11
🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: Farha Askar
🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Malwana
#Edukinniya #StoryCompetition
➖➖➖➖➖➖➖
வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு
உடனே நின்றார். பொதியில் இருந்து சிறு சத்தம் வந்தது போல் தோன்றியது. சிறிது தயக்கத்துடன் அவர் அதை நிமிர்ந்து பார்த்தார். துணியில் கட்டப்பட்ட அந்தப் பொதியில், அசைகின்ற எதையோ உணர்ந்தார். கொஞ்சம் பயத்துடன் அந்தக் கட்டை தழுவி திறந்தார்.
அதிர்ச்சியோடு அவர் முகம் மாறியது — அப்பொதியில் ஒரு சில மாதங்களான குழந்தை அழுதுகொண்டிருந்தது. தூங்கியிருந்த நகரம் மெல்ல விழித்துக் கொண்டிருந்தது. கணேஷன் உடனே அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அருகிலிருந்த காவல் நிலையம் நோக்கிப் புறப்பட்டார்.
காவல்துறையினர் அதிர்ச்சி மற்றும் பச்சைக்கருணையுடன் குழந்தையைப் பார்த்தனர். விசாரணைகளுக்குப் பிறகு, குழந்தையை பாதுகாப்பாக குழந்தைகள் நலவாரியத்திடம் ஒப்படைத்தனர். ஆனால் கணேஷனின் மனம் அமைதிக்குப் பெரிதும் இடமளிக்கவில்லை.
அவனது பார்வையில் அந்தக் குழந்தையின் எதிர்காலம் சிதைந்து விடக்கூடாது என்பதே முதன்மையான நோக்கமாக மாறியது. தன்னைப் போலவே அந்தக் குழந்தையும் வீதியோரத்தில் துவங்க வேண்டாம் எனத் தீர்மானித்தார். தினமும் தன் ஊதியத்தில் இருந்து ஒரு பகுதியைச் சேமித்து, அந்தக் குழந்தையின் கல்வி செலவுக்கு வைக்கத் தொடங்கினார்.
அந்த ஒரு வியாழக்கிழமை கணேஷனின் வாழ்க்கையிலும், அந்தக் குழந்தையின் எதிர்காலத்திலும் மிக முக்கியமான நாளாக மாறியது. ஒரு சாமான்ய மனிதனின் சிறிய தயக்கம் இல்லாத செயல், ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கியது.