Amana Akbar Short Story

Amana Akbar Short Story

 Amana Akbar சிறுகதை


அவள் கதை....

 *(இன்ப சிட்டாய்...)* 


துள்ளிக்குதிக்கும் சிறுப்பாவை அவள். ஒன்பது வயது சிறுமி. ஓடி ஆடி விளையாடுவாள். தன் சகோதரிகளை ஒரு விதம் செய்து எடுப்பாள் . ஒருமுறை திடீரென அவளது சகோதரிகளில் ஒருவருக்கு தலைவலி ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவே மூளையில் கட்டி இருப்பதாக கூறி சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. குணமாகி வீட்டுக்கு அனுப்பப்பட்ட உடனே மீண்டும் என்ன? விளையாட்டு தான். அங்கே ஓடி இங்கே ஓடி வீட்டையெல்லாம் கலைத்து விட்டு ஆட்டம். சில நாட்கள் இப்படியே கழிய ஒரு முறை தலைவலி மீண்டும் பிறக்கவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவள் தன் இள வயதிலேயே இவ்வுலகில் இருந்து விடைபெற்றாள். அவளைத் தாங்காத அவளது தாய் மயங்கினாலும் அக்கா அழுதே புரண்டாலும் ஒன்பது வயதான பாவை அவளுக்கு அழுகை; கவலை என்றால் என்ன? என தெரியாத வயது. இன்று நவீன உலகினிலே ஒன்பது வயது பிள்ளைகள் காதல் என அலைந்தாலும் அன்று அவளது வயதின் அடிப்படையில் விளையாட்டு ஆட்டத்தை தவிர வேறு ஒன்றும் தெரியாது. அன்று மரண வீட்டில் கூட ஓடியாடி விளையாடி கொண்டு தான் இருந்தாள். அவளது பாடசாலை நண்பிகள் கூட மரண வீட்டிற்கு வருகை தந்திருந்தாலும் மாமியார் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டுதான் இருந்தாள் .காலம் இப்படியே விடை பெற வீட்டில் ஒரே அமைதி அவளுக்கு விளையாட சகோதிரி வீட்டில் இல்லை .இறைவன் பால் சென்று விட்டாளே! இருந்தாலும் தன் இரு தம்பிகள் உடன் பொழுதை கழித்தாள் அவள். காலம் தன் புத்தகத்தில் பக்கம் புரட்டிக் கொண்டே தான் இருந்தது. பாவைக்கு இப்போது காலம் கடந்ததால் 10 வயது பிறந்து விட்டது. ஆனால் பிறந்த நாளை கொண்டாட அவள் சகோதரி மட்டும் அவள் அருகில் இல்லை .ஒன்றாய் பாடசாலை செல்லும் அவள் சகோதரியின் பிரிவுக்கு அப்பால் தன் பெரிய சகோதரியுடன் தான் செல்வாள். அதன் பின்னர் தன் பெரிய சகோதரி கற்றல் நோக்கில் விடுதிக்கு சென்று விட்டாள். இரு சகோதரிகளும் அன்று அவள் அருகில் இல்லை .இரு சகோதரிகள் பிரிந்தாலும் தன் இரு சகோதரர்கள் உடனும் விளையாடுவதை விட்டு விட வில்லை அவள் .காலம் புரண்டோடினாலும் பிரிவெனும் அலைகள் அவளது காலை நனைத்தாலும் கரையில் மண்ணாய் இருக்கும் அவளுக்கு விளையாட்டெனும் கால் தடங்களை மறுக்க முடியவில்லை.



(என் வாழ்க்கை எனும் புத்தகத்தில் புரட்டப்படாத பக்கங்களில் இருந்து உங்களுக்காக ஒரு பக்கம்......🤍)


Name = Amana Akbar

School=Madheena National school.

Grade=10B

From=kuliyapitiya 

District =Kurunegala.




ஏனைய அனைத்து  சிறுகதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin