Jesmil Mufthika Banu கவிதை
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
பாசத்தின் உறைவிடம்
√√√√√√√√√√√√√√√√√√√√√√√
இவ்வையகத்தில் இதயத் துடிப்பே
அனபின் ஈரக்காற்றே - நாம்
அகிலம் போற்றி இவ்வுலகில்
வாழ செய்த தாயே
உனக்கேது ஈடு இவ்வுலகில்.....!
க௱ள்ளமில்லா உலகிலே
நாம் வீர நடை போட்டிட
மெழுகுவர்த்தியாய் - தன்னை
உருக்கிட்ட தாயே
உம்மை என்றும் நாம் மறவோம்
அன்பின் வடிவமாய்
அறிவினை ஊட்டி
பண்பாக வளர்த்து
பாசமதை தந்த எம்
அன்பு தெய்வமே நீ்.....!
தவறுகள் செய்தாலும்
தயவுடன் வினவி
தன்மையாய் கண்டித்து
தக்க புத்தி கூறிடும் உன்னை போல
அன்பு தரணியிலே கிடைத்திடுமா
எத்தனை கோடி சம்பாதித்தாலும்
எத்தனை பட்டங்கள் பெற்றாலும்
எத்தனை உள்ளங்களை
வென்றெடுத்தாலும்
உம் நெஞ்சில்
தலை சாயும்
அந்த சுகம் கிடைத்திடுமா...?
✍️ write by :
JESMIL MUFTHIKA BANU
A/L SECOND YEAR
MADHRASA STUDENT
129/1 PERARU KANTHALE
🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️
ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇