N.Raisana கவிதை
கல்வி.....
கல்வி என்பது ஒரு ஏணி
அதில் ஏறுபவன்தான் ஞானி
கல்வி என்பது
ஒரு தேன் கூடு
அதைக் கட்டி
அமைப்பது பெரும்பாடு
கல்வி என்பது
விலைக்கு வாங்கக் கூடிய
பொருள் அல்ல
விற்பனை செய்யக் கூடிய
சரக்கும் அல்ல
காற்று புயலாக மாறினாலும் சரி
கடல் கொதித்தாலும் சரி
ஆகாயம் பிளந்தாலும் சரி
பூமி வெடித்தாலும் சரி
எம்முள்ளத்தில் இருக்கும் கல்வி
எம்மை விட்டுப் பிரியாது
ஆகாயம் இடமாறி சென்றது
ஆனால், எம்முள்ளமும் கல்வியும்
இடமாறி செல்லாது
கல்வியை நினைக்கும் காலமெல்லாம்
எம் நெஞ்சில் ஒரு இனிமை தோன்றுகிறது
நாம் எப்பொழுது கல்வியை
மறக்க நினைத்தோமோ
அப்பொழுது நம் வாழ்க்கையை
அழித்து விடுகிறோம்
அன்றும், இன்றும், என்றும்
எம் உள்ளத்தில்
கல்வியைத் தவிர
வேறெதுவும் இல்லை
இல்லம் கொடுத்த வரம்
அழகு வெள்ளி
இறைவன் கொடுத்த வரம்
நமக்கான ஒழுக்கக் கல்வி
கல்விக்கு முன்னால்
முட்களும், கற்களும் உண்டு
அதைக் கடந்து சென்றால்
ஒரு பெரிய சாதனையே உண்டு
காலையில் சேவல் கூவ மறந்தாலும்
மாலையில் காகம் கரைய மறந்தாலும்
எம் வாழ்க்கையில் கல்வியை
மறக்கவே மாட்டோம்
முடி வளர்ந்தால் வெட்டிக் கொள்ளலாம்
நகம் வளர்ந்தாலும் வெட்டிக் கொள்ளலாம்
ஆனால் கல்வி வளர்ந்தால் எவராலும்
வெட்டவே முடியாது
கல்வியடா கல்வி அதனைக் கற்காதவனுக்கு
அதுவே பெரும் தோல்வி
பொருள் வாங்கப் பணம் தேவை
பயிர் வளரப் பசளை தேவை
கல்வி வளர முயற்சி தேவை
மறக்க நினைத்தாலும் நினைக்க
மறக்காதே, மானிடா உன் வாழ்க்கைக்
கல்வியை
முள்ளுக்குப் பயந்தால்
ரோஜாவை பறிக்க முடியாது
இருட்டுக்குப் பயந்தால்
நிலாவை ரசிக்க முடியாது
முயற்சி செய்யாவிட்டால்
கல்வியை சுவைக்க முடியாது
கல்வியை நீ கணக்கெடு
அப்பொழுது தான் கல்வி
உன்னைக் கணக்கெடுக்கும்
பெற்ற பிள்ளைக் கைவிட்டாலும்
கற்ற கல்வி கைவிடாது
N.Raisana
MN/Kondachchi M.M.V
Gr-13
Age-18
Iam from-Kondachchi
District-Mannar
ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

