Umar Fathima Mujeeba Poem

Umar Fathima Mujeeba Poem

 Umar Fathima Mujeeba கவிதை


என் தாயே!


என்ன பாவம் செய்தேனோ?

என்ன விட்டு

போனது ஏனோ?



பாவை பரிகொடுத்தவளாய்

பாலை வன பட்ட மரமாய்!

பட்ட வெயிலில் சுட்ட புழுவாய்!

தவிக்கிறேனே...

நானும் துடிக்கிறேனே....


பிணியில் நீ இருக்க

பணியில் நான் இருக்க உன்

பிணி நீங்கி எனக்கு

பணி புரியும்

உன் தொனியில்

எனை தாலாட்டும்

காலம் எப்போது?


காதலனுக்காய் காத்திருப்பர் பலர்

கணவனுக்காக காத்திருப்பர் சிலர்

காத்திருக்கிறேனே 

நானும் என் தாயின்

கைப்பிடிக்கவே!


சதி செய்தது யாரோ?

விதி வந்து விளையாட

மதி கெட்ட பெண்

மதியாய்

வானின் வெண்மதியை

குறை கூறி

வெறுத்துக் கிடக்கிறேன்.



காலம் கைகூடும்

கனவு நனவாகும்

கண்ணில் நீரோடு

நெஞ்சில் வழியோடு

காத்திருக்கிறேன்.


என் தாயின் கரம்

பற்றவே!


Umar Fathima Mujeeba

Km km al mazhar girls high national school

2021batch

Amprara(nintavur)




ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin