கட்டுரைகள்-02
ஏனைய அனைத்து கட்டுரைகளையும் பார்வையிட👇👇
கட்டுரை-01
நான் விஞ்ஞானியானால்
நாம் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அறிவிலால் ஆயிரமாயிரம் விளைவுகளும் வியப்புக்களும் நாளாந்தம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அறிவியல் அறிவு மனிதனை மண்ணிலிருந்து விண்ணுக்கும் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் என்னுள்ளத்தில் விஞ்ஞானியாக நான் மாறவேண்டும் என்னும் ஆவல் அலைமோதிக் கொண்டிருக்கிறது. என்றோ ஒருநாள் விஞ்ஞானியாக மாறியே தீருவேன். நான் விஞ்ஞானியானதும் பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்த உள்ளேன்.
பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ளுதல், வளமான வாழ்வு காணுதல் மட்டும்தான் மனித வாழ்க்கை என்று எண்ணுவது தவறு. அதற்கு எத்தனையோ வழிகள் இவ்வுலகில் உண்டு மனித வாழ்க்கை என்றால் அவ்வாழ்க்கை சீரிய இலட்சியம் இருக்க வேண்டும். அதுவும் இந்த நாட்டுக்குப் பயன் தருவதாக அமைதல் வேண்டும்.
நான் விஞ்ஞானியானால், உறுதியாக ஒரு இலட்சியத்தோடுதான் ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவேன். குறிப்பாக விண்வெளி ஆய்வுத்துறையில் ஈடுபடுவேன். வியத்தகு சாதனைகள் படைத்திட முற்படுவேன்.
இன்று உலகில் உள்ள வல்லரசுகள் எல்லாம் விஞ்ஞானத்துறையில் வியத்தகு சாதனைகள் படைத்திட முற்படுவேன்.
இன்று உலகில் உள்ள வல்லரசுகள் எல்லாம் விஞ்ஞானத்துறையில் வியத்தகு சாதனைகள் நிகழ்த்தியுள்ளன; நிகழ்த்துகின்றன. அந்த வகையில் நம் நாடும் உயர்வு காணவேண்டும். அதற்காக அயராது உழைத்திடுவேன்.
புதிய சாதனைகளை நிகழ்த்திட வேண்டும்; புவியோர் அது கண்டு அதிசயித்திட வேண்டும் என்பதே என் ஆவலாகும். இந்த இலட்சிய வெறியுடன் உழைக்கும் போது என் நினைவுகள்,கனவுகள்,ஆசைகள், அத்தனையும் அதுவாகவே இருக்கும்.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை வைத்துக்கொண்டு இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வல்லரசுகளுக்கு ஈடாக நமது நாடும் விஞ்ஞானத்துறையில் சாதனைகள் பல நிகழ்த்திட வேண்டும் என விரும்புகிறேன்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு, உயர்வுக்கு உழைப்பது நாட்டு மக்கள் அனைவரதும் கடனாகும். அந்த வகையில் என்னாலான பங்களிப்பினைச் செய்ய என்றும் நான் ஆயத்தமாக உள்ளேன். விண்வெளி ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டுப் புதிய சாதனைகள் படைப்பேன். அதுவே என் இலட்சியமாகக் கொண்டுழைப்பேன் என உங்களனைவருக்கும் உணர்த்திட விரும்புகிறேன்.
K. Tiroshini
Mo/Vipulananda Tamil Maha Vidyalaya national school.
Grade :08A
Age :13
Kumarathunga Mawatta
Monaragala.
கட்டுரை-02
கொரோனா தெற்றும் அதன் விளைவுகளும்
*இன்றைய உலகை ஆட்டிப் படைத்து மனித வாழ்க்கையை கேள்விக் குறியாக்கியுள்ள ஒரு பயங்கர நோயாக விளங்குவதே கொரோனா ( covid _ 19) எனும் தொற்றுநோயாகும். இது சம காலத்தில் எவ்வாறு பரவிக் கொண்டிருக்கிறது என்பதையும் அதனால் ஏற்பட்டுள்ள தாக்கங்களையும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதையும் கீழ் வரும் முறையில் நோக்கலாம் .
இத் தொற்று நோயானது ஆரம்பத்தில் சீன நாட்டின் வூஹான் மாநிலத்தில் தோற்றம் பெற்று படிப்படியாக உலகலாவீய நாடுகளுக்கும் பரவலாயிற்று .இந் நோயின் அறிகுறியாக கடுமையான காய்சல், தடுமன், இருமல் மற்றும் அழற்சி போன்றவை ஏற்படுவதுடன் இது தொற்று உள்ளவர்களுடன் மற்றொருவர் கொள்கின்ற உறவின் மூலம் இந் நோய் தோன்றியுள்ள பிரதேசங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கையாள்வதன் மூலமும் இந் நோய் தொற்றிவுள்ள நாடுகள் மூலம் வரும் உல்லாச பிராணி மூலம் இது பரவுவதாக கையாளப்பட்டுள்ளது.
இந் நோயானது உலகலாவீய ரீதியிளே பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது . அந்த வகையில் இதனுடைய ஆபத்தான விளைவு உயிர்க்கொல்லியாக இது விளங்குவதாகும். உலகளாவிய நாடுகளில் பல இலட்சத்துக் கணக்கான உயிர்களை இது குடித்துள்ளமை உலகரிந்த செய்தியாகும்.
மேலும் இந் நோய் தாக்கங்களின் ஒன்றே பொருளாதார முடக்கம் ஆகும். தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டும் எற்று இறக்குமதி தடைப்பட்டு சுற்றுலாத் துறையின் வீழ்ச்சியிம் உற்பத்தி பெருக்கம் இன்மயால் ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி அடைந்ததுள்ளது. இந் நோய் தாக்கங்களின் மற்றொரு விளைவுபோக்குவரத்து துறையின் பாதிப்பு ஆகும். நாடுகளூக்கு உள்ளேயும் வெளியேயூம் தரைவழிப் போக்குவருத்தோ வான்வழி போக்குவரத்து, கடல் வழி போக்குவரத்து யாவும் தடைப்பட்டு உள்ளதனால் அத்தியவசிய சேவைகள் முதல் கொண்டு அனைத்து சேவைகளும் தடைப்பட்டுள்ளன. இதனால் கைத்தொழில் மற்றும் இதர சேவைகள் யாவும் பாதிப்பு அடைந்துள்ளன. இந் நோய் தாக்கங்களின் மற்றொரு விளைவு இந் நோய் பரவுகின்ற பிரதேசங்களை முடக்குவதல் ஆகும். இதனால் சாதாரண கூலித் தொழிழாளி முதல் பெரு வர்த்தகர்கள் வரை அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். முடிக்கப்படும் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு நாளாந்த உணவு மருந்து தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமையுனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதுடன் அரசுக்கு எதிராக விமர்சனங்களும் போராட்டங்களும் எழுந்த வண்ணமே உள்ளன. இந் நோய் தாக்கத்தில் இருந்து மனித இனத்தை பாதுகாப்பதற்காக பின்வரும் வழிமுறைகளை கையாறவது அவசியம் ஆகும். அந்த வகையில் சுகாதார துறையினர் பிரிந்துறைத்த வழிமுறைகளை பேணுவது அவசியம் ஆகும். முகக் கவசம் அணுதல், சமுக இடைவெளியைப் பேணல். வேளா வேளைக்கு கை கழுவுதல், வீடுகளில் காரியாலங்களிலும் கிருமி கொல்லி நாசினியை தெளித்தல் போண்ற செயாற்பாடுகளை நாளாந்தம் கை கெள்வதன் மூலம் இந் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். மேலும் இந் நோய்ப் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதும் இந் நோய் தாக்கங்களில் இருந்து எம்மை காப்பதற்கு வழி முறை ஆகும். இந் நோய் கொடூரம் பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் பொது மக்களுக்கு துண்டுபிரசுரங்கள் மூலமாகவும் சுவரொட்டி மூலமும் பதாதைகள் மூலமும் கானொளி மூலமும் விழிப்புணர்வு ஊட்டுதல் வேண்டும். இந் நோய் கட்டுப்படுவத்கு அரசு மக்களுக்கு கடுமையான சட்டங்களை அமுல் படுத்த வேண்டும் முகக் கலசங்களை அணியாதோர்காகு எதிராகவும் சமுக இடைவெளியை பேணாதோருக்கு எதிராகவும் முடக்கப்படும் பிரதேசங்களில் தரித்து இருப்போருக்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டு வருவதன் முலம் இந் நோய்யை கட்டுப்படுத்தலாம். எனவே தொகுத்து நோக்குகின்ற பொது கொரோனா( Covid - 19) இத் தொற்று நோயானது உலகளாவிய ரிதியில் பரவி மனித வாழ்விற்கு பெரும் சவாலாக அமைந்து உள்ளதால் இதனை கட்டுப்படுத்தி எதிர் கால சந்ததியினர் நலமுறன் வாழ வகை செய்வதே எமது கடமையாகும்.
Jamal Deen Fathima Shifna
Kekunagolla National School
17
Angamugama , Maho
Kurunagala
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇