3) மாணவர்களது சிறுகதைகள் (2021/10/03)

3) மாணவர்களது சிறுகதைகள் (2021/10/03)


சிறுகதைகள்-01

ஏனைய அனைத்து சிறுகதைகளையும் பார்வையிட👇👇
              Click



சிறுகதை-01




 

சிறுமி ஏங்கும் அன்பு


சாலையில் நடக்கிறேன். ஒரு பூந்தோட்டத்தில் பறவைகளின் அழகிய ஓசையும் பவித்திரமான காற்று கடல் அலைச் சப்தம் இயற்கையின் ஆர்ப்பரிக்கும் அழகும் தங்குதடையின்றி என் கண்களையும் மனதையும் கவர்கிறது. என்னை அறியாமல் பூந்தோட்டத்தில் நுழைகிறேன். பூக்களின் நடுவே வாடிப்போன பூமுகம்; அது ஒரு சிறுமி உடையது.அங்கு வைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டிருக்கிறாள். அவளுடைய முகத்தில் கவலைகள் தேங்கி கிடந்தன.அவருடைய உடைகள் கசங்கி, அழுக்கு படிந்திருந்தது. அவளுடைய உள்ளமும், உடலும் சோர்வாக இருந்தன.அவளுடன் பேச்சுக் கொடுத்தேன். இங்கே பாரம்மா. நீ யார்? இங்கு என்ன செய்கிறாய்? உன் பெற்றோர் எங்கே? என வினவிய போது அவள் பதில் பேச முடியாமல் விம்மி விம்மி அழுதாள். அவளை பார்க்க பரிதாபமாய் இருந்தாள். அவளை என் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். அவளுக்காக உடைகள் வாங்கி அவளிடம் கொடுத்தேன்.அவள் குளித்து விட்டு வந்த பிறகு அவள் பெற்றோர் பற்றி பேச்சு கொடுத்தேன். அவள் எதுவும் பேச முன்வரவில்லை. அதன் பிறகு அவளிடம் எதுவும் கேட்கவில்லபோமௌனங்களாக ஓர் இரு நாட்கள் கடந்தன.அவள் முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. அவளை என் நண்பன் குமரன் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். அங்கு குமரனும் அவன் மனைவியும் அவர்களின் 3 குழந்தைகளும் மட்டுமே இருக்கின்றனர். அவர்கள் தாய் , தந்தையிடம் தங்கள் குறும்புத்தனத்தயும்,அன்பினயும் வெளிப்படுத்தும் அழகினைப் பார்த்து பிரம்மிப்பில் ஆழ்ந்து இருந்தேன். குமரனின் மகன் ஒரு மிட்டாய் போத்தலை எடுத்து வந்து" அப்பா! இதை திறந்து கொடுங்கலேன்"என்றான்.குமரன் திறப்பது போல நடித்து மகன் இதை திறக்க முடியவில்லை என்றான்.அவன் போத்தலை வாங்கி அப்பா இந்த சாதாரண போத்தலை திறக்க‌ முடியவில்லை என்றால் நீங்கள் என்ன அப்பா! என்றான். அதற்கு அந்த‌ சிறுமி பகீர் என்று சிரித்தாள்.பிறகு என்ன நினைத்தாலோ விம்மி விம்மி அழுதாள். அவளை இருக அணைத்து வினவிய போது அவள் தன் கதையை கூரலானாள்.என் குருவிக்கூடு மிகவும் சிறியது. ‌அம்மா, அப்பா,அக்கா, கைக்குழந்தையான தம்பி;அன்பிகுடும்பத்தாரை விளங்கிய அற்புதமான குடும்பம். முகத்தில் சிரிப்புக்கும், சந்தோஷத்துக்கும் பஞ்சமில்லை. அழகான வாழ்க்கை அழகாய் போய்க் கொண்டிருந்தது.ஒரு நாள் ஓரு கார்ப்பயணம் வேகமாய் ஒரு லொரி எதுவும் நினைவில்லை. கண்கள் மெல்ல மெல்ல திறந்தது. என்னை சுற்றி இரத்த வெள்ளம். எங்கள் கார் தலைகீழாய் கிடந்தது. தம்பி அழுது கொண்டிருந்தான். அம்மா, அப்பா, அக்கா நல்ல உறக்கம் போல என நினைத்து. அம்மாவை உலுக்கினேன்.அவர் கண்களை திறக்கவில்லை. உதவிக்கு ஆள் தேடி நெடும் தூரம் சென்றேன். யாரும் இன்றி‌ மீண்டு வந்தேன். என் குடும்பத்தாரை காணவில்லை‌‌ அங்கு இருந்தவர்களை வினவினேன். காவல் நிலைய‌ அதிகாரிகள் அவர்களை கொண்டு சென்றது தெரிந்தது. செய்வது அறியாமல் பூந்தோட்டத்தில் நுழைந்தேன் என்றாள். என் வீட்டுக்கு வந்தோம். அவள் என் கைகளை இருக பற்றிக்கொண்டு என் தம்பி எனக்கு வேண்டும் என்றாள். மருத்து பேச முடியவில்லை. அலைந்து திரிந்து ஒரு ஆஸ்ரமத்தில் அவள் தம்பியை கண்டு என்னுடன் அழைத்துச் சென்றேன். அவள்‌ புன்னகையால் பூரித்து அவள் தம்பியை இருக முத்தமிட்டாள்.அவர்களை பார்க்க கண்களில்‌ நீர் ஊற்றாய் எடுத்து.மாதங்கள் கழிந்தன வாழ்க்கை வண்ணமானது அவர்கள் என் வாழ்க்கையானார்கள்.


G.safra,

 Gr.12,

Trincomalee,

Rottawewa.





சிறுகதை-02



சித்தியின் பாசம்


லக்ஷ்மி... லக்ஷ்மி... 🗣️ உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க கொஞ்சம் வா என்ற சரஸ்வதியின் குரல் கேட்டு பாப்பாத்திகளுக்கு🪴 நீர் ஊற்றிக் கொண்டிருந்த பாக்கியலட்சுமி நிமிர்ந்து பார்த்தாள்🙂. 


 ஆனால் சரஸ்வதி அழைத்தது தனக்கு பின் அமர்ந்து இருந்த மகாலட்சுமியை என்று உணர்ந்ததும் பூவை🌺 மலர் போல் மலர்ந்த முகம் தொட்டாற்சுருங்கியைப் போல் வாடிப்போனது🥺.


பாக்கியலட்சுமி அந்த அன்னை முதியோர் இல்லத்திற்கு வந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிறது மாதாமாதம் பணம் வருமே தவிர அவளைப் பார்க்க யாரும் வருவதில்லை என்ற சகிக்க முடியாத உண்மையை உணர்தவள்🙁 போல் அவளது அறையை நோக்கி நடந்தாள்.


லக்ஷ்மி...லக்ஷ்மி... மீண்டும் அதே வார்த்தை😞 முன்பு போல் ஏமாற மனமின்றி😒 லொக்கு லொக்கு என இருமியவளாக நடந்தாள். பாக்கியலட்சுமி சற்று நில் என்ற குரல் அவள் காதை வந்தடைந்தது அந்த முதியோர் இல்லத்தில் பாக்கியலட்சுமி என வேறு யாரும் இல்லை என அவள் அறிந்ததே தன்னைதான் கூப்பிடுகிறார்கள் என்று நிரூபணமானதால் அங்கேயே நின்று திம்பிப் பார்த்தாள். அவளை அழைத்தது மகாலட்சுமி. மகாலட்சுமியின் வாய் காது வரை நீளுமளவு சிரித்தாலும்☺️ அவளது கண்ணில் ஒரு சோகம் இருப்பதை உணர்ந்தாள்.


மகாலட்சுமி பாக்கியலட்சுமியின் அருகில் வந்து" பாக்கியம் என்ற மகன் என்னை பார்க்க வந்தான் ஏன் தெரியுமா எனக்கு பேரப்பிள்ளை🤱🏻 பிறந்திருக்கு என்ற பேரப்பிள்ளை அப்படியே அவன்தான் " என்று கூறி மகிழ்ந்தாள்😇.


பாக்கியலட்சுமியின் மனதிலும் அவளது மகன் பேரப்பிள்ளைகளின் நினைவு ஊசலாடியது சற்று நேரம் அதிலேயே திகைத்திருந்தவள் பாக்கியம்...பாக்கியம்...🗣️ என்ற மகாவின் குரல் கேட்டு நினைவுக்கு வந்தாள். பாக்கியம் என்ன அப்படி பெரிய யோசனை என்று கேட்டால் மகாலட்சுமி. அதுவா என்ட மகன்ட நினைவு வந்திருச்சு என்று முதுமைச்சுருக்கமும் சோகச்சுருக்கமும்😕 முகத்தில் ஒருங்கே அமைய கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டாள்.


இரவில் தூங்கச் செல்ல தயாரான மகாலட்சுமி வெளியே பாக்கியலட்சுமி தனியாக அமர்ந்து இருப்பதை கண்டு அங்கு சென்று பாக்கியம் என்ன மகன்ட ஞாபகம் வந்துருச்சா எனக் கேட்டாள்😐. ஒருவிதமான ஏக்கத்துடன்😒 மகாவை பார்த்தாள் பாக்கியலட்சுமி. மகா அவளருகே அமர்ந்து அவளது கையை இறுக்கமாக பற்றி அவளது வாழ்க்கை பற்றி கேட்டாள்🤕.


  தன் மனப்பாரமாவது குறையும் என என்னி அவளிடம் தன் கதையை கொட்டத் தொடங்கினாள்😞.



என்ட அப்பாட பெயர் சுப்பிரமணியம். அவர் பெரிய பிஸினஸ் மேன்🤵🏻‍♂. அவருக்கு வாரிசு நானும்🙎🏻‍♀️ அக்கா👭🏻 பார்வதியும் அண்ணா🧍🏻‍♂️ சிவாவும் தான் . வீட்டின் கடைக்குட்டி எல்லோருக்கும் என் மேல் பிரியம் அதிகம். எனக்கு 15வயதாக இருக்கும்போது அக்கா கார்டிரைவரோட ஓடிப்போயிட்டா .அப்பா அதிகம் ஜாதி, அந்தஸ்து பார்ப்பார் அதனால அப்பா அக்காவ தலைமுழுகிட்டார்🤕.


 என்னால அக்காவ பார்க்காம இருக்கவே முடியல. 3 வருடம் கழித்து நானும் என்னோட லவர்👩‍❤️‍💋‍👨 சுரேஷும் கார்ல போய்ட்டு இருந்தப்போ கார் வாகனநெரிசல்ல மாட்டிக்கிச்சு.அப்போ கார்ல🚗 இருந்து வெளியே போய் பார்த்தால் ரோட்டில் ஒரு பெண் அடிபட்டு இறந்து🧖🏻‍♀️ கிடந்தா அவவுக்கு பக்கத்தில் 2குழந்தைகள்👶🏻 அழுது கொண்டு இருந்தது. நான் பார்க்க போனபோது சுரேஷ் என்ன தடுத்தான். ஆனால் என் மனதில் ஏதோ பிசைந்து கொண்டிருந்தது. அவனது பிடியை உதறிவிட்டு போய் பார்த்தால்....😳😱😨


அக்கா.................😭😭😭😭😭😭😭😭😭😭

என்னால நம்ப முடியல என் அக்காவ அப்படி பார்ப்பேன் என்று நினைக்கவுவமில்லை .  


நான் அக்கா பசங்கல ஏற்றுக்கொண்டேன்👩‍👦‍👦.அக்காவ பத்தி விசாரிச்சதுல அக்காவ லவ் பண்ணினவன் அக்காவ ஏமாற்றி விட்டு போய் விட்டான் என்று தெரிந்தது. நான் அருணயும் ரவியயும் கூட்டிக்கொண்டு வீட்டுக்கு போனேன். அங்கே எனக்கு இன்னொரு அதிர்ச்சி😢 காத்திருந்தது. 


அப்பா அக்கா பசங்கல ஏத்துக்க மறுத்துட்டாரு நீ வருவதென்றால் மட்டும் உள்ளே வா😳 இந்த வீட்டில் கண்ட கண்ட நாய்களுக்கு எல்லாம் இடம் இல்லை🥺 என்று கூறி விட்டார்.   


என்னால எப்படி அவங்கள விட்டு விட்டு வர முடியும்😕. நான் சின்ன வயதில் அம்மாவ பறிகொடுத்த போது எனக்கு இன்னொரு அம்மாவா இருந்தது அக்கா இப்ப அக்கா பசங்கலுக்கு அந்த நிலைமை வரும் போது என்னால் எப்படி விட முடியும். நான் அவர்களை அழைத்ததுக்கொண்டு🤱🏻 சுரேஷ் வீட்டுக்கு சென்றேன் அங்கே இருந்தும் அதே பதில். மரத்தால் விழுந்தவனை மாடு குத்தியது போல் இருந்தது. 😞😞😞😞😞


அன்றிலிருந்து எனது வாழ்க்கை தலை கீழாய் பரண்டது. ஏசியிலும் பங்களாவிலும்🏬 வாழ்ந்த நான் கஷ்டத்திலும் குடிசையிலும்🛖 வாழத்துவங்கினேன்.

வீடுகளில் வீட்டு வேலை பார்த்தேன். கடை கடையாய் இடியப்பம்🍚 சுட்டு விற்றேன்.அக்கா பசங்கல இல்லை என் பசங்கல நல்லா படிக்க வைக்கனும்டு படாதபாடு பட்டேன். அன்று பல வேட்டைநாய்களுக்கும் பயப்பட்டு அன்று நடந்தவை சொற்களால் கூற முடியாதவை😫. பிறகு என் பசங்க படித்து அருண் அமேரிக்காவிற்கும் ரவி அவுஸ்திரேலியாவிலும் பெரிய வேலை பார்க்குராங்க ஆனா என்னை பார்க்க தான் யாரும் வருவதில்லை. 😞😞😞😞😞

நான் அவர்களுக்கு சித்தியாக இருக்கல்ல அம்மாவா தான் இருந்தேன். ஆனால்.......


அவர்கள் என்னை அநாதை என்று கூறி இங்கு கொண்டு வந்து விட்டு விட்டார்கள்😣 என்னை பார்க்கவும் வருவதில்லை எனக்கு அவர்கள்ட பணம்💵 வேணாம் அன்பு💔 மட்டும் இருந்தால் போதும்.......

என்று கூறி கைகளில் முகம் புதைத்து அழுதால் பாக்கியலட்சுமி....😭😭😭😭😭😭😭



தடங்......... 😦என்று பின் இருந்து வந்த ஓசையில் திம்பிப்பார்த்தார்கள் அந்த இரு மூதாட்டிகளும்


பாக்கியலட்சுமியின் அன்பு மைந்தர்கள் ஓடி வந்து அவளை கட்டியணைத்துக்கொண்டு🫂 அழுதனர்😢😭 அவர்கள் தழுதழுத்த குரலில் எங்களை மன்னித்துவிடுங்கள் அம்மா...நீங்கள் அநாதை அல்ல நாங்கள் தான் அநாதைகள்🥺 என்று அழுதனர். நான் இருக்கும் போது நீங்கள் அப்படி கூறக்கூடாது என ஆறுதல் கூறினாள் பாக்கியலட்சுமி. ஒவ்வொரு பிள்ளைகளும் தன் பெற்றோரை சரியாக கவனித்துக் கொண்டாலே போதும் அனைத்து முதியோர் இல்லங்களும் செயலற்றுப் போகும் என்ற உண்மையை நாங்கள் உணர்ந்து விட்டோம்😔 அம்மா விரைவில் உலகில் உள்ள அனைவரும் இதை உணர்வர் என்று கூறி பாக்கியலட்சுமியை அழைத்ததுச் சென்றனர் அவளது அன்பு மைந்தர்கள்....😊


தனக்கும் இப்படி ஒரு நாள் வராதா என வாயிலையே பார்த்துக்கொண்டு இருந்தாள் மகாலட்சுமி..............😕


  🌚 *முற்றும்* 🌚


NAME : ILMA YAKOOB ( *IMMAYA* )

SCHOOL: KULI /MADIGE MIDIYALA CENTRAL COLLEGE

AGE : 17

VILLAGE : MADIGE MIDIYALA

DISTRICT : KURUNEGALA



உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇


Contact : Click here 




கீழுள்ள Like இனை அழுத்தி ஆக்கங்கள் அனுப்பியவர்களை  ஊக்கப்படுத்துங்கள்.