Aboosali Jesmiya சிறுகதை
சிதைந்து போன உள்ளம்.....
பாகம் 1
அது ஒரு கனாக் காலம்...
இரண்டு சகோதரனுக்கு அவள் மூத்த பிள்ளை. ராவியா எனும் பெயர் கொண்ட அவள் கருநிறதுடனும் பார்க்கின்ற நேரம் எல்லாம் புன் சிரிப்புடனும் ஜோலித்துக் கொண்டிருக்கும் முகசுபாவனை கொண்டவள் ராவியா..
அவள் அறிந்த வயதில் தன் மாமாவின் முகத்தை பார்த்தே வளர்ந்தவள்..
அவளது தாய் வறுமையின் காரணமாக தன் பிள்ளையான ராவியாவை தனது உடன்பிறப்பானே தம்பியிடமே ஒப்படைத்து விட்டுச் சென்றாள்..
அவள் ஒப்படைத்து செல்லும் போது ராவியா ஒரு வயது பால்குடி மறவாதே குழந்தை...
ராவியாவின் தந்தையோ அவள் வயிற்றில் இருக்கும் போதே தன் தாயை விட்டு பிரிந்து சென்று விட்டான்..
தந்தை இல்லாமலும் தாய் இல்லாமலும் தன் மாமாவின் அரவணைப்பில் வளர்ந்தள்..
ராவியாவின் தாய் தன்னுடைய பிள்ளை பால்குடி மறவாதே வயதில் அவளை விட்டு வந்து விட்டோம் என்பதை எண்ணியும் தனது கல்நெஞ்சக் கணவனை எண்ணியும் ஒவ்வொரு நாளும் அவளது உள்ளம் சிதையே..!!வெளிநாட்டிலே நான்கு
வருடங்களை கழித்து வீடு திரும்பினாள்..!!
அப்போது ராவியா ஐந்து வயது பூர்த்தியான சிறுமியாக இருந்தால்...
கன்றை பிரிந்தே கராம் பசு போல
தன் பிள்ளையை கண்டவுடனே கட்டியணைத்து அன்பு மழையை பொழிவித்தால்..
ராவியாவின் தாய் ஒரு இளம் பெண்ணாகவே இருந்தாள்.. அன்று ராவியா மட்டுமே அவளிற்கு பிள்ளை..
ரவியாவிற்கு ஐந்து வயதானே பின்பும் கூட அவளது தந்தை அவளை ஒரு முறையாவது பார்க்க வரவில்லை..!!
Written by:-Jazy💫
சிதைந்து போன உள்ளம்.....💔
பாகம் 2
காலங்கள் கடக்க ராவியாவும் பாடசாலை செல்லும் வயதிற்கு வந்ததால் அவளை பாலர் பாடசாலையில் அவளது தாய் சேர்த்தாள்...
அங்கு ராவியாவின் தோழிகள் தன் தந்தை தனக்கு பொருட்கள் வாங்கி கொடுப்பதாகவும், தன்னை கூட்டிக்கொண்டு கடைக்கு செல்வதாகவும்,
கூறும் வார்த்தைகள் அவள் மனதில்
ஆரம்பத்தில் சிறு தாக்கத்தினை ஏற்படுத்தினாலும் காலப்போக்கில் பெரும் தாக்கமாக மாறியது..!!
ராவியா தன் தாயிடம் தன் நண்பர்கள் தன்னிடம் இவ்வாறு கூறுவதையும், தன் தந்தை எங்கே என தன் தாயிடம் கேட்பதையும்,
இவ்வாறு ராவியா தன் தாயிடம் கேட்க்கும் போது அவளின் தாய் இதனை
எண்ணி மனமுவந்து போவதையும்
ராவியாவின் தாயின் சாகோதரர்கள் நோட்டம் இட்டார்கள்...
அன்று ராவியாவின் தாயிடம் அவளின் சகோதரர்கள் பேச்சுக் கொடுக்க தொடங்கினர்...
நீ இரண்டாவது திருமணம் செய்துகொள், அப்போது ராவியாவிற்கும் தந்தை கிடைத்தது போல் ஆகிவிடும்
உனக்கும் ஒரு துணை கிடைத்தால் எங்களுக்கும்
மன நிறைவாக
இருக்கும் என எடுத்துக் கூறிய போதும் ராவியாவின் தாய் அதனை மறுத்தாள்..
பின் ராவியாவின் தாயின் சகேதரர்கள் அவளுக்கு வலிக்கட்டயமாக இரண்டாவது திருமணத்தினை முடித்து வைத்தனர்...
இருந்த போதிலும் ராவியா அவரை தந்தை என கூப்பிடுவதை மறுத்தாள்..
அவளின் தாயின் வேண்டுகோளினால் தந்தையுடன் பழக ஆரம்பித்தாள்..!!
ஆரம்பத்தில் அவளின் இரண்டாவது தந்தை அவளுடன் அன்பாக அரவணைத்துக்கொண் டாலும்
காலப்போக்கில்
தனக்கு ஒரு குழந்தை பிறந்த உடனே ராவியாவுடன் இருந்த அன்பு படிப்படியாக குறையே ஆரம்பித்தது..!!
இவ்வாறு காலங்கள் செல்ல ராவியாவின் தாய்க்கு இரண்டு ஆண் பிள்ளைகள் கிடைத்தது..!!
ராவியா அந்த பிள்ளைகளுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தாள்..
இருந்த போதிலும் ராவியாவின் இரண்டாவது தந்தைக்கு ராவியாவின் மேல் வெறுப்பே உண்டாக ஆரம்பித்தது..
இதனை அறிந்த ராவியாவின் தாய் துடிதுடித்துப்போனாள்..!!
தன் பிள்ளையை எண்ணி..
இதனால் அவர்களிற்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட தொடங்கியது..
ராவியா விவரம் அறிந்த சிறுமியாக இருப்பதால் இவர்களிற்கிடையில் ஏற்பாடும் சண்டையினை பார்த்து பயப்படலானாள்..
தன் தாயிடம் எனக்கு இங்கே இருக்க விருப்பம் இல்லை என்னை மாமாவின் வீட்டிற்கே அனுப்புங்கள் என்று அழஆரம்பித்தாள்..!
செய்வதரியாது கூனிக் குறுகி போனாள் ராவியாவின் தாய்...
உண்மையில் ராவியாவிற்கு தந்தையின் அன்பு கிடைக்க வேண்டும் எனும் காரணத்தினால் தான் அவள் இரண்டாவது திருமணதிற்கு ஒப்புக்கொண்டதே....
காலம் இவ்வாறு கோலம் செய்யும் என அவள் கனவில் கூட நினைக்கவில்லை..!!
ராவியாவின் பிடிவாதத்தினையும் இரண்டாவது தந்தையின் நடவடிக்கையினையும் அறிந்த அவளது மாமா அவளை தன்னுடையே வீட்டிக்கே அழைத்துச் சென்று விட்டார்..!!
இருந்த போதும் ராவியாவின் இரண்டாவது தந்தை மாறவில்லை, முரட்டுதானமானவனாகவே இருந்தான்..!!
ஆனாலும்
தன்னுடைய பிள்ளைகளில் அளவில்லாதே அன்பு கொண்டவனாக இருந்தான்..
Written by:- jazy💫
சிதைந்து போன உள்ளம்...💔
பாகம் 3
வீட்டை விட்டு மாமாவின் வீட்டுக்குச் சென்ற ராவியாவினை எண்ணி எண்ணி அவளது தாய் அனுஅணுவாய் சிதைந்தாள்..!!
ராவியாவின் இரண்டாவது தந்தைக்கு தெரியாமல் தன் மகளை ஒழித்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டத்தை எண்ணி அளவில்லாத துன்பத்தை அடைந்தாள்
ராவியாவின் தாய்..!!
இதனால் இருவறுக்கிடையில் சின்ன சின்ன வாக்குவாதமாக ஆரம்பித்த சண்டை பெரிய பூகம்பமாகே மாறியது...
ராவியாவின் தாய் அவளின் இரண்டாவது தந்தையிடம் என பிள்ளை உன்பிள்ளை போல் பார்ப்பாய் என்ற ஒரே நோக்கதிற்காக மட்டுமே உன்னை திருமணம் செய்து கொண்டேன்..
ஆனால் நீ என் பிள்ளையை என்னிடம் இருந்தே பிரித்து விட்டாய்...
ஏற்கனவே தந்தையின் பாசம் இல்லாமல் தவிப்பவள் அவள் இப்போது தாயின் பாசமும் அவளிற்கு கிடைக்கவில்லை என்றால் அவள் சீரழிந்து விடுவாள்..!!
என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்..
இவ்வாறு சண்டைகளுடன் சில காலங்கள் கடக்க
அவளின் ஆண் பிள்ளைகள் இரண்டும் விவரம் அறிந்தவர்களாக மாறினார்கள்..!!
ராவியாவும் தன் இரண்டாம் தந்தைக்கு தெரியாமல் தன் சகோதரர்களை பார்க்க வருவதுண்டு...
அவர்களும் ராவியாவுடன்
நெருக்கமாகவே பழகுவார்கள்..!!
இந்த விடயம் ஒருநாள் தந்தைக்கு அறிய வந்ததால்..!!
கல் நெஞ்சம் கொண்ட அவனோ ராவியாவின் தாயிடம் சண்டையிட்டு தன் பிள்ளைகள் இரண்டையும் அவனுடன் அழைத்துச் சென்று அவனின் தாயின் வீட்டிலே வளர்க்கலானான்..!!
ராவியாவின் தாய்க்கு துன்பத்திற்கு மேல் துன்பம் அடிக்கி கொண்ட சென்றது..!!
Written by:-jazy💫
சிதைந்து போன உள்ளம்...💔
பாகம் 4
ராவியாவின் தாய் ராவியாவை தன் வீட்டிக்கு அழைத்து வந்துவிட்டாள்..!!
பிள்ளைகளுடன் சென்ற ராவியாவின் இரண்டாவது தந்தை தனது பிள்ளைகளை,
திரும்பவும் வீட்டிக்கு அழைத்து வரவும் இல்லை..!!
ராவியாவின் தாயோ தன்னுடையே பிள்ளைகள் தேடி அவனது தாயின் வீட்டிக்கு செல்ல
பிள்ளைகள் தாயை கண்டவுடன் அவளிடம் ஓடிவந்து கட்டியணைத்துக் கொண்டது..!!
இந்த சமயத்தில் ராவியாவின் இரண்டாம் தந்தை அவன் வீட்டில் இல்லை அவனது தாய் மாத்திரமே இருக்க..!
தன் இரண்டு பிள்ளைகளையும் அவளுடனே அழைத்துச் சென்று விட்டாள்..!!
தந்தையோ தன் இரு ஆண் மக்களின் மீது அதிக அன்பு கொண்டவனாக இருந்தமையால்..!
தன் தாயின் வீட்டில் நடந்த சம்பவத்தினை அறிந்து பிள்ளைகளை மீண்டும் அவனுடன் அழைத்துச் செல்வதற்கு அவளின் வீட்டிக்கு சென்றான்..!!
இவ்வாறு சென்று பிள்ளைகளை நானே வளர்க்கிறேன்.. என தந்தை கூற அதற்கு தாயோ மறுப்பு தெரிவிக்க
அது பொலிஸ் கேஸ் ஆக மாறியது...!!
பிள்ளைகள் தொடர்பில் வழக்கு தொடர்ந்து..
பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கின்ற வேளையிலே பிள்ளைகள் தாயிடம் இருப்பதே சிறந்தது, என்று நீதி மன்றமும் தாய்க்கு சார்பாக தீர்ப்பு வழங்கியது..!!
பிள்ளைகள் மீது தந்தை கொண்டிருக்கும் அதே அன்பினை பிள்ளைகளும் தன் தந்தையிடம் கொண்டிருந்தது..
Written by:- jazy💫
சிதைந்து போன உள்ளம்...💔
பாகம் 5
பிள்ளைகள் தாயின் பராமரிப்பில் இருக்க
தந்தையோ பிள்ளைகளை
அடிக்கடி காண்பதற்கு செல்வான்..!!
பிள்ளைகள்
தன்னை விட்டு பிரிந்து தாயின் பக்கமே முழுவதுமாக மாறிவிடும் எனும்
பயத்தினால்..
ஒரு நாள் பாடசாலை விடும் நேரத்திலே.. அங்கு சென்று
பிள்ளைகளை அழைத்துச் சென்றதை ஆசிரியர் ஒருவர் கண்ணுற்றிருந்தார்..!!
அவர்களின் தாய்க்கு தெரியாமல் இருவரையும் கூட்டிக்கொண்டு அவனின் தாயின் வீட்டிக்கு மீண்டும் சென்று விட்டான்..!!
கல் நெஞ்சம் கொண்ட தந்தை..
பாடசாலை விட்டு வீடு திரும்புவார்கள் என காத்திருந்தே தாய்
நேரம் சென்றும் பிள்ளைகள் வராததை பார்த்து
பாடசாளைக்கே சென்று விட்டாள்..!!
அங்கு ஆசிரியர் அவர்களின் தந்தை அவர்களை அழைத்துச் சென்றதாகே கூறியிருந்தார்..
தனது வீட்டிற்கு
கொண்டு சென்ற நாள் முதல்..
பிள்ளைகளின் உள்ளத்திலே அவர்களது தாயை பற்றியும் ராவியாவைப் பற்றியும் தவறான எண்ணங்களை வளர்க்க ஆரம்பித்தான்..
உங்களது தாய் மோசமானே குணம் கொண்டவள்..!!
நீங்கள் என் உயிர் போன்றவர்கள்..!!
என்று எல்லாம் பிஞ்சி உள்ளத்திலே தனது தாயை பற்றியே எண்ணங்களை நஞ்சாகே ஊட்டினான்...!!
அந்த எண்ணங்கள் மறு தவணையில்
நீதி மன்றிலே வேலை செய்ய ஆரம்பித்தது...
பிள்ளைகள் எங்களுக்கு தந்தையே வேண்டும்..
என அழத்தொடங்கிய நிலை அங்கிருந்த அனைவரையும் ஆச்சாரியத்திற்குள்ளாக்கியது..!!
எங்களது தந்தை அன்பானவர்..
எங்களுடன் மிகுந்த அன்பு கொண்டவர்..
எங்களது தாயோ எங்களின் மேல் அன்பு இல்லாதவர்.. நாங்கள் வேண்டாம் என்று ஒதுக்கி
தந்தையுடம் அனுப்பியவர்...!!
இவ்வாறு தன் பிள்ளைகள் கூற கேட்ட ராவியாவின் தாய் நீதிமன்று என்பதனையும் மறந்து சத்தம் இட்டு கத்தலானாள்...
நான் அப்படி பட்ட உள்ளம் கொண்டவள் அல்ல..
என கதறலானாள்..!!
இதனை கண்னுற்ற நீதிபதி பிள்ளைகள் தாயின் பராமறிப்பில் இருக்க தந்தை பிள்ளைகளை எந் நேரமும் சென்று பார்வையிடலாம்...
என்று மீண்டும் இறுதித் தீர்ப்பை வழங்கியது..!!
Written by:- jazy💫
சிதைந்து போன உள்ளம்....💔
பாகம் 6
இவ்வாறு பிள்ளைகள் தாயின் பராமரிப்பிலே இருந்த படியேயும்
....!!
தந்தையும் அவர்களை அடிக்கடி வந்து பார்க்கின்றே படியேயுமாய்..
காலங்கள் கடக்க.. பிள்ளைகளும் பெரியவர்களாய் வளர்ந்தனர்..!!
ராவியாவும் தன்னுடைய சாதாரண தர படிப்பை முடித்து விட்டு உயர்தர படிப்பை மேற்கொள்வதற்கு தயாரானாள்...
ராவியா படிப்பில் கெட்டிக்காரியாகவும் தன்னுடைய சுய மரியாதையை இழக்காதவளாகவும்
தன்னுடையே வாழ்க்கை பயணத்தை கடத்தினாள்..!!
அந்த வயது வரைக்கும் அவளுற்கும் தந்தையின் பாசம் என்பதே கிடைக்கேவில்லை...
அவளின் தந்தை கூட ஒரு முறையாவது அவளை காண வரவும் இல்லை..!!
அன்பு எனும் பேரில் வெறும் வேஷம் மட்டுமே கிடைத்தது... தந்தை எனும் கல்நெஞ்சம் கொண்டவர்களினால்....
அதுவரை காலமும் ராவியாவின் இரண்டாவது தந்தையும் ராவியாவின் தாயுடன் சேர்ந்து வாழவும் இல்லை...
பிரிந்தே தங்களது பிள்ளைகளை பராமரித்தனார்...
ராவியாவின் சாகோதரர்கள் அன்றும் ராவியா வேறு தந்தையின் பிள்ளை என்பதை அறியாமலே வளர்த்தாள் தன் பிள்ளைகளை...!!
உயர்தர படிப்பினையும் முடித்தவளாய் பெறுபேற்றிற்காகா காத்துக் கொண்டிருந்தவளுக்கு...
ஒரு நல்லஇடத்தில் இருந்து மணம் செய்து கொள்ள அழைப்பு வந்தது... இருந்தும் அவள் அதனை விரும்பவில்லை....
அவளின் தாயும் அவளை கட்டாயபடுத்தவில்லை..!!
சில தினங்களில் பரீட்சை பெருபேருகளும் வெளியாயது..!
அவள் ஆசைப்பட்ட மாதிரியே அவளிற்கு பல்கலைக்கழகமும் கிடைத்ததை எண்ணி பெரும் மகிழ்ச்சி மழையில் நனையலானாள்...!!
இருந்தும் அவள் மனதில் ஏதோ ஒரு ஏக்கம்.....
இதயத்தை தாரை வார்த்தது..💔
Written by:- jazy💫
சிதைந்து போன உள்ளம்...💔
பாகம் 7
அது தந்தையின் அன்பே.....
தன்னுடைய தந்தை தன்னுடன் இருந்திருப்பாரானாள் தன்னை பாராட்டி மகிழ்திருப்பார் தானே என்ற ஏக்கம் அவளிற்கு அந்த நேரத்தில் இருந்த போதிலும் !!
தான் தேவை இல்லை என்று நினைத்தே அவர் பிரிந்து சென்றார் எனும் கோபமும் அவள் உள் மனதிலே உறுத்திக் கொண்டு இருந்தது...
ராவியா மணமகள் ஆகும் நிலையை அடைந்ததால் அவளுக்கு திருமணமும் பேசினர்..
தன் தந்தையே அவளிற்கு திருமணத்தில் வலி ஆக இருக்க வேண்டும்
எனும் காரணத்தில் ராவியாவின் தந்தையை தேடி ராவியாவின் மாமா அவனது வீட்டிக்கு சென்றார்....
ஆனால் ராவியாவின் தந்தையோ அங்கில்லை..
ராவியாவிற்கு திருமணம் நடக்கவிருப்பத்தை அறிந்தே அவன் வேறு எங்கோ சென்று விட்டான்....
இதனை கண்னுற்ற போதே ராவியாவின் சஹோதரர்களுக்கு அறியக்கிடைத்தது...
ராவியாவின் தந்தை வேறு என்று!!
ஆச்சரியத்தில் ஆழ்ந்த போதிலும் அதனை நெடுநேரம் தொடர முடியாதிருந்தது அவர்களுக்கு..!!
காரணம் அவள் மணப்பெண்ணாக இருப்பதாலும்
நிறைய வேலைகளுக்கு அவர்கள் முகம்கொடுக்க வேண்டும் என்பதானாலும்... !!
எங்கு தேடியும் ராவியாவின் தந்தை கிடைக்கவில்லை அதனால் ராவியாவின் பெரிய தந்தையே அவளுக்கு வலி ஆகே நின்று திருமணத்தை சிறப்பாகே நடத்தி வைத்தார் !!
Written by:-jazy💫
சிதைந்து போன உள்ளம்......❤🩹
பாகம் 8
ராவியாவும் குடும்ப வாழ்வில் ஈடுபட..
அவளின் சகோதரர்கள் தன் தாயிடம் கேள்விகளை
ஏவுகனையாக தொடுக்க ஆரம்பிக்க..
தன் தாயோ நடந்த எல்லாவற்றையும் தன் பிள்ளைகளிடம் கூறிமுடித்தாள்...
இதனை அறிந்து அவர்களுக்கு ராவியாவின் தந்தை மேல் இருந்த கோவத்தை விட தன் தந்தை மீதே அதிக கோபாமும் வெறுப்பும் கொண்டவர்களாக !!
தன் தந்தை சந்திக்க வேண்டும் என இருவரும் புறப்பட்டு அவர்களின் தந்தையின் தாயின் வீட்டிக்கு சென்றார்கள்....
தந்தையோ அங்கு உறங்கிகொண்டிருக்கே
ஒரு உரத்த சத்தத்தில் அவரை அவர்கள் அழைக்க அவரும் வந்து !!
தன் பிள்ளைகள் தன்னை தேடி வந்துள்ளது என மகிழ்ச்சி கொண்டவராக..
உள்ளே வாருங்கள் என கூற நாங்கள் உள்ளே வர வரவில்லை...
உண்மையை அரியவே வந்தோம்..
என கூறி முடித்தார்கள்....
தங்களது சாகோதரி வேறு தந்தையின் பிள்ளை என்றாலும் ஒரு தாயின் பிள்ளைகள் தானே நாங்கள்
இதில் என்ன வேற்றுமை உங்களுக்கு...
தந்தை இல்லாத எங்கள் சாகோதரிக்கு நீங்கள் தானே தந்தை பின் எதற்காக இந்த நயவஞ்சகம்...
என வார்த்தைகளை தங்கள் தந்தையிடம் வீச அவரின் மனமும் மாறியது....
செய்த தவறை எண்ணி மனம் நொந்து கொண்டார்...
ராவியாவின் சகோதரர்களோ தன் தந்தையையும் கையுடனே தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர்...
செய்த தவறை எண்ணி ராவியாவிடம் மனம் நொந்து கொண்டார்...
மென்மை உள்ளம் கொண்ட ராவியாவோ
எதனையும் மனதில் கொள்ளாது...
செய்த அத்தனை துரோகங்களையும் மறந்தவளாய்
அவருடன் மன மகிழ்ச்சியடைந்து கொண்டாள்...
Written by:- jazy💫
சிதைந்து போன உள்ளம்
.....❤🩹
பாகம் 9
காலப்போக்கில் அவளுக்கு அழகானே இரு பெண் குழந்தைகளும் கிடைத்தது...
ராவியாவின் கணவனோ வேலை நிமிர்தம் வெளிநாடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் அவரும் வெளிநாட்டிக்கே சென்று விட்டார்...
ராவியாவின் இரண்டாவது தந்தை அரசாங்கே உத்தியோகத்தரகே இருந்த போதிலும் அவரின் வருமானம் வீட்டை காக்கவும் பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு போதாமையாகே இருந்ததனாலும் ராவியவே தேவை ஏற்படும் போது தனது சகோதரர்களுக்கு தேவையனே செலவீனத்தையும் கொடுப்பாள்...
ராவியாவின் இரண்டாவது தந்தை ராவியாவின் குழந்தைகள் மீதும் அதிக அன்பு கொண்டவராவும் மாறிவிட்டார்....
இவ்வாறு செல்வமும் செழிப்புமாய் அவர்கள் வாழ்க்கையினை கடத்த
ஒரு நாள் அலை பேசியில் இருந்து அரியப்படாதே நபர் ஒருவரின் அழைப்பு வர
அதனை முதலில் அழுத்திக் கொள்ளவில்லை...
இரண்டாவது முறையாகவும் அதே இலக்கம்...
யார் என்பதை அறிந்து கொள்வதற்காக அலைபேசியை அழுத்த...
மகள் எனும் குரல் !!
யார் நீங்கள் என இவள் வினவ நான் தான் உன் தந்தை !!
ராவியாவோ என்ன?? விளையாட்டு காட்டுகிரீர்களா... என கேட்க உண்மையில் நான் உன் தந்தை தான்
என அவரும் மீண்டும் கூற...
சீறிட்டு எழுந்தாள் ராவியா !!
எனக்கு தந்தை என்று ஒரு உறவே இல்லை...
நான் பிறக்க முன்பே அந்த உறவு என்னை விட்டு இறந்து விட்டது என்றும்....
இன்னும் சில வெஞ்சின வார்த்தைகளையும் பிரேயோகித்தவளாய் அலைபேசி அழைப்பை தூண்டித்து விட்டு....
அந்த இலக்கத்தையும் துண்டித்து விட்டாள்..
அவனின் அழைப்பு அவளிற்க்கு வேதனையே உண்டாக்கியது தவிர துளி அளவும் மகிழ்ச்சியை கொடுக்கவில்லை....
அன்று ராவியாவின் அருகில் தன் தந்தை இல்லை என்ற அவள் உள்ளத்தில் ஏற்பட்ட சிதைவும்...
இன்று எதற்காக தன்னை தொடர்புகொண்டார் எனும் எண்ணத்தினால் ஏற்பட்ட சிதைவும்....
நீங்காமல் தன் உள்ளதையே சிதைத்துகொண்டிருக்கிறது.........
"காலங்கள் மாறினாலும் சில காயங்கள் ஆறுவதில்லை"
சிறு குழந்தையாக இருக்கும் போது கிடைக்காத தந்தையின் அன்பு தான் தாய்மை அடைந்த பிறகு எதற்கு??
எனும் கேள்வியுடன்...
தன் மனதை ஆற்றிக்கொண்டு
தன் வாழ்க்கையை மெல்ல மெல்ல நகர்த்துகிறாள்..
*ராவியா* எனும் பாத்திர படைப்பு...!!
Written by:-Aboosali Jesmiya💫
Aboosali jesmiya
Advanced level,
Ak/Al-Irfan Ladies college,
Pottuvil
From:- pottuvil,
Ampara district.
ஏனைய அனைத்து சிறுகதைகளையும் பார்வையிட👇👇
உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇