C.Rusanth கவிதை
என்னவள்
அழகான தேவதை அவள் ஆனால் கோபக்காரி
அணையா விளக்குப் போல் அவள் பிரகாசமாக எரிவாள்
ஆனந்தமாக அண்ணம் போல் வாழ்க்கை என்னும் தண்ணீரில் நீச்சலடிப்பவள் அவள்
ஆசையாக பேசுவதில் கோவலனை அடிமையாகி மாதவி போல அவள்....
இலவசமாக எதை கொடுத்தாலும் வாங்க மாட்டாள் அவள்
ஈகை செய்வதில் கர்ணனுக்கு ஒருபடி மேலே அவள்
ஈதல் இசைபட வாழ்தல் போன்ற நெறியாளி அவள்....
உண்மையை மட்டுமே பேசுவதில் அரிச்சந்திரனுக்கு ஒருபடி மேலே அவள்
உழைப்பதில் உண்மையாக வேலை செய்வதில் உழைப்பாளி அவள்
ஊமையாக இருக்க மாட்டாள் அவள்
ஊமத்தபூ போல் விசமாக இருப்பாள் எதிரிகளுக்கு அவள்....
எண்ணம் போல் வாழ்வாள் அவள்
எதிரிகளை கூட மன்னிக்கவும் செய்வாள் துரோகிகளை மன்னிக்க மாட்டாள் அவள்
ஏரிவந்த ஏணியை எட்டி உதைக்க மாட்டாள் அவள்
ஏற்றம் தரும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்பவள் அவள்....
ஐயம் பயம் மூடநம்பிக்கையில் முழுகாதவள் அவள்
ஒற்றுமையில் காக்கை கூட்டம் போல் அவள்
ஓரளவு கம்யூனிசம் தெரிந்தவள் அவள்
வீராங்கனை ஜான்சி ராணியை போன்றவள் அவள்
ஔடதம் கோபக்காரி அச்சமில்லாதவள் பயமில்லாதவள் அவள்....
பார்தனில் பாசத்தோடு வானம்பாடி பறவைகளை போல் வாழ்பவள் அவள்
அவளே என்னவள்... ❤
சி.ருசாந்
தி/மூ/ கிளிவெட்டி மகாவித்தியாலயம்
தரம்.....13
ஊர்,,,,தங்கநகர்
கிளிவெட்டி
திருகோணமலைமாவட்டம்
ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇