Nuzaifah Nazeer Poem

Nuzaifah Nazeer Poem

 Nuzaifah Nazeer கவிதை


மங்கையே.....!


 மீட்ட மறந்த வீணை பாட மறந்த ராகம்....!

பேச மறந்த இதழ்கள் பார்க்க மறந்த விழிகள்....!

பஞ்சு பொதி மேகங்களோ பண் பாடவில்லை....!

கொஞ்சிப் பேசும் பறவைகளோ குரல் எழுப்பி இசை பரப்பவில்லை....!


 மங்கையே! நீரோட்டம் கூட நின்று விட்டது போராட்டம் மண்ணில் வென்று விட்டது....!

தாலாட்டும் ஆகாயம் கூட தரைமீது தடுக்கி விழுந்து விட்டது....!

இருளான பாதை தான் தெரிகிறது....!

பொருள் புரியாத வாழ்க்கை இது எல்லாமே எனக்கு புரிகிறது....!


 மங்கையே! உன்னை புகழ்ந்து போற்றுவதை நீ விரும்புவதில்லை.....!

  நிலா,விண்மீன்,பூ, என்று வினாவுவதிலும் உனக்கு விருப்பமில்லை....!

நதியாய்,கடலாய்,வானமாய் வர்ணிப்பதிலும் உனக்கு வசந்தமில்லை....!

கற்பனையாய் பொழிவதிலும் உனக்கு கவனமில்லை....!


மங்கையே! உன் பாரம் குறைய நினைக்கிறாய்....!

உனக்கான பாதையில் நடக்கத் துடிக்கிறாய்....!

உந்தன் இயல்பிலேயே இயங்க எண்ணுகிறாய்....!

உன் வாழ்க்கையை நீயே தெரிவு செய்ய முயற்சிக்கிறாய்....!


மங்கையே! நீ யார் பிடியிலும் இருப்பதில்லை....!

நீ ஊர் மடியிலும் உறக்கம் பிடிப்பதில்லை....!

உன் மடியில் உறங்குபவரை 

எழுப்ப நினைப்பதில்லை.....!

உன் கொடியில் பூப்பதை கொடுக்காமல் விடுவதில்லை....!


மங்கையே! நீ ஒன்றும் ஆணுக்கு எதிரியுமில்லை....!

நீ ஆணுக்கு குறைவாய் எதிலுமில்லை....!

நீ ஆணுக்கு சரி நிகராகவுமில்லை....!

நீ ஆணை விட பாரம் சுமக்காமலுமில்லை....!


மங்கையே! நீ ஓர் ஆழியாய் சிறகு....!

யார் உன்னை தொட்டாலும் அழிந்து போகும் பிறகு....!

அது ஒழிந்து போகும் பிறகு....!

பரணியில் வென்றிடுவாய் பிறகு....!


 

    நுஷைபா நஷீர்

கமு/கமு/அல்- மஷ்ஹர் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலை நிந்தவூர்.

தரம் - 13 

நிந்தவூர்

அம்பாறை





ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin