S.M.F.Rifatha கவிதை
காப்பவனே உனக்காய் இது
_____________________தந்தை எனும் விந்தையே
"தான்" எனும் சொல் மறந்து தமக்காய் வாழ்பவனே
படித்தால்தான் பட்டம் என்ற உலகில் பாமரனாய் இருந்து பருவங்கள் பாராது பசி தீர்த்த பணக்காரனே
கருக்கிடும் வெய்யிலினில் கசிந்து உழைத்து கனிந்து எம்மை பார்ப்பவனே
கல்லான உள்ளத்தை கனியாக்கினாய் கனியான உடலை கல்லாக்கிக் கொண்டாய்
தகுமா எனக்கேட்டேன் உன் தகுதிக்காய் நான் படுவேன் என்றாய்
தாங்கிக் கொள்ளும் சக்தி
ஆணவனே தந்தை என்பதால்தான் வந்து தங்கியதோ
நீ படும் பாடுகளை பழுதாக்கி உன்னை பாலகனாய் தாங்குவேன் வெகு நாளில்
கண்ணிவளின் கையெழுத்து காப்பவனே உனக்காய் இது.
Name - SMF. RIFATHA
AGE - 20
PLACE- BATTICALO, ERAVUR
ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇