Faheema Rismi Essay

Faheema Rismi Essay

 Faheema Rismi கட்டுரை


*.........விஞ்ஞானத்தின் விந்தை.........*


     உலகத்தை ஆழ்வது விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்றால் இது மிகையாது. விஞ்ஞான விந்தையால் உலகமே சுருங்கி கைக்குள் அடங்கி விட்டது. நாளுக்கு நாள் விஞ்ஞானத்தின் விந்தை வளர்ச்சி கண்டு வருகிறது.விஞ்ஞானத்தின் விந்தையால் மனித வாழ்வியலானது எண்ணற்ற மாற்றங்களும், முன்னேற்றங்களும் அடைந்துள்ளன.

              சாத்தியமற்றது எனக்கருதப்பட்டது என இன்று சாத்தியமாகி வருகின்றன. விஞ்ஞான வளர்ச்சியானது மனிதனை உச்சியில் உள்ள உயிரினக்கூட்டமாக வகைப்படுத்தி உள்ளது.இக்கட்டுரையில் விஞ்ஞானத்தின் விந்தை பற்றி படிப்போம்.  

        பல நூற்றாண்டுகளாக முன்னேர விஞ்ஞானம் வளர ஆரம்பித்து விட்டது. கைவினள வரலாறே விஞ்ஞானத்தின் வரலாறாக வளர ஆரம்பித்தது எனலாம். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தீக்கற்களால் ஆக்கப்பட்ட கருவியே முதன் முதலில் உருவாக்கப்பட்ட கருவியாகும்.கற்களாலும்,எலும்புகளாலும் கருவிகள் வடிவமைக்கப்பட்டன.

       குறிப்பாக ஆயுதங்கள் எலும்புகளாலும்,கொம்புகளாலும் வடிவமைக்கப்பட்டன. விஞ்ஞான வளர்ச்சியானது கிரேக்கர் கால விஞ்ஞானம், சீனர் கால விஞ்ஞானம், மறுமலர்ச்சி கால விஞ்ஞானம்,அரபியர் கால விஞ்ஞானம், மத்திய கால விஞ்ஞானம் எனப் பல வரலாற்று வளர்ச்சி கால கட்டங்களை கண்டு இன்று வரை பிரமிக்கத்தக்க வளர்ச்சியை காட்டி வருகின்றது.

              மருத்துவ கண்டுபிடிப்புக்கள் ஆயுட்காலத்தை அதிகரிக்க செய்து வருகின்றன.கல்வித் துறையில் விஞ்ஞானத்தின் பங்கு அளப்பரியதாகும்.நவீன கற்பித்தல் யாவும் விஞ்ஞானத்தின் விந்தை யாகும்.


Name.faheema Rismi

School.kekunagolla n.s

Grade 9

Age14

From.bandara koswatta 

Kurunagal




ஏனைய அனைத்து கட்டுரைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin