M.Ganatheeban கவிதை
கவிதை-01
நல்ல தமிழ் கேட்டாலே
ரத்தமெல்லாம் சுத்தமாகும்
நட்போடு பேசும் போது
நாளெல்லாம் இன்பமாகும்
இருப்பதை மறந்து விட்டு
இல்லாததை தேடித்தேடி
எங்கெங்கோ ஓடரவங்க ஓடுங்கோ...!
அன்போடு நேசிச்சு
அக்கம் பக்கம் பழகும் போது
அடுக்கடுக்கா உன் வீட்டில்
ஆனந்தம் பெருகும் பாரு
ஆசை குறையும் போது
அமைதி பெருகிவரும்
இதை அறியாமல் அல்லல் பட
ஓடரவங்க ஓடுங்கோ....!
ஓடி ஓடி கண்டெதென்ன
ஒண்ணுமே இல்லைனு
ஓடித்தா உணரனுமா
ஓடுவதை நிறுத்தினாலே
அமைதி ஓடோடி வருமுன்னு
உண்மை தெரியாதவங்க
ஓடுங்கோ ஓடுங்கோ...!
கவிதை-02
ஒவ்வொரு
முகம் தெரியாத
புதிய அறிமுகங்களும்
அலாதியானவை..
நீயார்
நான் யார்
நீ என்ன செய்கிறாய்
நான் என்ன செய்கிறேன்..
உன் வயதென்ன
என் வயதென்ன..
நீ நலமா
நான் நலம்..
ஒவ்வொரு நாளும்
ஏதாவது புதுச்
செய்திகளுடனும்
தொடரும்
ஒரு நட்பில்
ஒரு காதலில்
ஒரு நேசத்தில்..
ஒரு கட்டத்தில்
பகிர்ந்துகொள்வதற்கும்
தெரிந்து கொள்வதற்கும்
ஒன்றுமேயில்லை..
இதற்கப்பாலும்
ஒரு பிரியத்தை
வளர்ப்பதாயின்..
இன்னுமொரு
பரிணாமம் தேவை..
குரல்களாகவும்
முகம்களாகவும்..
அதன்பின்
ஒரு அன்பின் நீட்சிக்கு
முடிவேயில்லையா?
பிடித்த
திரைப்படமென்றாலும்
ஒரே நாளில்
எத்தனை முறை
பார்ப்பாய்..
பிடித்தமானதொரு
பாடலை ஒரே நாளில்
எத்தனை முறை
கேட்பாய்..
முடியாதில்லையா?
எனக்கும்தான்
புரிபடவேயில்லை..
மயிலிறகு மனசு!
💐💐💐
M.Ganatheeban
Highlands college
Grade 13
Hatton
ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇